காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 52

  • 8

அவன் பாக்கெட்டில் இருந்து  அந்த டிவைசை எடுத்தான் ஆர்தர்.

“ஒஹ்ஹ்.. மை காட்… இது ஜீ பீ எஸ் ட்ராக்கிங் டிவைஸ்…!!!!”

“என்ன அப்போ எப்போ வேணாலும் அவங்க இங்க வரக்கூடும்…” என்றாள் ஜெனி.

அதை கையில் எடுத்த கில்கமேஷ் ஓங்கி எறிந்து உடைக்க கையை தூக்கிய போது

“அவசரப்படாதே கில்கமேஷ்… ஜீ பீ எஸ்  ஒரே இடத்தில் அசையாமல் தன்னோட சிக்னலை காட்டியதும் தான் அவங்களுக்கு இவன் இறந்திருப்பான்னு சந்தேகம் வந்திருக்கும் நாம இதை உடைச்சிட்டா அது உறுதிப்படுத்துற மாதிரி ஆகிடும்…. சோ..”

“சோ…என்ன பண்ணலாம் எங்குற?” என ஆர்தர் கேட்டான்.

“இவனை இங்கேயே எங்காச்சும் ஒளிச்சி வெய்ச்சிட்டு நாம இந்த டிவைசை எடுத்துட்டு போய்டலாம்…” என்றாள்.

“சரி அப்போ அப்படியே பண்ணுவோம்..” என்றான் கில்கமேஷ்.

அவள் சொன்னது போல அங்கிருந்த பெட்டி ஒன்றை திறந்து லோகேஷை அதில் போட்டுவிட்டு ட்ராக்கிங் டிவைசை அவர்களுடன் எடுத்து கொண்டு முன்னேறி சென்றனர்.

“சேர், லோகேஷோட ஜீ பீ எஸ் வேலை செய்யுது” என்றான் ஒருவன்.

“என்ன! சரி அப்போ அவன் சாகல போல இருக்கு இப்போ அது எந்த பக்கம் காட்டுது?..”

“நாம இங்கிருந்து கொஞ்சம் லெப்ட் சைட் போகணும் அவன் இங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் இருக்கான்..”

***************

ராபர்ட் அந்த இரு சயின்டிஸ்ட் முன்னாடியும் மண்டியிட்டு நின்றான். அவன் பின்னாடி கைகள் கட்டப்பட்டு இருந்தன.

“நீ என்ன காரியம் பண்ணி இருக்கேன்னு உனக்கு தெரியுமா?” என்று கோபத்தோடு ஹேமா அவனிடம் கேட்டாள்.

சாரி…. என்னை மன்னிச்சிடுங்க. நான் இதை முன்னாடியே உங்க கிட்ட சொல்லி இருக்கணும்.  இதுக்காக நீங்க என்ன பனிஸ்மெண்ட் கொடுத்தாலும் அதை நான் ஏத்துக்க தயாரா இருக்கேன்.

என்றான் ராபர்ட்.

“நாங்க உன்னை எவ்வளவு நம்பினோம் இப்படி எங்களை ஏமாற்ற, பொய் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று ஜான் பேசினார்.

“நான் தான் என்ன நடந்தது என்று சொன்னேனே! என்னோட இந்த முடிவு உங்களுக்கு பிடிக்காதுன்னு நினைச்சேன்.” என்றான் ராபர்ட்.

“ஒஹ்ஹ்.. இவ்வளவு தான் நீ எங்களை புரிஞ்சிகிட்ட  லட்சணமா? நீ பண்ண காரியத்துக்கு என்ன தண்டனை தரலாம் என்று யோசிக்கிறேன். ஹனி….! நீங்களே சொல்லுங்க. இவனை என்ன பண்ணலாம் என்று” என ஹேமா கேட்க தான் வாயில் வைத்திருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து விட்டு அங்கு ஆப்பிள் வெட்ட வைத்திருக்கும் கத்தியை எடுத்தார்.

ராபர்ட் கண்ணில் மரணபயம் தொனித்தது.அவர் கத்தியை ஓங்கி வீசினார். “நோ…”அவன் கண்களை மூடிக்கொண்டு கத்தினான்.

*******************

மித்ரத் வந்த பகுதியில் ஒரு சிறு சலனம் கூட இல்ல.

“சேர், நம்ம பண்ணபோற இந்த எக்ஸ்பிரிமண்ட் மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா இந்த உலகத்திலேயே நாம தான் அதி பலசாலிகளா இருப்போம். அதோட… ஒட்டுமொத்த உலகத்தையும் ஆளுறவங்களா இருப்போம்…” என சொல்லிகொண்டு வந்தான்.

“ஷ்…. ஏதோ சத்தம் கேக்குது.” என்றான் மித்ரத் முன்னே இருந்த இருட்டை பார்த்து.

கதவில் இருந்து மாளிகையில் கொஞ்ச தூரம் மட்டும் வெளிச்சம் விரவி கிடந்தது. ஏனைய இடங்களுக்கு எல்லாம் பயன்படுத்தவென  மித்ரத், மற்றும் அவனோட இன்னொரு ஆள் சுரங்க வேலை செய்வோர் அணியும் தலைகவசத்தொட சேர்ந்த லைட்டை அணிந்து கொண்டனர். அதுவழியே நடந்த போது திடீரென ஏதோ ஒன்றில் மோதி கீழே விழுந்தான் கமாயு.

“என்னாச்சு.. எதுல மோதின?” என்ற கேள்வியோடு முன்னாடி திரும்பி தரையை பார்த்தால் ஏதோ ஒரு பறவையின் கால் போல இருந்தது.

ஒரு வேளை ஏதேனும் சிலையாக இருக்கும் என்றெண்ணி கீழே விழுந்தவனை தூக்கும் முயற்சியில் இருந்தான் மித்ரத் அப்போது இன்னொரு அசைவு சத்தம் அது என்னவோ சிறகுகளை விரிப்பதுபோல சத்தமாக இருந்தது. சந்தேகத்துடன் மித்ரத் அப்படியே அண்ணாந்து பார்த்தான். கமாயு தன்னை சுதாரித்து கொண்டு எழும்பி  அவன் பார்த்த அதே கோணத்தில்  பார்த்தான்.

“சார்…. என்னது இது…. ஐயோ… எவ்வளவு பெரிசு…”

அது ஒரு பெரிய ராஜாளி கழுகு…. வழமையான உருவ அளவை காட்டிலும் பன்மடங்கு பெரிது. மாளிகையின் பாவுகையை தொடும் அளவு உயரம். அதை பார்த்த மாத்திரத்திலேயே மித்ரத் மெது மெதுவாக அடிகளை பின்னாட்டி வைத்தான்.

“கமாயு!.. அவசரப்படாமல் கொஞ்சம் கொஞ்சமாக பின்னாடி வந்துடு.” என்று சொல்ல எச்சிலை விழுங்கி கொண்டு அவனும் பின்னாடி எட்டு வைத்தான். ஏற்கனவே விழுந்தவனுக்கு காலில் ஏற்பட்டிருந்த சுளுக்கால் மறுபடியும் தொப்பென கொண்டுபோய் விழ.

“ஷீட்….” மித்ரத் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தான். கழுகு கோபத்தோடு கீழே கிடந்தவனை ஒரே மிதி… அங்கேயே நசுங்கி செத்துப்போனான்.

மித்ரத், லோகேஷ் போலவெல்லாம் இல்ல. ரொம்ப புத்திசாலி மின் விளக்கை அனைத்து விட்டு அசையாமல் அப்படியே நின்றுகொண்டான்.

அதுவும் இருட்டில் பார்க்கமுடியாமல் அங்கும் இங்கும் சத்தம் எழுப்பி கொண்டே ஓடித்திரிந்தது. ஒரு செக்கன் அதற்கே தெரியாமல் மித்ரத் அருகில் மயிரிழையில் வந்து போனது. இந்த சத்தம் வேறு திசையில் சென்று கொண்டிருந்த கில்கமேஷ், ஆர்தர் மற்றும் ஜெனிக்கு கூட கேட்டது.

“அது என்னது???”

“அவங்க தான் கழுகு கடவுள் வையாகி… மித்ரத் மாட்டிக்கிட்டான் போல….” என்றான் கில்கமேஷ்.

“என்ன?”

“நாம இன்னும் உள்ளே போகவேண்டும் சீக்கிரம்.. “என்றான்.

“சரி”என்று சொல்லி அவன் பின்னாடியே சென்றனர் இவர்கள் இருவரும்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அவன் பாக்கெட்டில் இருந்து  அந்த டிவைசை எடுத்தான் ஆர்தர். “ஒஹ்ஹ்.. மை காட்… இது ஜீ பீ எஸ் ட்ராக்கிங் டிவைஸ்…!!!!” “என்ன அப்போ எப்போ வேணாலும் அவங்க இங்க வரக்கூடும்…” என்றாள் ஜெனி.…

அவன் பாக்கெட்டில் இருந்து  அந்த டிவைசை எடுத்தான் ஆர்தர். “ஒஹ்ஹ்.. மை காட்… இது ஜீ பீ எஸ் ட்ராக்கிங் டிவைஸ்…!!!!” “என்ன அப்போ எப்போ வேணாலும் அவங்க இங்க வரக்கூடும்…” என்றாள் ஜெனி.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *