காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 87

  • 12

கொஞ்ச நேரம் லீஸா மற்றும் மைக்கின் புதிய தோற்றத்தை வியப்புடன் பார்த்து கொண்டிருந்த மீரா மற்றும் ஆர்தர் அடுத்து ஓடிவந்து மீரா ஜெனியை கட்டியணைக்க ஆர்தர்,

“வாவ்… இது நம்ம கில்கமேஷ் கிங்கா… என்னால நம்பவே முடியவில்லை.”

என்று கில்கமேஷை சுற்றி சுற்றி வந்தவன் அவன் மீதிருந்த காயங்களை கண்டு,

“சண்டை ரொம்ப உக்கிரமோ…”

என்று கேட்டான்.

“ஆமா… நீங்க எல்லாம் இங்க என்ன பண்ணுறீங்க.”

என்று கேட்டுக்கொண்டே கில்கமேஷ் போய் சோபாவில் அமர்ந்தான்.

“மீரா, ராபர்ட்…. என்னது இதெல்லாம்.. எப்படி இங்க வந்தீங்க எப்போ வந்தீங்க?”

என்று ஜெனியும் ஆச்சர்யமாக கேட்டாள்…

அப்போது டிடானியா,

“உங்க கார் வேகமா போறத பார்த்து நான் மித்ரத் வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். அப்போதான் ராபர்ட் ஃபோன் பண்ணினான்.”

என்றாள்.

“சொல்றோம். நானும் நம்ம டீமும் சேர்ந்து என்னோட அம்மா அப்பா உதவியோட எல்லா சயின்டிஸ்ட்டையும் லொக்கேட் பண்ணிட்டோம். முடிஞ்ச வரை அவங்க எல்லோரையும் காண்டக்ட் பண்ணி விசயத்தை சொல்லி நம்ம பக்கம் கொண்டுவந்துட்டோம்.”

“அப்போ அவங்க யாரும் மித்ரத்துக்கு உதவி பண்ண மாட்டாங்க அப்படித்தானே.”

“இல்ல, ஆனா ரெண்டு நாளைக்கு முதல் கூட ஆஸ்திரேலியாவில் இருக்குற ஒரு டாக்டரை ஃபோன் மூலமா கான்டக்ட் பண்ண முடியல என்னு அம்மாவும் அப்பாவும் கிளம்பி அங்கேய போய்ட்டங்க அவங்க போன காரியம் சக்ஸஸ் என்னும் சொன்னாங்க.”

“அப்போ இப்போ யாருமே அவனுக்கு உதவ முடியாது இல்லியா…?”

என்று ஜெனி சந்தோஷத்தோடு சொன்னான்.

“தப்பு ஜெனி… இன்னும் ஒரே ஒருத்தன் ஹாங்காங்ல இருக்கான். அவனை எங்க யாராலயும் கான்டக்ட் பண்ண முடியல.”

என்றாள் மீரா.

“என்ன? ஒருவேளை மித்ரத் நமக்கு முதல் அவனை பிடிச்சிட்டா பிரச்சினையே.”

என்றான் கில்கமேஷ்.

“ஆமா… நாங்களும் அதே குழப்பத்தில் தான் இருக்கோம்.”

என்றான் ராபர்ட்.

“அப்போ நீங்க ஏன் இங்க மறுபடியும் வந்தீங்க…?”

என்று கேட்டாள் ஜெனி..

“அது வந்து ஜெனி உன்னோட அங்கிள் மார்டினுக்கு எல்லா விஷயங்களையும் நாங்க சொல்லிட்டோம்.”

என்றாள் மீரா தலை குனிந்தபடி.

“என்ன அவருக்கு எப்படி தெரியும்… என்ன சொன்னாரு..?” என்று பதறிப்போய் கேட்டாள் ஜெனி.

“அது நாம ஒண்ணு திட்டம் போட்டா அது வேற லெவல்ல நம்மள டார்கெட் பண்ணிடுச்சு நீங்க ரெண்டுபேரையும் மிஸ்ஸிங் என்னு போட்டே நியூஸ் இருக்குல்ல அத அவர் பார்த்துட்டாரு அப்பறம் எங்களை தேடிவந்து கத்தினாரு என்ன ஏதுன்னு கேட்டு.”

என்றான் ஆர்தர்

“வேற வழியில்லாம உண்மையெல்லாம் சொல்லிட்டோம். அவர் ரொம்ப வருத்தப்பட்டாரு. அப்பறம் இப்போதைய நிலையில் எங்க உதவி உங்களுக்கு தேவைப்படும் என்று நினைத்து அவர்தான் எங்களை இங்கே போகும் படி சொல்லி எல்லா ஏற்பாடுகளையும் பன்னாரு.”

என்றாள் மீரா. ஜெனிக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. அப்போது ராபர்ட் அவகிட்ட ஃபோனை நீட்டி.

“உன்னோட அங்கிள் தான் பேசுராறு பேசு..”

என்றான். அவள் சற்று தயங்கிய பின்னர் அதை வாங்கி கொண்டு கொஞ்ச நேரம் தள்ளிப்போய் நின்று பேசினாள்.

“அப்பறம் அங்க என்னாச்சு…”

என்று விக்டரிடம் கேட்டாள் டிடானியா.

“இப்போ நிலமை இன்னும் மோசமாயிடுச்சி அந்த பாஸ்டர்ட் மித்ரத் எல்லாத்தையும் சொதப்பிட்டான். கில்கமேஷை பற்றி ரொம்ப தப்பா சொல்லி ஏமாத்திட்டான். அவன் இன்னும் கோபமா இருக்கான்.”

என்றான் விக்டர்.

“இப்போ என்ன பண்ணுறது. நாம சரியான பிளான் ஒண்ணு போடணும்.”

என்றான் ராபர்ட்.

“எதுக்கு அதான் எல்லா பிளானும் ஊத்தி மூடிக்கிச்சே.”

என்றான் ஆர்தர்.

“அதுக்காக அவன் ஒருத்தன் பண்ணுற அட்டூழியத்தை பார்த்துகிட்டு நாம எல்லோரும் கை கட்டி வேடிக்கை பார்க்குறதா கண்டிப்பாக கூடாது. என்கிட்ட ஒரு சூப்பர் பிளான் இருக்கு.”

என்றான் விக்டர். அப்போது ஜெனியும் பேசி முடித்துவிட்டு வந்திருந்தாள்.

“என்ன ஏதும் புது பிளானா…?”

“ஆமா… இந்த வாட்டி நாம என்கிடுவை கடத்தபோறோம்.”

என்று சொல்ல எல்லோரும் வாயை பிளந்து கொண்டு நின்றனர்.

“வாட்…”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கொஞ்ச நேரம் லீஸா மற்றும் மைக்கின் புதிய தோற்றத்தை வியப்புடன் பார்த்து கொண்டிருந்த மீரா மற்றும் ஆர்தர் அடுத்து ஓடிவந்து மீரா ஜெனியை கட்டியணைக்க ஆர்தர், “வாவ்… இது நம்ம கில்கமேஷ் கிங்கா… என்னால…

கொஞ்ச நேரம் லீஸா மற்றும் மைக்கின் புதிய தோற்றத்தை வியப்புடன் பார்த்து கொண்டிருந்த மீரா மற்றும் ஆர்தர் அடுத்து ஓடிவந்து மீரா ஜெனியை கட்டியணைக்க ஆர்தர், “வாவ்… இது நம்ம கில்கமேஷ் கிங்கா… என்னால…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *