எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 10

  • 9

“பிள்ள ருஷா ரெடி ஆகிடியா?”

“உம்மா… உம்மா… ம்ஹும்… ம்ஹும்…”

“என்ன? ருஷா”

“பயமா இருக்குமா,…”

மகளின் வெக்க பயத்தை உணர்ந்த தாய்  சிரித்து கொண்டு

“ரெடி ஆகு பிள்ள…”

“ம்ம் சரி…”

என்று முகத்தை கழுவி விட்டு ஒழுங்காக  தன் முகம் வரை இஸ்லாம் பொண் பார்க்கும் போது விதித்த விதி முறைகளை மதித்து தன் முக்காட்டை தன் நிறம், தன் உண்மை தோற்றம் வெளிப்படும் வகையில் அணிந்து கொண்டாள். பவுடர் போடாத ருஷாவை பார்த்து,

“கொஞ்சம் பவுடர் போடுமா…”

என்று சுபைதா சொல்ல,

“என்ன பார்க்க தானே மா வந்திருக்காங்க ஏன் நான் என் இறைவன் படைத்த அழகை விட பொய் அழக காட்ட மா ???”

“ம்ம் உன்ட பேசி மிஞ்சுகிறது கஷ்டம்.சரி வா”

என்று அழைத்து போக,

“மாஷா அல்லாஹ்”

என்று மனதால் உரைத்த நிசாத் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டான். எல்லாரும் வந்த ருஷாவை வரவேற்று பாத்திமா அருகில் அமர வைத்தார்கள். ருஷா அழகிலும் அழகு, ஒழுக்கத்திலும் அழகு என்று உணர்ந்த பாத்திமா தன் தம்பி நிசாத்தை பார்த்து கண் ஜாடை காட்டினாள்.

இருவரிடனும் சம்மதம் கேட்க நிசாத் ஆம் என்று தாமதிக்காமல் சொல்ல, ருஷா தன் தாயை நோக்கி தன் தாயின் விருப்பத்துடன் தன் விருப்பத்தை தெரிவித்தாள். சித்தி அண்டியின் கணவரும் பாரூக்கும்  ஆண்கள் சார்பில் பேச திருமண திகதி ருஷாவின் சம்மதத்தோடு குறிக்கப்பட்டது.

“அப்போ சரி பிள்ள இந்த மாசம் இருபதாம் திகதி கல்யாணம் வெச்சிப்பம்”

என்று முடிவாக,

“சுபைதா நாங்க கல்யாண செலவ பொறுப்பு எடுக்கம். சீதனம் மார்க்கம் அனுமதிக்காத ஒன்று அதலாம் நாங்க கேட்க போறல்ல. நிசாத்துக்கு இதலாம் பிடிக்காது”

என்று சாரா சொல்லி விட்டு,

“நிசாத்…”

“ஓஹ் ம்மா…”

“ருஷா கிட்ட மஹர் என்ன வேணும்டு கேளுங்க”

என்று சாரா சொல்ல நிசாத் நிமிர்ந்து பொண்ணை பார்த்தான்.

ருஷா குனிந்த தலை நிமிராது வெக்கத்தில் அமைதி காத்தாள்.

“ருஷா சொல்லுங்க மா”

என்று பாத்திமா கேட்க  பேச பேச்சு வரவில்லை அவளுக்கு,

“ருஷா…”

என்று தாய் அழைக்க

“என்ன மா…”

“மஹர் என்ன எதிர்  பார்கிங்க…”

“அவர் விரும்பி தாரதை எடுக்கன்மா…”

ருஷாவின் பண்பான பணிவான பேச்சை கேட்ட அனைவரும் பெருமித பட்டார்கள். நிசாத்திற்கும் அவள் பணிவு பிடித்தாலும் அவள் வெக்கத்தில் சொல்கின்றாள். அவளின் எதிர் பார்ப்பில் தான் மஹர் கொடுக்க வேண்டும், மார்க்க பெண் உரிமையை நான் சரியாக செய்ய வேண்டும் என்று மனதில் நிய்யத் வைத்துக் கொண்டான். பேச்சுக்கள் முடிவாகி, சுபைதாவின் உபசாரத்துடன் ருஷாவின் வீட்டை விட்டு அனைவரும்  சந்தோசத்துடன் விடை பெற்றார்கள்…

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“பிள்ள ருஷா ரெடி ஆகிடியா?” “உம்மா… உம்மா… ம்ஹும்… ம்ஹும்…” “என்ன? ருஷா” “பயமா இருக்குமா,…” மகளின் வெக்க பயத்தை உணர்ந்த தாய்  சிரித்து கொண்டு “ரெடி ஆகு பிள்ள…” “ம்ம் சரி…” என்று…

“பிள்ள ருஷா ரெடி ஆகிடியா?” “உம்மா… உம்மா… ம்ஹும்… ம்ஹும்…” “என்ன? ருஷா” “பயமா இருக்குமா,…” மகளின் வெக்க பயத்தை உணர்ந்த தாய்  சிரித்து கொண்டு “ரெடி ஆகு பிள்ள…” “ம்ம் சரி…” என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *