மிஹ்ராஜும், அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடமும்.

  • 17

இஸ்லாமியரின் அரபு மாதங்களில் 7 வது மாதமே ரஜப் ஆகும். இம் மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. இம் மாதத்தில் நினைவு கூறப்படும் ஓர் முக்கிய நிகழ்வே மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணம். இப் பயணத்தில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வுடன் உரையாடும் மிகப் பெரும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அவ்வுரையாடலே நாம் தினமும் ஐவேளை தொழுகையில் ஓதும் அத்தஹியத்தாகும்.

அவ்வுரையாடலில் அல்லாஹ் ரஸூலுல்லாஹ்வுக்கு தனது சாந்தி, சமாதனம், அருள் கிடைக்க வேண்டும் என்று தன் வாழ்த்தை தெரிவிக்கின்றான். அதற்கு பதிலளிக்கும் ரஸூலுல்லாஹ் அவர்கள் தன் உம்மத்திற்கும் அதே சாந்தி, சமாதனம், அருள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

இதில் நமது அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பிரதான பாடம் இதுதான். அரசியல்வாதிகளே உமக்கு எந்த அமைச்சுப் பதவி, பட்டமம் கிடைத்தாலும் நமது இலங்கை சமுகத்தை மறந்து சுகம் அனுபவிக்காமல், ரஸுலுல்லாஹ்வைப் போன்று உமக்கு கீழ் உள்ள மக்களுக்கும் அதன் பிரதிபலனை வழங்க வேண்டும். இதுதான் சிறந்த ஓர் அரசியல்வாதியிடம் உள்ள பண்பாகும்.

Ibnu Asad

இஸ்லாமியரின் அரபு மாதங்களில் 7 வது மாதமே ரஜப் ஆகும். இம் மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. இம் மாதத்தில் நினைவு கூறப்படும் ஓர் முக்கிய நிகழ்வே மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணம். இப்…

இஸ்லாமியரின் அரபு மாதங்களில் 7 வது மாதமே ரஜப் ஆகும். இம் மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. இம் மாதத்தில் நினைவு கூறப்படும் ஓர் முக்கிய நிகழ்வே மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணம். இப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *