அதிகாரம் வீட்டில் பொருத்தமற்றது

  • 7

நாம் வேலை செய்யும் தளங்களில் நிறுவன சொந்தக்காரராக இருக்கலாம், முகாமையாளராக இருக்கலாம், பெரும்பெரும் பதவிகளை வகிப்பவர்களாக இருக்கலாம். அங்கு அதிகார கதிரையில் அமர்ந்துகொண்டு தமக்கு கீழுள்ள ஊழியர்களை சற்று கடினமாக அதட்டுவது, கண்டிப்பது, ஏசுவது, சட்டம் போடுவது, ஏவல் விடுப்பது என்பனவாறு காரசாரமாக நடந்துகொள்வது போன்று வீட்டிலுள்ளவர்களிடம் நடந்துகொள்வது உசிதமற்றது.

வீட்டிலுள்ளவர்கள் எமக்கு பெற்றோராக இருக்கலாம், மூத்த சகோதர சகோதரிகளாக இருக்கலாம், மகள் மகன்களாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம். இவ்வாறான மூத்த உறவுகளிடம் காரியாலய அதிகார நாற்காலியை பயன்படுத்துவது குடும்பம் சுக்குநூறாக அமைய வழிவகுத்துவிடும்.

பதவி, பணம் என்பவை நேற்றுக் கிடைத்தவை. இவ்விரண்டின் மோகத்தால் கர்வம் தலைக்கேறி வேலைத்தளத்தில் உள்ளவர்களை அடக்கியாளுவது போன்று குடும்பத்தை நடத்துவது அரக்க குணத்தின் வெளிப்பாடாகும்.

இஸ்லாம் தமக்கு கீழ் வேலைசெய்யும் ஊழியர்களுடனே நல்ல முறையில் நடக்குமாறு வழிகாட்டியிருக்கும் போது அவர்கள் மீது முதலாளி/ மேல் அதிகாரி எனும் அதிகாரத்தை உபயோகித்து கீழ்த்தரமாக நடந்துகொள்வது இஸ்லாமிய பண்புகளை தட்டிக்கழிப்பதற்கு சமமாகும்.

பெற்றோர், உற்றார் உறவினருக்கு செலவழிப்பதன் காரணமாக அவர்களை நினைத்தவாறு ஆட்டிப்படைப்பதற்கு இஸ்லாம் மாத்திரமல்ல எவ்வித மத, நாட்டு சட்டங்களும் அனுமதிக்கவில்லை.

மகன் உழைக்கும் பணத்தை அவனது சட்டைப்பையிலிருந்து தேவைக்கு தக்கவாறு தந்தை தாராளமாக எடுக்கவும் இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு இஸ்லாம் அனைவருக்கும் சலுகைகள், உரிமைகளை வழங்கியிருக்கும் போது அவர்களை தமது காரியாலய நினைப்பில் எல்லைமீறிச் சென்று அடக்கி அதிகாரம் செலுத்துவது மிருகத்தை விட கீழ்த்தரமான செயலாகும்.

ஆக அதிகாரம் வீட்டிலும், வெளியிலும் பொருத்தமற்றது. யாருடன் பழகுவதாயினும் மென்மையே மேலானது. உணர்வோம், திருந்துவோம்

அஸ்ஹான் ஹனீபா

நாம் வேலை செய்யும் தளங்களில் நிறுவன சொந்தக்காரராக இருக்கலாம், முகாமையாளராக இருக்கலாம், பெரும்பெரும் பதவிகளை வகிப்பவர்களாக இருக்கலாம். அங்கு அதிகார கதிரையில் அமர்ந்துகொண்டு தமக்கு கீழுள்ள ஊழியர்களை சற்று கடினமாக அதட்டுவது, கண்டிப்பது, ஏசுவது,…

நாம் வேலை செய்யும் தளங்களில் நிறுவன சொந்தக்காரராக இருக்கலாம், முகாமையாளராக இருக்கலாம், பெரும்பெரும் பதவிகளை வகிப்பவர்களாக இருக்கலாம். அங்கு அதிகார கதிரையில் அமர்ந்துகொண்டு தமக்கு கீழுள்ள ஊழியர்களை சற்று கடினமாக அதட்டுவது, கண்டிப்பது, ஏசுவது,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *