எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 11

  • 12

ருஷாவின் வீட்டை விட்டு சென்றவர்கள் தங்கள் வீட்டை அடைந்து சித்தி அண்டியும் அவரின் கணவரும் அவர்களிள் வீட்டுக்கு செல்ல, பாத்திமாவும் பாரூக்கும் திருமணத்திற்கு இன்னும் பத்து நாள் இருப்பதனால் இங்கேயே தங்கி வேலைகளை முடிக்க நினைத்தனர்.

நிசாத்தும் பாரூக்கும் மஹ்ரிப் தொழ மஸ்ஜித்துக்கு செல்ல, தாய் சாராவும் பாத்திமாவும் வீட்டில் தொழுது விட்டு இஷா அதான் சொல்ல இஷாவையும் அவ்வாறே தொழுது விட்டு இரவு சாப்பாட்டை இருவரும் சேர்ந்து சமைத்து கொண்டு இருந்தனர். அத்தீக்கும் அசந்து தூங்கி கொண்டு இருந்தான்.

ஜமாத்துடன் இஷாவையும் முடித்து விட்டு இருவரும் வீட்டிற்கு வர, இரவு சாப்பாட்டிற்கு அனைவரும் அமர பாத்திமா சாப்பாட்டை பரிமாறி விட்டு அத்தீக்குக்கும் ஊட்டி கொண்டு தானும் சாப்பிட்டாள். அப்போது பாத்திமா பேச்சை நிசாத்திடம் நகர்த்தினாள்..

“நிசாத்…”

“ம்ம்… சொல்லுங்க ராத்தா….”

“நீ ருஷாட்ட கூட கொஞ்சம் பேசு நிசாத், அந்த பிள்ள உம்மாட விருப்பத்துக்கு சொன்னிச்சா என்ன என்று தெரியா, நீ கொஞ்சம் பேசி பாரு. நானும் கொஞ்சம் பேச இருக்கன். நான் பேசிட்டு தாரன்.”

என்று சொல்ல, எப்படி பேச வேண்டும் என்று ஏங்கிய நிசாத்துக்கு இது ஒரு சந்தர்ப்பமாய் அமைந்திட அவனும் அவளிடம் மஹர் விசயம் பேச வேண்டும்  என்று எண்ணி,

“ஆஹ் சரி ராத்தா….”

என்று ராத்தாவின் பேச்சுக்கு பதில் கொடுத்தான். பாத்திமாவும் தம்பியின் உள்ளக ஆசை தெரியாது தன் பேச்சுக்கு மதிப்பு தந்துவிட்டான்  என்று அழகிய புன்முறுவல் தன் தம்பி, தாய், கணவர் எல்லோரையும் பார்த்து பெருமையாய் பூத்தாள். சாப்பிட்டு முடித்ததும் பாத்திமா ருஷாவின் நம்பருக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

ரிங் ரிங்…..

இரவு சப்பாட்டை சாப்பிட்டு விட்டு ருஷா தன் அறையில் யோசனையோடு தன் மனதோடு சில கேள்விகளை தொடுத்து கொண்டு இருந்தாள்.

என்ன தான் எனக்கு திருமணம் முடிவாகிய சந்தோசம் இருந்தாலும் நிசாத் எப்படியானவர், திருமணத்தின் பின் தன் தாய் சகோதரனை பார்க்க விடுவாரா? தன் தாய் கஷ்ட பட்டு படிக்க வைத்த படிப்புக்கு ஆதாரம் தருவாரா?  தனக்கு இருக்கும் படிப்பின் இலக்குக்கு தடைவிதிப்பாரா?

இப்படி பல  கேள்விகள் அவள் மனதை உருக்கி கொண்டு இருந்தது.

மீண்டும் ச்சீ… அவர் நல்லவர்… அவரின் குடும்பம் நல்லம். மார்க்க அடிப்படைல நடந்துகிடாங்க என்றும் நிசாத்துக்கு அவள் ஆதரவை மனதால் வழங்கி கொண்டு  இருக்கையில் பக்கத்தில் இருந்த போன் மணி சத்தம் கேட்டு திணிக்கிட்டு போனைப் பார்த்தாள்.

என்ன இந்த நேரம் புது நம்பர் யாரா இருக்கும் என்று போனை தன் தாயிடம் கொடுத்தாள்.

“ஹெலோ அஸ்ஸலாமு அலைக்கும்…”

பதில் ஸலாத்தோடு…

“அண்டி, நான் பாத்திமா.”

“ஆஹ் சொல்லுங்க பிள்ள,”

“ருஷா எங்க அண்டி அவகிட கொடுகிங்களா? கொஞ்சம் பேசணும்,”

“ஆஹ் சரிம்மா இன்னா கொடுக்கன்,”

“ருஷா…”

“என்ன மா…”

“இன்னா பிள்ள, பாத்திமா மதினி கோள் பண்ணிருக்காங்க…”

என்று சொல்ல, பயத்தில் மிதந்த அவளின் இதய துடிப்பை அவளால் உணர முடிந்தது. தாய் தந்த போனை நடுக்கத்தோடு வாங்கி…

“ஹெலோ அஸ்ஸலாமு அலைக்கும்”

என்று பதட்டத்தோடு பேச ஆரம்பித்தாள்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

ருஷாவின் வீட்டை விட்டு சென்றவர்கள் தங்கள் வீட்டை அடைந்து சித்தி அண்டியும் அவரின் கணவரும் அவர்களிள் வீட்டுக்கு செல்ல, பாத்திமாவும் பாரூக்கும் திருமணத்திற்கு இன்னும் பத்து நாள் இருப்பதனால் இங்கேயே தங்கி வேலைகளை முடிக்க…

ருஷாவின் வீட்டை விட்டு சென்றவர்கள் தங்கள் வீட்டை அடைந்து சித்தி அண்டியும் அவரின் கணவரும் அவர்களிள் வீட்டுக்கு செல்ல, பாத்திமாவும் பாரூக்கும் திருமணத்திற்கு இன்னும் பத்து நாள் இருப்பதனால் இங்கேயே தங்கி வேலைகளை முடிக்க…

One thought on “எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 11

  1. I’m not that much of a online reader to be honest but your sites really nice, keep it up! I’ll go ahead and bookmark your website to come back in the future. Cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *