தங்கத்தை தவணை முறையில் கடனாக வாங்கலாமா?

  • 7

கேள்வி: உம்மு யாசிர் எனும் பெண்மணி வினவுகிறார் ” – அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக- தவணை முறையில் கடனாக தங்கத்தை கொள்வனவுசெய்ய முடியுமா?

பதில்: அல்லாமா ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் ரஹிமஹுல்லாஹ் பதிலளிக்கிறார்கள்: “தவணை முறையில் வாங்குவது இரண்டு விதமாக அமைகிறது.

தங்கத்தை பணத்திற்கு வாங்குவதாகும்

இச்சந்தர்ப்பத்தில் குறித்த வியாபார இடத்தில் இருவரும் பிரிவதற்கு முன் பணத்தை கையளித்து தங்கத்தை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

உதாரணமாக ஒரு பெண் 5000 ரியாலுக்கு தங்க ஆபரணங்களை வாங்குவதாயின் அவள் அதே இடத்தில் 5000 ரியாலை கொடுப்பது கட்டாயமாகும். தவணை முறையில் அதனை அவள் வாங்குவது ஆகுமாகாது; ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கத்தை வெள்ளிக்கு விற்கும் விடயத்தில் பின்வருமாறு கூறினார்கள்: “இந்த வகைகள் (தங்கத்திற்கு வெள்ளியை விற்றால்) வேறுபட்டால் உடனுக்குடன் பணம் வழங்கப்படும் பட்சத்தில் நீங்கள் விரும்பியவாறு விற்றுக்கொள்ளுங்கள்”

தங்கத்தை பணமல்லாமல் வேறொரு பொருளுக்கு விற்றல்

உதாரணமாக ஒரு பெண் தங்கத்தை கோதுமை மாவுக்கு பதிலாக பின்வருமாறு கூறி வாங்குகிறாள் : “நான் உன்னிடமிருந்து இத்தங்கத்தை ஒவ்வொரு மாதமும் 10 கொத்துகள் கோதுமை மா வழங்கும் அடிப்படையில் நூறு கொத்து கோதுமை மாவுக்கு பதிலாக வாங்குகிறேன்” இவ்வாறு வாங்குவது ஆகும் ஏனெனில் இங்கு வியாபாரம் இரண்டு பொருட்களுக்கிடையில் அமைந்துள்ளது, ஆதலால் சற்று குறைத்து கொடுக்கவும் முடியும்.

இதன் பிரகாரம் தங்கத்திற்கு தங்கம் விற்கப்படும் சந்தர்ப்பத்தில் இரண்டு விடயங்கள் இருப்பது அவசியம் ஒன்று: நிறை சமமாக இருத்தல் இரண்டாவது: அங்கிருந்து பிரிவதற்கு முன் பணத்தை ஒப்படைத்துவிட்டு தங்கத்தை பெற்றுக்கொள்ளல்.

தங்கத்தை வெள்ளி அல்லது பணத்திற்கு பதிலாக விற்கும் போது ஒரு விடயம் கட்டாயம் இருப்பது அவசியமாகும் அது இருவரும் குறித்த வியாபார பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திலிருந்து பிரிவதற்கு முன் விற்பவர் பணத்தையும் வாங்குபவர் தங்கத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறில்லாமல் வேறு பொருட்களுக்காக தங்கம் விற்கப்படுமாயின் அப்பொருளை தவணை முறையில் கொடுப்பதிலோ காலம் தாமதித்து கொடுப்பதிலோ குற்றமில்லை.”

தரவு: நூறுன் அலத்தர்ப் (டேப்: 354)
தமிழாக்கம்: அஸ்(z)ஹான் ஹனீபா
வியூகம் வெளியீட்டு மையம்

கேள்வி: உம்மு யாசிர் எனும் பெண்மணி வினவுகிறார் ” – அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக- தவணை முறையில் கடனாக தங்கத்தை கொள்வனவுசெய்ய முடியுமா? பதில்: அல்லாமா ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்…

கேள்வி: உம்மு யாசிர் எனும் பெண்மணி வினவுகிறார் ” – அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக- தவணை முறையில் கடனாக தங்கத்தை கொள்வனவுசெய்ய முடியுமா? பதில்: அல்லாமா ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *