காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 82

  • 8

மறுபுறம் இவள் ஏதோ கதவு திறக்கும் சத்தம் கேட்டு சட்டென காதில் இருந்த மெஷினை ஆஃப் பண்ணி விட்டு அதை பெட்சீட்டில் போட்டு புதைத்து விட்டு எழுந்து இரவு விளக்கை போட்டாள்.

“என்னது!!! என்கிடு நீங்க இங்க இந்த நேரம் என்ன பண்ணுறீங்க?”

என்று கேட்டாள். ஜெனி, அவன் தலையை பிடித்து கொண்டு ஏதோ ஆனவன் போல அங்கு சுவரோரம் சரிந்து கொண்டான்.

“என்கிடு.. உங்களுக்கு என்னாச்சு…. தலைவலியாக இருக்கணும். இருங்க உங்க ஆளுங்க யாராச்சும் கூப்பிர்றேன்.”

என்று பதற்றத்தில் அறையில் இருந்து வெளியேற பார்த்தவளை கையை பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“நீ சொன்ன கதையை கேட்டதில் இருந்து சரியா தூங்க முடியல்ல… ஏதோ அதுல வர்றமாதிரியே கனவா வருது. முடிவு என்னவென்று தெரியாத வரை என்னால தூங்க முடியாது.”

என்றான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

“லீஸா!!!!”

“ஆஹ்… சொல்லுறேன்… இருங்க.. எங்க விட்டேன்.”

என்றாள், இதனை அவதானித்து கொண்டிருந்த மித்ரத்தின் ஆட்கள் உடனே அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் அவன் விமானத்தில் இருந்தமையால் ஃபோன் ஸ்விச் ஆஃபில் இருந்தது.

“இங்க இவங்களுக்குள்ள ஏதோ நடக்குது சார் சொன்னது போல.. அந்த பொண்ணு மேல எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு பேசாம அவளை இப்பவே கொன்னுடலாம்.” என்றான் ஒருவன்.

“அறிவிருக்கா உனக்கு என்கிடு தான் அவ ரூமுக்கு போய் இருக்கான் அவன் மித்ரத் சார் சொல்றதை மட்டும் தான் கேட்பான். இப்போ போய் நாம அவளை ஏதாச்சும் பண்ணிட்டா அவ்வளவு தான் நாம யாரும் உயிரோட மிஞ்சமாட்டோம்.”

“அப்போ என்னதான் பண்ணுறது? இதை தொடர விடக்கூடாது. அவள் கில்கமேஷ் அனுப்பின ஆளாக இருந்தா இந்நேரம் எப்படியும் அவன் மனச மாத்துற வேலையில் தான் இருப்பா.”

“அவ ரொம்ப பாதிக்கப்பட்ட பொண்ணா இருக்கணும் என்று டாக்டரே சொன்னாரே ஒரு வேளை அந்த கதையை தான் சொல்றாளோ எனக்கு அப்படித்தான் தோணுது.”

“சரி சரி..விடு..எப்படியும் மித்ரத் சேர் வந்தா எல்லாம் சரியாகிடும்…”என்றான்.

*******************

திடீரென ஜெனியுடைய அழைப்பு துண்டிக்கப்பட்டதும் கில்கமேஷ் பதறிப்போனான். அந்த நேரத்திலேயே விக்டரும் வந்து சேர்ந்தான். கில்கமேஷின் நிலையை கண்டு ஏதோ கொஞ்சம் யூகித்தவனாக,

“ஜெனி கிட்ட இருந்து.. ஏதாச்சும்…”

“இப்போதான் அவ என்னோட பேசினா… ஆனா திடீரென கட் ஆகிடுச்சு…”

“என்ன சொன்னா.. அவளுக்கு ஏதும் பரோப்ளமா?..”

“இதுவரையில் இல்லை இனி தெரியாது மித்ரத் வெளிநாடு போய் இருக்கானாம். அதனால் எப்படியாவது என்கிடு கிட்ட உண்மையை எடுத்து சொல்லி புரியவைப்பேன் என்றாள்.”

“அப்பாடா அப்போ கவலையை விடு அவ முடிச்சிடுவா..”

என்றான். அதன் பின்னர் இருவரும் தூங்க சென்றுவிட்டனர். கில்கமேஷ் மனதில் தான் கடைசியாக சொன்னது அவள் காதுக்கு விழுந்திருக்காது என்றே தோன்றியது.

“அதை சொல்றதுக்கு ஒரு நேரம் கிடைக்காமலா போகும்.”

என்றெண்ணி கொண்டே தூங்கினான்.

*****************

“நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து தேவதாரு மரங்கள் நிறைந்த சூரிய கடவுளின் நாட்டுக்கு சென்று அங்கிருந்த கொடிய அரக்கன் ஹம்பாபாவை வதம் செய்தது வரலாராகவே உள்ளது.”

என்றாள்.

“நீ சொல்வதை எல்லாம் கேட்கவே வினோதமாக இருக்கு.”

என்றான்.

“கில்கமேஷ் மேல எஸ்தர் என்ற தேவதை ஆசை வைத்தாள். அவளது குணத்தை நன்றாக அறிந்தவன் என்கிடு அவள் ஆசைப்படுவபர்களை எல்லாம் அடிமையாக வைத்திருப்பவள். அதனால என்கிடு விஷயத்தை எடுத்து சொல்லி கில்கமேஷுக்கு புரிய வைத்தான்.”

“அப்போ கில்கமேஷ் அவளுக்கு கட்டுப்படலியா?”

“இல்ல.. அதனால கோபம் கொண்ட அவள் தன்னோட தேவலோக காளையை அவங்களுக்கு எதிராக அனுப்பி வைக்க இருவரும் சேர்ந்து அதை கொன்றுவிட்டனர்.”

“என்ன..”

“ஆமா இதனால பல தேவர்களுக்கு இருவர் மீதும் கோபம் ஏற்படவே அவர்களில் வலிமையான கடவுள் ஒருத்தர் ஒரு சாபத்தை விதித்தார்.”

“என்ன மாதிரியான சாபம் அது…”

“இருவரில் ஒருவர் இறக்கட்டும் என்று”

“சரி…கதையில் யாரு இறந்தது….”

“நீதான் என்கிடு..”

என்று ஜெனி சொன்னதும் அவனுக்கு அதிர்ச்சியோடு சிரிப்பும் வந்தது. அது ஜெனியை குழப்பியது.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

மறுபுறம் இவள் ஏதோ கதவு திறக்கும் சத்தம் கேட்டு சட்டென காதில் இருந்த மெஷினை ஆஃப் பண்ணி விட்டு அதை பெட்சீட்டில் போட்டு புதைத்து விட்டு எழுந்து இரவு விளக்கை போட்டாள். “என்னது!!! என்கிடு…

மறுபுறம் இவள் ஏதோ கதவு திறக்கும் சத்தம் கேட்டு சட்டென காதில் இருந்த மெஷினை ஆஃப் பண்ணி விட்டு அதை பெட்சீட்டில் போட்டு புதைத்து விட்டு எழுந்து இரவு விளக்கை போட்டாள். “என்னது!!! என்கிடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *