காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 90

  • 12

விக்டரும் டிடானியாவும் வீட்டுக்கு வந்ததும் ஜெனியையும் மற்றவர்களையும் அழைத்து தங்களுடைய திட்டத்தை விளக்கினார்கள். ராபர்ட் அன்றைக்கு அந்த ஊரில் எங்கெல்லாம் லைவ் ப்ரோக்ராம் நடக்கிறது என்ற தகவலை சேகரித்தான். அதிலே கொஞ்சம் அருகில் ஒரு சர்கஸில் லைவ் ப்ரோக்ராம் போகிறது என்று தெரிந்து கொண்டனர்.

“லீஸா,ரெடி ஆகு என்கிடு கேப்ச்சர் மிஷின் நௌ பிகின்.”

என்றான் விக்டர். அவளும் தைரியத்தை தன்னகத்தே வரவழைத்து கொண்டு லீஸாவாக அவதாரம் எடுத்தாள்.

“இப்போ நாம எல்லோருமே சர்க்கஸ் போறோம். ஆளுக்கோர் இடத்துல கவனமாக நிற்போம். கண்டிப்பாக என்கிடு இல்லேன்னா மித்ரத் லீஸாவை அங்க பார்த்துட்டு அங்க வருவாங்க.”

என்றான் விக்டர்.

“மித்ரத்தை என்ன பண்ணுறது…?”

என்று கேட்டாள் டிடானியா.

“இதை யூஸ் பண்ணு… இந்த கர்ச்சிப்ல மயக்க மருந்து அடிச்சி இருக்கேன். கூட்டத்தில் கூட்டமாய் கலந்து என்கிடு இல்லேன்னா மித்ரத்தை மயக்கிடனும்.”

என்றான்.

“அப்போ என்கிடு கிசைச்சா அங்க இருந்து அவனை நம்ம இடத்துக்கு கொண்டுவந்துடனும் நானும் மீராவும் வண்டியில் வெயிட் பண்ணுறேம்.”

என்றான் ஆர்தர்.

“அப்படின்னா மித்ரத்தை பிடிச்சிட்டா அவனை வெச்சு பிளாக்மெயில் பண்ணி என்கிடுவை வர வெச்சிடனும்…’

என்றான் ராபர்ட்.

“பிளான் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனால் நாம எதிர்மறையாகவும் கொஞ்சம் யோசிக்கணும்..”

என்று சொல்லி கொண்டே கில்கமேஷ் வந்தான்.

“நீ என்ன சொல்ல வர்ரே?”

“அதாவது இதில் எதுவும் நடக்கலேன்னா. நான் என்கிடு முன்னாடி போய் நிக்குறேன். என்னை தாக்க வரும்போது அந்த மயக்கமருந்தை அடிச்சிடலாம்.”

என்றான்.

“நோ…. உன்னோட உயிரை பணயம் வெச்சு இந்த விபரீத எண்ணம் வேணாம். நானே போறேன். அவன் வருவான். எனக்கு நம்பிக்கை இருக்கு.”

என்ற ஜெனி முதலில் போய் வேனில் ஏறிக்கொண்டாள். அவளை அடுத்து எல்லோரும் பின்னாடி சென்று வாகனத்தில் அமர்ந்தனர். ஓரிரு தேவையான பொருட்களையும் எடுத்து கொண்டனர். நேராக வண்டியை சர்க்ஸுக்கு விட்டனர்.

******************

ஆனால் துரதிஷ்டவசமாக என்கிடு டிவி பார்க்காமல் முன்னரே வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான். அவன் பின்னால் இரு அடியாட்கள் வெகு தொலைவில் இருந்து வேவு பார்த்து கொண்டே இருந்தனர். நடந்தே எல்லா இடங்களுக்கும் சென்றான். பொதுமக்கள் அதிகமாக இருக்கும் ஒவ்வொரு இடமாக சென்று லீஸாவை தேட ஆரம்பித்தான்.

“ஓஹ்..லீஸா நீ எங்கே இருக்கே….”

என்று நினைத்து கொண்டிருக்கையில் சர்க்கஸ் உள்ளே இருந்து மக்களின் கூக்குரல், மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம் கேட்டது. அங்கே செல்ல வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு தோன்றியது. இந்நேரம் எல்லாம் நமது ஜெனி குழுவினர் உள்ளே இருந்தனர்.

மித்ரத் வீட்டில் இருந்து கொண்டு டிவி நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டே அதே சமயம் ஹாங்காங்கில் இருக்கும் அந்த டாக்டர் பற்றி இணையத்தில் தேடி கொண்டு இருந்தான்.

*******************

“சார் டிக்கட் எடுக்காமல் உள்ளே போகமுடியாது “

என்று வாயிலில் டிக்கட் கொடுப்பவர் என்கிடுவை தடுத்தான்.

“என்னது டிக்கெட்டா அது எப்படி எடுக்கிறது?”

என்று கேட்டான் என்கிடு ஒரு பெரிய சிரிப்பாக சிரித்து விட்டு அவன்,

“உன்கிட்ட பணம் இல்லே போல இருக்கே”

என்றவன் என்கிடு கையில் இருந்த வாட்சை குறுகுறு என்று பார்ப்பதை பார்த்த என்கிடு அதை கழற்றி அவன் கையில் கொடுக்க இழித்து கொண்டே என்கிடுவை உள்ளே விட்டான். கேமரா எங்கெல்லாம் சுழல்கிறதோ அங்கெல்லாம் லீஸா எதேச்சையாக போவது போல சுழன்று கொண்டாள். என்கிடு கூட்டத்தில் நுழைந்து இங்கு எங்காவது லீஸா இருக்கிறாளா என்று தேடிக்கொண்டு இருந்தான்.

மத்தியில் இருந்த மேடையில் அப்போது நெருப்பு வளையத்தில் சிங்கம் பாயும் காட்சி நடந்தேறியது. ஒரு நிமிடம் எல்லோரும் அந்த காட்சியை பிரமிப்போடு பார்க்க அந்த தருணம் சிங்கம் பாய்ந்து போனபின் என்கிடு நெருப்பு வளையத்தை ஊடறுத்து எதிர்ப்புறம் லீஸாவை காண அதே நேரத்தில் ஜெனியும் என்கிடுவை கண்டு கொண்டாள்.

மறுபுறம் எல்லோரும் என்கிடு இங்கு வந்ததை கண்டுவிட்டனர்.. டிடானியாவும் கர்ச்சீப்பை தயாராக வைத்து கொண்டே அவனை நெருங்கினாள். கில்கமேஷ் நெஞ்சு படபடத்தது. அவன் லீஸாவை கண்டமாத்திரத்தில் அவள் பெயரை கூறி கத்தி கொண்டே மேடையை சுற்றி ஓடினான்.

எதேச்சையாக டிவியை என்கிடு ஓடுவதையும் அங்கே அந்த லீஸா இருப்பதையும் பார்த்த மித்ரத் அதிர்ச்சி அடைந்து உடனே அவன் ஆட்களுக்கு ஃபோன் செய்து அதை தடுத்து நிறுத்த சொல்லி உத்தரவிட்டான். அத்தோடு கேமரா வேறு பக்கம் திரும்பி விடவே கோபத்தில் பற்களை கடித்து கொண்டான்.

அவர்களும் சர்க்ஸை நோக்கி விரைந்து வந்தனர். டிடானியாவும் வேகமாக என்கிடு பின்னாடி சென்றாள் தருணம் பார்த்து அவனை மயக்கிவிட லீஸாவை நெருங்கிய என்கிடு மூச்சுவிடாமல் அவள் பெயரை சொன்னான்.

“லீஸா!”

“ஏ.எ… என்கிடு.. நீங்க.. இங்க..???”

என்று நடித்தாள் ஜெனி, தூரனின்று விக்டர் கண்ஜாடை காட்ட டிடானியாவும் கர்ச்சீப்பை கையில் எடுத்து கொண்டு இன்னும் நெருங்கி செல்ல லீஸா கையை பிடித்த என்கிடு அவள் கண்ணை பார்த்து,

“நான் உன்னை காதலிக்குறேன். லீஸா…! என்னோட காதலை ஏத்துக்க.”

என்றவன் அவள் புருவங்கள் அதிர்ச்சியில் உறைந்து கூட பார்க்காமல் பட்டென அவளை முத்தமிட்டான். அவ்வளவு தான் ஒரு கணம் கடிகாரத்தில் நேரமும் நிமிடமும் எங்கிலும் உறைந்து. அதிர்ச்சியில் எல்லோரும் டோட்டல் ஃபிரீஸ்..
கில்கமேஷ் மட்டும் லேசாக உதட்டு சிரிப்பை சிரித்து கொண்டான். கண்களில் இருந்து கண்ணீர் வடிய.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

விக்டரும் டிடானியாவும் வீட்டுக்கு வந்ததும் ஜெனியையும் மற்றவர்களையும் அழைத்து தங்களுடைய திட்டத்தை விளக்கினார்கள். ராபர்ட் அன்றைக்கு அந்த ஊரில் எங்கெல்லாம் லைவ் ப்ரோக்ராம் நடக்கிறது என்ற தகவலை சேகரித்தான். அதிலே கொஞ்சம் அருகில் ஒரு…

விக்டரும் டிடானியாவும் வீட்டுக்கு வந்ததும் ஜெனியையும் மற்றவர்களையும் அழைத்து தங்களுடைய திட்டத்தை விளக்கினார்கள். ராபர்ட் அன்றைக்கு அந்த ஊரில் எங்கெல்லாம் லைவ் ப்ரோக்ராம் நடக்கிறது என்ற தகவலை சேகரித்தான். அதிலே கொஞ்சம் அருகில் ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *