நாம் சடலங்கள் அல்ல

  • 9

நாம் வாழ ஒரு வாழ்க்கையை விரும்புகின்றோம். பெற்றோரோ, கணவன், மனைவியோ அல்லது உறவினர்களோ வேறொரு வாழ்க்கையே நாம் வாழ வேண்டும் என்று சிலவேளை விரும்புகின்றனர். அதனையே எமக்காக அவர்கள் வடிவமைக்கிறார்கள். அந்த வாழ்வே எமக்கு சிறப்பு என்றும் கூறப்படுகிறது. சிலவேளை அது ஓரளவு சரிப்படலாம். ஆனால் பலருக்கு அது முரண்படலாம். பல மனங்களால் அதை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கு அப்போது ஏற்பட்டு விடுகிறது. சிலவேளை எமது சப்தங்கள் ஊமையாகும். அதை தடுக்க முடியாது. அச் சந்தர்ப்பத்தில் மொழி சிலவேளை அதிகாரமற்ற ஒன்றதாகி விடும்.

பல வாழ்க்கைகள் ஆடைகள் போர்த்தப்பட்ட உடம்பைப் போல உள்ளன. சடலங்களுக்கும் அதைத்தானே செய்கிறார்கள். உடம்பை வாழ வைக்கப் பார்க்கிறார்கள். உடம்புக்குள் துடிக்கும் மனசு பற்றிய உணர்வு அங்கு இருக்காது. சிலவேளை மனசொன்று இல்லாதது போல் பலரது செயல்கள் உள்ளன. அப்போதே எம்மை நாம் சடலமாகக் காண்கிறோம்.

உணர்வுகள், மனவெழுச்சிகள், ஆசைகள், விருப்புகள், கனவுகள் ஆகியன மற்றவர்களால் தீர்மானிக்கப்படுவதால் மனசு இருந்தால் என்ன..? இல்லாமல் போனால்தான் என்ன..? இவ் அவல நிலையால் ஆடை போர்த்ப்பட்ட சடலமாகவே பூமியின் மேற் தட்டில் பலர் வாழ நேரிடுகிறது. அதிலும் பெண்கள். வேடிக்கை என்ன வென்றால் அந்த சடலங்களுக்கு பெயர்களும் உறவுகளும் உள்ளன. மய்யத்து (இறந்தவர்)என்று அழைக்க மாட்டார்கள்.

எம்.ரிஸான் ஸெய்ன்.

நாம் வாழ ஒரு வாழ்க்கையை விரும்புகின்றோம். பெற்றோரோ, கணவன், மனைவியோ அல்லது உறவினர்களோ வேறொரு வாழ்க்கையே நாம் வாழ வேண்டும் என்று சிலவேளை விரும்புகின்றனர். அதனையே எமக்காக அவர்கள் வடிவமைக்கிறார்கள். அந்த வாழ்வே எமக்கு…

நாம் வாழ ஒரு வாழ்க்கையை விரும்புகின்றோம். பெற்றோரோ, கணவன், மனைவியோ அல்லது உறவினர்களோ வேறொரு வாழ்க்கையே நாம் வாழ வேண்டும் என்று சிலவேளை விரும்புகின்றனர். அதனையே எமக்காக அவர்கள் வடிவமைக்கிறார்கள். அந்த வாழ்வே எமக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *