காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 83

  • 9

“நீங்கதானே இந்த கதையை கேட்க ஆவலாக வந்தீங்க இப்போ சிரிக்குறீங்க…”

“ஆமா… ஆவலோடு தான் வந்தேன். இவ்வளவு சுவாரஸ்யமான கதையா இருக்கும் என்று நினைக்கவே இல்லை. நீ ரொம்ப சாமர்த்தியசாலி என்னையே கொன்னுட்டே”

என்றான்.

“ஒஹ்ஹ் அதுதான் சிரிப்புக்கு காரணமா… சரி மீதி கதையையும் சொன்னால் தான் உங்களுக்கு உண்மை எது பொய் எதுன்னு புரியும் என்றாள்.”

எதிரியாக இருந்தாலும் ஒரு விதத்தில் என்கிடுவுக்கு லீஸாவை பிடித்து போனது. அவளுக்கு தண்டனை கொடுக்கிற எண்ணம் போய் அவளை தன்னுடன் வைத்து கொள்ளும் எண்ணம் உதித்திருந்தது. அவளது சாமர்த்தியம் அவனை வெகுவாக கவர்ந்தது.

“எனக்கு மூளைச்சலவை செய்ய பொருத்தமான புத்திசாலி பெண்ணொருதியை தான் கில்கமேஷ் அனுப்பி வைத்துள்ளான். இவள் என்னுடன் இருந்தால் நிச்சயமாக பல வெற்றிகளை அடைவேன். அவனை பற்றி இவளுக்கு அறியவைத்து உன்னை என் வழிக்கு கொண்டுவருவேன் லீஸா.”

என்று மனதில் எண்ணிக்கொண்டான்.

“அப்பறம் நான் செத்துட்டேன்.”

உங்களோட உயிர் நண்பனுக்கு உங்க இழப்பை கொஞ்சம் கூட தாங்கி கொள்ள முடியவில்லை. உங்களுக்காக ஊரே அழுதது. கில்கமேஷுக்கு மரணத்தை பார்த்து வெறுப்பு வந்தது. மரணத்தை வெல்லும் வழியை கண்டுபிடிக்க ஆசை பிறந்தது. உங்களை மறுபடியும் உயிரோட கொண்டுவர ஒரு நீண்ட பயணத்தை ஆரம்பித்தான். உங்க உடலை பாதுகாத்து வைக்க பல பணியாளர்களை நியமித்து குறுகிய நாட்களில் அந்த மாபெரும் மாளிகையை யூப்ரதீஸ் நதிக்கருகில் கட்டுவித்து அதை உயிர் பெற்று வரும் உங்களுக்கு பரிசாக தர எண்ணி இருந்தான். அதன்பின்னர் கில்கமேஷுடைய பயணம் தொடர்ந்தது. பல இடையூறு, பல கஷ்டங்களை தாண்டி சாவுக்கடலை கடந்தான். ஆதி பிதா உத்தினபிஷ்டை சந்தித்து உயிர் ரகசியத்தை கேட்டான். அறிந்தான்.

“ஒஹ்ஹ் இந்த கதை இப்போதான் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கு.”

என்றான்..

தன்னுடைய நாட்டுக்கு வருமுன் சிரஞ்சீவி வரத்தை பெற குகையில் தவமிருந்தான். ஆண்டுகள் உருண்டன, காலங்கள் கரைந்தன. எட்டாயிரம் வருடங்கள் கடந்து தான் எவ்வளவு காலம் தவமிருத்தோம் என்றே அறியாமல் கில்கமேஷ் இந்த உலகத்துக்கு வந்தான்.

“ஒஹ்ஹ்.. இந்த காலக்கணக்கு இப்போதான் எனக்கே கொஞ்சம் புரியுற மாதிரி இருக்கு.”

என்றான்.

“கதை இன்னும் முடியல்ல.”

“ஹம் சொல்லு.”

“அவனுக்கு சில நண்பர்கள் கிடைச்சாங்க. அவனும் புதிய உலகத்தை ஏற்றுக்கொண்டான். தன்னுடைய நண்பனை மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்ப அந்த மோதிரத்தையும் தகுந்த நேரத்தையும் தேடி அலைஞ்சான்.”

என்றதும் என்கிடு அவன் விரலில் இருந்த மோதிரத்தை வியப்புடன் பார்த்தான். ஜெனி சிரித்து விட்டு,

“இந்த மோதிரத்தை நியாபகம் இருக்கா….?”

என்று கேட்டாள். அவனுக்கு அது நியாபகத்தில் இல்லை. இருந்தாலும் அதை பார்க்கும் போதெல்லாம் யாரோ ஒரு பெண் மனதில் தோன்றி மறைந்தாள். திடீரென தலைவலி ஏற்பட்டது.

“இது.. இது… மித்ரத் எனக்கு தந்திருக்க வேண்டும். சரியா நியாபகத்தில் இல்லை.”

என்றான் ஒரே குழப்பத்துடன், இதுதான் தருணம் என்கிடுவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் திரும்புவது போல் தெரிந்தது.

“அப்படித்தான் கொஞ்சம் யோசித்து பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கு நியாபகம் வரும் முயற்சி பண்ணுங்க.”

என்றாள் ஜெனி. அவனுக்கு மண்டையில் ஓங்கி அடித்தது போல வலி எடுத்தது. சமாளிக்க முடியவில்லை. அங்கேயேமயங்கி விழ ஜெனி பயந்து போனாள். நேரம் நள்ளிரவு 1.30 தாண்டி இருக்க கொஞ்சம் கஷ்டப்பட்டு அவனை இழுத்து வந்து கட்டிலில் கிடத்திவிட்டு கீழே படுத்து கொண்டாள்.

“சே… மித்ரத்தை பற்றி சொல்வதற்கிடையில் இவன் மயங்கிட்டானே. விடிஞ்சதும் சொல்லிக்கலாம்.”

என்று எண்ணிக்கொண்டே தூங்கினாள். கண்காணிப்பாளர்கள் இருவரும் ஏற்கனவே தூங்கிவிட்டிருந்தனர். விடிந்தது.

ஜெனி எழுந்து பார்த்த போது அந்த அறையில் மித்ரத் கதிரையில் அமர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய ஆட்களும் அங்குதான் இருந்தனர். அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. பக்கத்தில் கட்டிலை பார்த்தாள், என்கிடு இன்னும் எழும்பவில்லை. மயக்கமா, தூக்கமா. ஒன்றும் புரியவில்லை. தன்னை ஜெனி என்று காட்டிக்கொள்ளதபடி அவள் பதற்றத்தில் எழுந்து.

“யார் நீங்க.. ஏன் எல்லோரும் இந்த அறையில் இருக்குறீங்க…”

என்று கேட்டாள். அதற்கு ரிவாழ்வரை சுற்றிக்கொண்டே,

“முதலில் நீ யாருன்னு சொல்லு, இவன் எப்படி இந்த அறைக்கு வந்தான்.” என என்கிடுவை காட்டி கேட்டான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“நீங்கதானே இந்த கதையை கேட்க ஆவலாக வந்தீங்க இப்போ சிரிக்குறீங்க…” “ஆமா… ஆவலோடு தான் வந்தேன். இவ்வளவு சுவாரஸ்யமான கதையா இருக்கும் என்று நினைக்கவே இல்லை. நீ ரொம்ப சாமர்த்தியசாலி என்னையே கொன்னுட்டே” என்றான்.…

“நீங்கதானே இந்த கதையை கேட்க ஆவலாக வந்தீங்க இப்போ சிரிக்குறீங்க…” “ஆமா… ஆவலோடு தான் வந்தேன். இவ்வளவு சுவாரஸ்யமான கதையா இருக்கும் என்று நினைக்கவே இல்லை. நீ ரொம்ப சாமர்த்தியசாலி என்னையே கொன்னுட்டே” என்றான்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *