காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 63

  • 15

திடீரென இப்படி என்கிடு கில்கமேஷை அடிப்பான் என்று யாருமே நினைக்கவில்லை..

“எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அதுவே நடந்திடுச்சே” என்று விக்டர் சொல்ல என்கிடுவுக்கு பின்னாடி நின்று சிரித்து கொண்டிருந்தான் மித்ரத்.

இந்த அதிர்ச்சியை கில்கமேஷால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கூடவே என்கிடு விட்ட குத்தில் நிலைகுலைந்து போய் கிடந்தான். அப்போது மித்ரத்,

“அவங்க எல்லோரையும் கொன்னுடுங்க” என்று சொல்ல மறுபடியும் துப்பாக்கிகளை தூக்கி கொண்டு அவர்கள் ஓடிவர தூரத்தில் வாகன சத்தம் அதிகரித்து வந்தது . திடீரென ஆய்வுகூடத்தின் முன் கதவை ,கண்ணாடித்தடையை எல்லாம் உடைத்து கொண்டு மீரா வேனை எடுத்து கொண்டு உள்ளே வர, உடனே டிடானியா வேனின் கதவை திறந்து எல்லோரையும் அழைத்தாள்.

“சீக்கிரம் எல்லோரும் வந்து ஏறிக்கங்க”என்றதும்

ஆர்தரும் ராபர்ட்டும் எப்படியோ கில்கமேஷை இழுத்து கொண்டு வண்டியில் ஏறினர். ஜெனி ராபர்ட்டின் அப்பா அம்மா இருவரையும் இழுத்து கொண்டாள். எப்படியோ எல்லோரும் வேனில் ஏறிக்கொண்டதும் மீரா சட்டன துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டு வண்டியை  வெளியே எடுத்தாள்.

மித்ரத்தின் ஆட்கள் பின்னாடியே ஓடிவர வண்டியின் பின்பக்க கண்ணாடியில் கைவைத்து கொண்டே கில்கமேஷ் தன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தூரமாகி கொண்டிருக்கும் என்கிடுவை பார்த்தபடியே வர. மீராவின் வேகத்தால் அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு  தப்பித்து மறைந்தனர்.

*****************

10 நிமிடங்கள் கழிந்தன…

“மீரா,என்ன நீ சும்மா ரூட் தெரியாம எங்க போய்ட்டு இருக்கே?”என்று விக்டர் கேட்டான்.

“இப்போதைக்கு எங்க போறோம் என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு தூரம் தள்ளி தப்பிச்சு போறோம் என்பது தான் முக்கியம்.”

“அது சரிதான்.. அவன் ரொம்ப மோசமானவன்… நாம தப்பினது பெரிய விஷயம்… ஆமா.. நீங்கல்லாம் எப்படி திடீரென அங்க வந்தீங்க?”என்று ஹேமா டிடானியா கிட்ட கேட்டாள்.

காடுபோன்ற ஒரு பகுதிக்குள் வேனை செலுத்தினாள் மீரா.. அப்படியே ஒரு மறைவான இடம்பார்த்து நிறுத்தி கொண்டாள். கில்கமேஷை சமாதானம் செய்யும் வகையில் ஜெனி அவன் கூடவே இருந்தாள்.

“நான் சுரங்கவழியா உள்ளே போனனே.. அது ஒரு சுரங்க அறை. அதுவும் அசையும் அறை..”என்றான் விக்டர்.

“என்ன அசையும் அறையா?”என்று ஆர்தர் கேட்க

“ஹ்ம்ம்   உங்களை மித்ரத் கடத்தி கிட்டு வந்ததும்… நாங்க மூணுபேரும் பின்னாடியே வந்தோம். உள்ளே வரத்துக்காக விக்டர் ஒரு சுரங்க வழியை கண்டுபிடிச்சு வந்தான் சட்டென பார்த்தால் அதை காணும்.” என்றாள் மீரா.

அது புது டெக்னாலஜி… ஒவ்வொரு10 நிமிஷத்துக்கு ஒரு முறை அது  தன்னாலே மூடிக்கிட்டு ஆய்வு கூடத்தின் மறுபக்கத்துக்கு போய்டும். கீழே இருந்த ரகசிய அறையில்  இருந்து லேப்பின் ஹாலுக்கு ஒரு படிக்கட்டு இருந்தது.. அதோட அங்க சில புத்தகங்கள் அதோட சில களிமண் குறிப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தன.

என்றான் விக்டர்..

“என்ன சொல்றே.. அதுல என்ன போட்டு இருந்தது…?”என்று கேட்டாள் டிடானியா.

“நாம மித்ரத்தை ரொம்ப சாதாரணமாக நினைச்சிட்டோம்… ஆனா அவன் போட்டிருக்குற மொத்த பிளானும் ரொம்ப… ரொம்ப ஆபத்தானது… அப்போதான் அந்த உண்மை எனக்கு தெரிஞ்சது…” என்றான் விக்டர்.

இப்போது கில்கமேஷும் இவர்கள் பேச்சை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தான்.

“என்கிடு உயிர் ரகசியத்தை பற்றி இதுவரை நாம கேகே வுக்கு மட்டும் தான் தெரியும் என்னு நினைச்சோம். ஆனா… ஊர்நஷிப் என்ற ஒரு படகோட்டிக்கு தெரிஞ்சி இருக்கு… அவன் எழுதின குறிப்புகளை தான் அவன் பரம்பரை வாரிசுகளான இந்த கழுகு டெட்டோ போட்ட கூட்டம் காலம்காலமா பாதுகாத்து இப்போ இருக்குற மித்ரத் அதை ட்ரான்ஸ்லெட் பண்ணி தன்னோட பிளானை போட்டு இருக்கான்.”

என்றான் விக்டர்.

“என்ன அப்போ நாம கெஸ் பண்ணினது கரெக்ட் தான்.” என்றான் ஆர்தர் ராபர்ட் மற்றும் ஜெனியை பார்த்து.

“சரி அப்போ மித்ரத்தோட உண்மையான திட்டம் என்ன?”என்று கேட்டான் கேகே..

விக்டர் அதையும் சொல்ல தயாரானான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

திடீரென இப்படி என்கிடு கில்கமேஷை அடிப்பான் என்று யாருமே நினைக்கவில்லை.. “எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அதுவே நடந்திடுச்சே” என்று விக்டர் சொல்ல என்கிடுவுக்கு பின்னாடி நின்று சிரித்து கொண்டிருந்தான் மித்ரத். இந்த…

திடீரென இப்படி என்கிடு கில்கமேஷை அடிப்பான் என்று யாருமே நினைக்கவில்லை.. “எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அதுவே நடந்திடுச்சே” என்று விக்டர் சொல்ல என்கிடுவுக்கு பின்னாடி நின்று சிரித்து கொண்டிருந்தான் மித்ரத். இந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *