வாக்களிக்க முன் சிந்தியுங்கள்!

  • 10

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்! எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து முஸ்லிம்கள் மீதான சூளுறைகள் குறைந்து முஸ்லிம் சமூகத்தின் காவலர்களாக நாம் மாறுவோம் என பல தரப்பினரும் பேசிக்கொண்டு இருக்கும் தருனம் இது உண்மையிலேயே முஸ்லிம் சமூகம் விளிப்போடு இருக்க வேண்டிய தருணத்திலிருக்கிறோம்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டு சுமூகமான நிலை தோன்றியுள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருக்க நம்மை சுற்றிவர என்ன என்னமோ நடந்துக்கொண்டிருக்கிறது. திடீரென ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட எங்கு சென்றாலும் அரசியல் தான் பேசப்படுகிறது. நம் முஸ்லிம் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

எனினும் எம்மை திட்டிதீர்த்த ஒரு சமூகம் தற்போது வாசல் வரை வருவதன் மர்மம் என்ன? அனைத்து வேட்பாளர்களும் ஒரே நாடு ஒரே நீதி என்று கூறுவதன் மர்மம் என்ன? வரலாற்றில் முதல் தடவையாக அதிகமான வேட்பாளர்கள் களமிரங்கியுள்ளதன் மர்மம் என்ன? ஆட்சி பீடம் ஏற முடியாது என தெரிந்தும் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிரங்கியிருப்பதன் மர்மம் தான் என்ன? யார் ஆட்சி பீடம் ஏறினால் யார் யாருக்கு பிரயோஜனம்? மொட்டுக்கட்சயின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன? அதில் மர்மமான விபரங்கள் எவை? அன்னம் கட்சி திசை காட்டி கட்சி மற்றும் ஏனிகட்சிகளினதும் வாக்குறுதிகள் எவ்வாறானவை. தேர்தலின் முடிவு எத்தகையதாக இருந்தால் நம் சமூகத்திற்கு நன்மை நடக்கும்??? இப்படி பல கேள்விகளை தொடுத்து விடைகண்ட பின்பு தான் நாம் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யவேண்டும்.

அன்பானவர்களே! இதுவரை உங்கள் சுயநலத்திற்காக வாக்கு வழங்கிருப்பீர்கள். இந்த ஒரு முறை நம் முஸ்லிம் சமுக நலன்கருதி உங்கள் வாக்குகளை வழங்குங்கள். அல்லாஹ் சிறந்த தெளிவை வழங்க பிரார்த்திக்கிறேன்.

பஸீம் இப்னு ரஸூல்.
நிகவெரட்டிய.
வியூகம் வெளியீட்டு மையம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்! எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து முஸ்லிம்கள் மீதான சூளுறைகள் குறைந்து முஸ்லிம் சமூகத்தின் காவலர்களாக நாம் மாறுவோம் என பல தரப்பினரும் பேசிக்கொண்டு…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்! எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து முஸ்லிம்கள் மீதான சூளுறைகள் குறைந்து முஸ்லிம் சமூகத்தின் காவலர்களாக நாம் மாறுவோம் என பல தரப்பினரும் பேசிக்கொண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *