காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 88

  • 14

“கண்டிப்பா இவனுக்கு ஏதோ ஆயிடுச்சி…. எலே அவன் செத்து பிணமா இருக்கும் போதே நம்மளால அவனை கடத்த முடியல்ல இப்போ அர்னால்ட் சுவசனேகர் மாதிரி ஆயிரம் பேர ஒரே அடியில சாகடிக்குறவன எப்படி கடத்த போறோம்….”

என்று ஆர்தர் விக்டர் கிட்ட கேட்டான்.

“அதுதானே! எந்த நம்பிக்கைல இப்படி சொல்லுறே விக்கி”

என்று டிடானியாவும் கேட்டாள்.

“அப்போ நம்ம கிட்ட இல்லாத ஒரு வெப்பன் இப்போ இங்க இருக்கு.”

என்றான்.

“என்னடா சும்மா புதிர் மேல புதிரா போட்டுட்டு இருக்கே… உண்மையிலேயே உன்னோட பிளான் என்ன?. எந்த வெப்பன் பத்தி இப்போ நீ பேசுரே?”

என ராபர்ட் கேட்டான். அதற்கு ஜெனியை கை நீட்டி,

“லீஸா, என்கிற இந்த வெப்பன வெச்சி தான் சொல்றேன்.”

என்றான்.

“என்னது நானா… என்ன ஒளர்ர… இனி என்னால அவன் கிட்ட பேசவே முடியாது. அவனுக்கு இப்போ இந்த லீசாவையும் தெரியும் நான் கில்கமேஷ் ஆள் என்னும் தெரியும்.”

என்றாள்.

“ஒரு வேளை நீ அவள இன்னொரு வேஷம் போட வைக்க போறியா?”

என்று மீரா கேட்டாள். கில்கமேஷ் இது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டும் எதுவும் பேசாமல் இருந்தது ஜெனிக்கு ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கேவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

“நான் பார்த்தேன் ஜெனி… அவனுக்கு உன்மேல ஏதோ ஒரு அஃபக்சன் இருக்கிறத நான் உணர்ந்தன்.”

என்றவன் கில்கமேஷை சற்று பார்த்துவிட்டு அவன் ஒன்றும் பேசவில்லை என்றதும் மீண்டும் பேசினான்.

“உன்னை எப்படி ஆவது அவங்க சைடுக்கு எடுக்கணும் என்று அவன் நினைக்குறான். நீ அவங்க சைடு போய்டு.”

என்றான்.

“என்ன… என்னடா லூசு மாதிரி பேசுரே…”

என்ற டிடானியா அவனுக்கு கண்ஜாடையால் கில்கமேஷ் அங்கு இருப்பதை நியாபகமூட்டினாள்.

“எனக்கு எல்லாம் தெரியும்.. நீ கொஞ்சம் பேசாம இரு… முதலில் என்னை முழுசா எக்ஸ்பிளைன் பண்ண விடு..”

என்றவன் மீண்டும் தொடர்ந்தான்,

“என்கிடுவ இப்போதைக்கு நாம யாரும் நெருங்க முடியாது. லீஸாவை வைத்து அவனுக்கு பொறி வைப்போம். அவனை எப்படியாவது நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வந்துடுவோம். ட்ரீட்மெண்ட் கொடுப்போம் பழசல்லாம் நியாபகம் வரதுக்கு. இட் கென் பொசிபில்”

என்றான். இப்போதுதான் எல்லோருக்கும் விக்டரின் பிளான் புரிந்தது.

“இருந்தாலும் நாம அவனை மறுபடியும் ஏமாத்துறது… எனக்கென்னா சரியா படல…”

என்றாள் ஜெனி,

“இல்ல ஜெனி… விக்டர் சொல்றது சரி.. இதை நாம ஏன் ஏமாத்துறதா நினைக்கணும்… ஒரு அம்னீஷியா பேசண்டுக்கு கொடுக்குற ஷாக் ட்ரீட்மெண்ட் என்னு எடுத்துக்குவோம்.”

என்றாள் மீரா, என்னவோ கில்கமேஷ் பேசாமல் இருக்க ஜெனிக்கு இந்த பிளான் அவனுக்கு பிடிக்க வில்லையா என எண்ண தோன்றியது. அதை சரியாக புரிந்து கொண்டு கில்கமேஷ் எழுந்து ஜெனி கையை பிடித்து,

“என்னோட நண்பன் என்கிடுவை என்கிட்ட சேர்ப்பே என்னு எனக்கு ப்ரோமிஸ் பண்ணி இருக்கே. ஜெனி.. நாங்க எல்லோரும் உன்னை தான் நம்புறோம். எனக்காக இந்த உதவியை பண்ணுவியா”

என்று கேட்டான். அந்த வார்தைக்காக ஜெனி இதற்கு சம்மதித்தாள். இனி அடுத்து எப்படி என்கிடுவையும் லீஸாவையும் மீட் பண்ண வைப்பதென எல்லாருமாய் சேர்ந்து திட்டமிட ஆரம்பித்தனர்.

************************

“எதுக்காக இதெல்லாம் என்கிட்ட இருந்து மறைத்தீங்க..?”

என்று என்கிடு கோபமாக மித்ரத்தை நோக்கி கேட்டான். மித்ரத்துக்கு ஏற்பட்ட காயங்களுக்காக கட்டு போடப்பட்டு கொண்டிருந்தது.

“அவனால நீ கொல்லப்பட்டது தெரிஞ்சா நீ வருத்தப்படுவேன்னு… சொல்லாம விட்டுட்டோம்… ஆனா அவங்க மறுபடியும் உன்னை கொல்லனும் என்று வருவாங்கன்னு நாங்க எதிர்பாக்கல..”

என பீலா விட்டான்.

இதை முன்னாடியே எனக்கு நியாக்கப்படுத்தி இருந்தா நான் அன்னிக்கே அந்த ஆய்வுகூடத்தில் வைத்து அவனை தீர்த்து கட்டி இருப்பேன்… ஆனா ஒருவிஷயத்தை என்னால இன்னும் சரியா புரிஞ்சிக்க முடியல்ல… என் உடலை பாதுகாத்து எனக்கு உயிர் தந்து இருக்கீங்க.. ஏன்… அவன் எப்படி இவ்வளவு வருஷம் உயிரோட இருக்க முடியும்.?

என்று கேட்டான். அப்படியே அந்த மோதிரத்தை பார்த்தான்.

“அது உனக்கு கடவுளே பரிசாக அளித்தது. அந்த மோதிரத்தை பயன்படுத்தி அவன் நீண்ட ஆயுளை பெற்றான். அவனை கொல்லவே நீ படைக்கப்பட்ட… ஆனா இந்த மோதிரத்தை உன்கிட்ட இருந்து திருடி அவன் உன்னை கொன்னுட்டான். நாங்க உன்னோட வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதனால் உன் உடல பாதுகாத்து ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மோதிரத்தை அவன் கிட்ட இருந்து எடுத்து உன் கிட்ட சேர்த்து இருக்கோம். உன்னோட இலக்கை நீ அடையனும்.”

என்றான். அதை சிந்தித்து கொண்டே என்கிடு,

“அந்த பொண்ணு லீஸா.. அவ ஒரு அப்பாவி..”

என்றான் என்கிடு,

“அவ நம்ம எதிரி என்கிடு அவளை போல ஆளுங்களை எண்ணிக்கும் நம்பாதே.”

என்றான் இவன்.

“இல்ல, அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு அவளை அவங்க நல்லா ஏமாத்தி இருக்காங்க எப்படியாவது அவ எனக்கு வேணும்”

என்றான் என்கிடு. மித்ரத் அதிர்ச்சியோட என்கிடுவை பார்த்தான். அவன் கண்ணில் லீஸா மீதான காதல் துல்லியமாக தெரிந்தது.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“கண்டிப்பா இவனுக்கு ஏதோ ஆயிடுச்சி…. எலே அவன் செத்து பிணமா இருக்கும் போதே நம்மளால அவனை கடத்த முடியல்ல இப்போ அர்னால்ட் சுவசனேகர் மாதிரி ஆயிரம் பேர ஒரே அடியில சாகடிக்குறவன எப்படி கடத்த…

“கண்டிப்பா இவனுக்கு ஏதோ ஆயிடுச்சி…. எலே அவன் செத்து பிணமா இருக்கும் போதே நம்மளால அவனை கடத்த முடியல்ல இப்போ அர்னால்ட் சுவசனேகர் மாதிரி ஆயிரம் பேர ஒரே அடியில சாகடிக்குறவன எப்படி கடத்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *