சிறகுடைந்த சிட்டுக்கள்

  • 15

சிறுவர் தினத்தை ஒட்டிய ஓர் ஞாபகமூட்டல்

உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. மின்விசிறி எவ்வளவு விரைவாக சுழல்கிறதோ அதையும் தாண்டித் தான் இப் பொன்னான காலங்கள் சென்று நகர்ந்துகொண்டிருக்கின்றன. இயந்திர வாழ்க்கையான இவ்யுகத்தில் ஒவ்வோர் உள்ளமும் எதிர்பார்ப்பது அரவணைப்புடன் கூடிய அன்பைத்தான் என்பதில் யாருக்கும்  மாறுபாடில்லை.

தன்குடும்பம் தனக்காகவும் செயற்பட வேண்டும், அது எனக்கானதாயும் இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு உள்ளத்தினதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பாகும். எதிர்பார்ப்புக்கள் கூடிய இவ்வுலகில் பிள்ளைகள் அதிகம் பெற்றோரையும் பெற்றோர்கள் அதிகம் பிள்ளையையும் தேடுவது ஆச்சரியமொன்றல்ல.

வேலைப்பழு, நேரச்சுருக்கம் காரணமாக  அநேக குழந்தைகள் பெற்றோர்களின் கவனிப்பில்  இருந்து ஒருபடி தள்ளிவிடப்பட்டவர்களாக   இருக்கின்றமை இன்றைய நவீன உலகின் நிலைப்பாடாகும். ஆதிகாலம் தொட்டு பெற்றோரை புறந்தள்ளிவிட்ட குழந்தைகள் இருக்க இன்று ஒரு படி  மாறி முன்னேறி கவனிப்பாறற்ற குழந்தைகள் என்கின்ற அவலம் தோன்றியுள்ளது.

பெற்றோரின் கைத்தொலைபேசி மோகமும் அதிகரித்த பண அவாவும் குழந்தைகளை அரவணைத்து கொஞ்சிப் பேசிட வேண்டிய நேரத்தை குறைத்து  “டே கெயார்” களில் தங்கவைக்கச் சொல்லிக்கொடுக்கிறது.

சிறு குழந்தை முதல் வளர்ந்த பெரியவள் வரை தன் பெற்றோர் தம்முடன் நேரம்கழிக்க ஆசைப்படுவதை பெற்றோர் புரிந்து நடக்கும் வரை  குழந்தைவளர்ப்பு முழுமை பெறாது என்பது   ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.

பணத்தை விட பாசத்துக்காய் துடிக்கும் குழந்தைச் செல்வங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு  எதிர்காலச் சொத்துக்கள் இனிமேலாவது  பாதுகாக்கப்பட வேண்டுமென்பது என்றும் என் அவாவாகும்.

Binth Ameen
SEUSL

சிறுவர் தினத்தை ஒட்டிய ஓர் ஞாபகமூட்டல் உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. மின்விசிறி எவ்வளவு விரைவாக சுழல்கிறதோ அதையும் தாண்டித் தான் இப் பொன்னான காலங்கள் சென்று நகர்ந்துகொண்டிருக்கின்றன. இயந்திர வாழ்க்கையான இவ்யுகத்தில் ஒவ்வோர்…

சிறுவர் தினத்தை ஒட்டிய ஓர் ஞாபகமூட்டல் உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. மின்விசிறி எவ்வளவு விரைவாக சுழல்கிறதோ அதையும் தாண்டித் தான் இப் பொன்னான காலங்கள் சென்று நகர்ந்துகொண்டிருக்கின்றன. இயந்திர வாழ்க்கையான இவ்யுகத்தில் ஒவ்வோர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *