காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 81

  • 9

ஜெனி தான் தூங்குவது போல பெட்சீட்டை எடுத்து இழுத்து முழுவதும் போர்த்திக்கொண்டு காதில் மாட்டி இருந்த டிவைஸை ஆன் செய்தாள். மறுபுறம் இவள் ஏதோ பொய்யான கதையை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என்றும் முடிவு வரை அதை கேட்டுவிட்டு அவளுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என எண்ணிக்கொண்டான்.. இது எதுவும் அறியாத மித்ரத்தின் ஆட்கள் இருவரது அறையில் இருந்த கேமராக்கள் மூலமாக தீவிர கண்காணிப்பில் மூழ்கி இருந்தனர்.

*******************

“ஜெனி! ஜெனி!”

“கில்கமேஷ்! அது நீதானா?”

என்றவளுக்கு அழுகை வந்துவிட்டது. அவனை சந்தித்த நாள் தொட்டு இவ்வளவு நீண்ட மணித்தியாலங்கள் கொண்ட பிரிவை அவர்கள் இருவரும் சந்தித்ததே இல்லை.

“ஜெனி, உன்னோட குரலுக்கு என்னாச்சு என்ன ஒருமாதிரி பேசுரே என்ன நடக்குது? எங்க இருக்கே? உனக்கு ஒன்னும் இல்லியே!”

என்று மூச்சுவிடாமல் கேள்விகளை வீசினான். ஒரு வகையில் இது அவளுக்கு ஆச்சர்யத்தையே வருவித்தது.

“ஆச்சரியமாக இருக்கே இத்தனை கேள்விகளில் ஒன்று கூட என்கிடு பற்றி கேட்கவே இல்லை. பேசுறது கில்கமேஷ் தானே!”

அவள் அப்படி கேட்டதும் விக்டர் கேட்ட கேள்வி திடீரென தோன்றி மறைந்தது. அவன் பேச்சு மூச்சின்றி அமைதியாக இருக்க ஜெனி,

“கில்கமேஷ்! நான் இங்கே முழுக்க கண்காணிப்பில் இருக்கிறேன். அதனால என்னால இப்போதைக்கு இப்படித்தான் பேசமுடியும். யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். மித்ரத் எங்கோ வெளிநாட்டு பயணம் போயிருக்கான். இன்னும் மூணு நாட்களில் வந்துடுவான். அதனால என்னால முடிஞ்ச அளவுக்கு என்கிடு கிட்ட எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி செய்வேன். கண்டிப்பாக உன்னோட பிரெண்ட் உனக்கு கிடைப்பான். நீ அமைதியா இருக்குறத பார்த்தா. உனக்கு நம்பிக்கை இல்ல போல இருக்கு கவலை படாத கிட்ட தட்ட எல்லா உண்மைகளையும் கேக்குற மனநிலையில் அவன் இருக்கான்.”

என்று ஜெனி சொன்னதும் அவனுக்கு உள்ளார சந்தோசம் ஏற்பட்டது.

“கேக்குறதுக்கே சந்தோசமா இருக்கு நீ சாதிப்பே என்று எங்களுக்கு தெரியும் நாங்க உங்க ரெண்டுபேருக்காகவும் காத்துகிட்டு இருக்கோம்.”

என்றான்.

“ஆமா விக்கி, டிடானியா எங்கே?”

“அவன் டிடானியாவ வீட்ல டிராப் பண்ண போயிருக்கான். நீ ஜாக்கிரதையா இரு உனக்கு ஏதாச்சும் பிரச்சினை என்றாள் உடனே ஃபோன் பண்ணு… நான் அங்க இருப்பேன்.”

என்றான்.அப்போது ஜெனி மனதில்,

“இந்த பிரச்சினை தீரப்போற நாளுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன் கில்கமேஷ் அன்னிக்கி தான் இந்த ஜெனிபர் உன்னை எந்த அளவு காதலிக்கிறேன் என்று நீ தெரிஞ்சிப்பே.”

என்று குறும்புன்னகையுடன் எண்ணிக்கொண்டாள்.

“ஜெனி! என்ன எதுவும் பேசாமல் இருக்கே..?”

என்று கில்கமேஷ் குரல் கேட்டு மீண்டாள்.

“என்னது?”

“நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் ஜெனி ஏனோ தெரியல்ல இப்பவே சொல்லிடனும் போல இருக்கு. அப்பறம் இதை என்னால சொல்ல முடியுமா என்று எனக்கு தெரியல்ல.” என்றான்.

“பரவால்ல… எதுவாக இருந்தாலும் சொல்லு…”

என்னும் போது கில்கமேஷ் தன்னுடைய காதலை அந்த மூன்று வார்த்தைகளில் சொல்லவும் ஜெனி அறையின் கதவுகள் திறக்கும் ஓசையும் ஒருமித்தன.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ஜெனி தான் தூங்குவது போல பெட்சீட்டை எடுத்து இழுத்து முழுவதும் போர்த்திக்கொண்டு காதில் மாட்டி இருந்த டிவைஸை ஆன் செய்தாள். மறுபுறம் இவள் ஏதோ பொய்யான கதையை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என்றும் முடிவு…

ஜெனி தான் தூங்குவது போல பெட்சீட்டை எடுத்து இழுத்து முழுவதும் போர்த்திக்கொண்டு காதில் மாட்டி இருந்த டிவைஸை ஆன் செய்தாள். மறுபுறம் இவள் ஏதோ பொய்யான கதையை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என்றும் முடிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *