காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 89

  • 21

என்கிடுவால் சரியாக தூங்கமுடியவில்லை, அதேபோல் சரியாக சாப்பிடவும் முடியவில்லை. அவன் மித்ரத் கூட உணவருந்த அமர்ந்த போது முந்தைய நாள் அதே மேசையில் லீஸா இருந்ததே நியாபகத்துக்கு வந்தது. சாப்பாட்டை வைத்து விட்டு எழுந்து சென்றுவிட்டான்.

“சார், இவன் நேத்து இருந்து இப்படித்தான் நடந்துக்கிறான்.”

என்று ஒருவன் சொல்ல அவன் போன வழியில் பார்த்துக்கொண்டே மித்ரத்

“இதுக்கான காரணம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்… நீ அந்த பொண்ணு லீஸாவை எங்க இருக்காளுன்னு கண்டுபிடி.”

என்று சொன்னான்.

***********************

விக்டரும் டிடானியாவும் காலேஜுக்கு சென்றிருந்தனர். ஆர்தர் மீரா சுப்பர்மார்கெட் சென்று சில பொருட்கள் வாங்க புறப்பட்டனர். ரொபர்ட் தனது லேப்டாப்பில் உட்கார்ந்து ஹாங்காங்கில் இருக்கும் அந்த டாக்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தான். கில்கமேஷ் மனது நிறைய வலியுடன் அவனது அறையில் ஜன்னல் வழியாக வெளியே விரக்தியோட பார்த்து கொண்டு இருந்தான். தன்னுடைய அரண்மனையும் மக்களும் தாய் நின்சுனும், நண்பன் என்கிடுவும், ஜெனியை விட்டுக்கொடுக்க போகிறோம் என்ற கவலையும் மாறி மாறி அவனை வருத்தி கொண்டிருந்தது. அப்போது கதவு லேசாக திறக்க ஜெனி உள்ளே தலையை போட்டு,

“மே ஐ கம் இன்…”

என்று கேட்டாள். உடனே சுதாரித்து கொண்டு,

“உள்ளே வா ஜெனி.”

என்றான் கேகே. அவளும் வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

“என்ன யோசனை எல்லாம் ரொம்ப பலமாக இருக்கு…”

என்று கேட்டாள்.

“எல்லாம் லேசான பயம்தான். என்கிடுவுக்கு உண்மை எல்லாம் தெரிய வரும் போது தான் அவன் ரொம்ப வருத்தப்படுவான்.”

என்றான்.

“அது என்னவோ உண்மைதான்… ஆமா நேத்து நீங்க ஃபோன் பேசும் போது ஏதோ முக்கியமான விஷயம் சொல்லவந்தீங்க… என்னால சரியா அதை கேட்க முடியல்ல… என்ன விஷயம் அது?”

என்று கேட்டாள். ஜெனி மறுபடியும் அதை நியாபகம் வைத்திருந்து கேட்பாள் என்று கேகே நினைக்கவில்லை. அவனுக்கு வார்த்தைகள் தடுமாறியது.

“அதெல்லாம் மறந்து போச்சு.. நியாபகம் வந்தா சொல்லுறேன்..”

என்றான். இது அவளுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. வெளியே மீரா பேசும் சத்தம் கேட்டது.

“ஆர்தரும் மீராவும் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்… என்னன்னு போய் பாக்குறேன்… நீயும் வா..”

என்றுவிட்டு ஜெனி வெளியே சென்றாள். அவன் மனது இப்படி எண்ண ஆரம்பித்தது.

இப்போ என்னால அந்த வார்த்தையை என்ன அப்படி ஒரு எண்ணம் எனக்கு இருந்ததையே சொல்லமுடியாது ஜெனி. நான் உன்னை நேசிக்கும் விஷயம் உனக்கு தெரியவே கூடாது. எனக்கு நீங்க ரெண்டுபேரும் முக்கியம். என்னோட என்கிடு பற்றி எனக்கு தெரியும். அவன் உன்னை காதலிக்கிறான். நீ அவனுக்கு சரியான துணையாக இருப்பே.. ஏன்னா உன்னோடதும் அவனோடதும் குணங்கள் எல்லாமே ஒண்ணுதான். நான் என்கிடு மனதை காயப்படுத்த விரும்பல. அதே நேரத்தில் உன்னை காதலித்த என்னோட எண்ணங்கள் எனக்குள்ளேயே இருக்கட்டும். அதனால தான் விக்டரோட திட்டத்துக்கு நான் முழுசா சம்மதிச்சேன்

என்று எண்ணிக்கொண்டான்.

****************

விக்டரும் டிடானியாவும் வருகிற வழியில்,

“இதை எப்படி பண்ணபோற விக்கி… வெளியவே வராத ஒருத்தனோட எப்படி ஜெனியை பழகவிட முடியும்… பத்தாது அந்த பெருச்சாளி மித்ரத் வேற இப்போ ஊர்லதான் இருக்கான்.”

“எனக்கு சின்னதா ஒரு ஐடியா இருக்கு… மே பி அது சக்ஸஸ் ஆகலாம்.”

என்றான் விக்டர்.

“இந்த டிவி சேனல் ப்ரோக்ராம் சூட்டிங் நடக்குற இடங்கள்ல லீஸாவை கொண்டுபோய் நிறுத்திட்டா. எப்படியும் அவங்க டிவி பார்க்கும் போது அவள பார்த்து அங்கே வர வாய்ப்பு உள்ளது.”

என்றான்.

“அவன் டிவி பாக்கலேன்னா..”

என்று குறுக்கு கேள்வி கேட்டாள் டிடானியா,

“எப்படியும் அவன் சும்மா இருக்க போரிங்ல டிவி பார்க்க 90 சதவிகிதம் வாய்ப்பு இருக்கு அவன் பாக்கலேன்னா கூட மித்ரத் பார்க்கும் போது லீஸாவை காண வாய்ப்பு இருக்கு.”

என்றான்.

“மொதல்ல இந்த பிளானை எக்சிகியூட் பண்ணி பார்ப்போம்… சக்ஸஸ் ஆகலென்னா அடுத்து யோசிப்போம்.”

என்றாள் டிடானியாவும், இருவரும் பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

***************

என்கிடு,

“வெளியே போகவேண்டும்”

என்று மித்ரத்தை பார்த்து சொன்னான்.

“என்ன வெளியே போய் என்ன பண்ணபோற?”

என்று கேட்டான் மித்ரத்.

“அவ எனக்கு வேணும்… அவளை நான் சரிபண்ணி நம்ம வழிக்கு கொண்டு வர போறேன்.”

என்றான்.

“யாரு லீஸாவை தானே சொல்லுறே இருக்கட்டும் அதுக்காக நீ வெளியே போக வேண்டியதில்லை நான் ஏற்கனவே என்னோட ஆளுங்களை அவளை கண்டு பிடிக்க அனுப்பி இருக்கேன்.”

என்றான்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நானே அவளை கண்டுபிடிக்க போறேன்.”

என்றவன் மித்ரத்தை அலட்சியம் செய்து விட்டு வெளியே சென்றான்..

“அவனை பின்தொடருங்க…”

என்று விட்டு கோபமாக இருந்தான் மித்ரத்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

என்கிடுவால் சரியாக தூங்கமுடியவில்லை, அதேபோல் சரியாக சாப்பிடவும் முடியவில்லை. அவன் மித்ரத் கூட உணவருந்த அமர்ந்த போது முந்தைய நாள் அதே மேசையில் லீஸா இருந்ததே நியாபகத்துக்கு வந்தது. சாப்பாட்டை வைத்து விட்டு எழுந்து…

என்கிடுவால் சரியாக தூங்கமுடியவில்லை, அதேபோல் சரியாக சாப்பிடவும் முடியவில்லை. அவன் மித்ரத் கூட உணவருந்த அமர்ந்த போது முந்தைய நாள் அதே மேசையில் லீஸா இருந்ததே நியாபகத்துக்கு வந்தது. சாப்பாட்டை வைத்து விட்டு எழுந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *