திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 11

  • 9

வாணி” வெளியே வந்த தாதி ஒருவர் பெயர் சொல்லி அழைக்க, மகளை வாரியெடுத்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.

வைத்தியப் பரிசோசனைக்கு பிற்பாடு “பெரிதாக எதுவுமில்லை” என்ற பதில் தான் இவர்களை திருப்திப் படுத்திட்டு. தன் கைவிரல்களை இருகப் பற்றிக் கொண்டிருந்த மகளின் கன்னத்தை வருடி விட்டவனாய் வீட்டுக்கு அழைத்து வந்தான் சுந்தர்.

“டெடி இன்னக்கி எங்கயும் போக வேணாம்” நொடிக்கு நொடி தன் மகள் அதையே சொல்லிக் கொண்டிருக்க வத்சலாவின் நினைப்பை முழுதுமாய் மறந்து மகளுடன் பொழுதைக் கழித்தான்.

இங்கு சுந்தர் தன்னை பொருட்படுத்தாமல், கோவமாய் விட்டுச் சென்ற வலியும், எத்தனையோ தடவை அவள் அழைப்பு செய்தும் மொபைலை துண்டித்து விட்டதுமில்லாமல் மீண்டும் ஒரு தடவையாவது அவளுக்கு அழைப்பு செய்யாத வேதனையும் வத்சலாவுக்கு ஆழ்ந்த கவலையாயிருக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுது முடித்தாள். வயிற்றில் கைவைத்து தனக்கிருக்கும் ஒரே ஆறுதலான தன் பிள்ளையுடன் பேசிக் கொண்டிருந்தவாறே தூங்கி விட்டாள். அன்புக்கு அடிமையாகி சுந்தருக்கு வாழ்க்கை பட்டவள் அதே அன்புக்காய் தவித்துக் கொண்டிருந்தாள்.

அங்கு இங்கு என்று இரு குடும்பங்களையும் சமாளிக்கும் அளவுக்கு முடியாமல் பெரும் அவஸ்தையாய் இருந்தது சுந்தருக்கு. இப்படியே இவர்களின் வாழ்க்கை நகர வத்சலா ஒரு பிள்ளைக்கு தாயானாள். தான் தாயாகியும் தன்னை கவனிக்க, தன் விடயங்களை கரிசனையோடு பார்க்க தன் தாய், தனக்கென்ற உறவினர்கள் என யாரும் இல்லாமல் மிகவுமே அல்லல்  கொண்டாள். இந்தத் தனிமை அவளை பாடாய்ப் படுத்தியது.

“ஏங்க உங்க அம்மாவுக்கு சரி வர சொல்ல ஏலுமே…” கேட்கக் கூடாதென்றிருந்தாலும் கேட்டு விட்டாள்.

ஆனால் சுந்தர் அவளின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்போ எல்லாம் என் மேல பிரியம் இல்ல உங்களுக்கு. என்ன, நான் சொல்றதுகள வாங்கிக்கவே மாட்டீங்க, உன் அம்மா ஞாபகம் வருது எனக்கு” சின்னவள் போல் தேம்பித் தேம்பி அழுதவளின் வார்த்தைகள் அவனை சங்கடப் படுத்த, “அப்படி இல்லம்மா” என்ற ஒற்றை வார்த்தையோடு மனைவியை வாரி அணைத்துக் கொண்டான்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

வாணி” வெளியே வந்த தாதி ஒருவர் பெயர் சொல்லி அழைக்க, மகளை வாரியெடுத்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர். வைத்தியப் பரிசோசனைக்கு பிற்பாடு “பெரிதாக எதுவுமில்லை” என்ற பதில் தான் இவர்களை திருப்திப் படுத்திட்டு.…

வாணி” வெளியே வந்த தாதி ஒருவர் பெயர் சொல்லி அழைக்க, மகளை வாரியெடுத்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர். வைத்தியப் பரிசோசனைக்கு பிற்பாடு “பெரிதாக எதுவுமில்லை” என்ற பதில் தான் இவர்களை திருப்திப் படுத்திட்டு.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *