எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 14

  • 6

நாட்களும் உருண்டோடின. விடிந்தால் கல்யாணம் என்ற வரம்பை தொட்டு கொண்டி இருந்தது இரு வீடும். ஒன்பது நாட்களும் எவ்வாறு கடந்தது என்று அறியாது திருமண வேலைகள் பக்க பலமாக நடந்து கொண்டும் மறுபுறம் ருஷாவின் வீடும் நிசாத்தின் வீடும் திருமண வெள்ளத்தில் மிதந்ததும் கொண்டும் இருந்தது. தன்னுடைய திருமணம் பற்றி முன்னதாகவே ருஷா தன்னுடைய நட்புக்களுக்கு அறிவித்திருந்தாள். மருதாணி பங்சென், பொக்ஸ் பங்சென் என்று இன்றி மிகவும் அழகாகவும் சாதரணமாகவும் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் நட்புக்கள் அல்லவா விட்டு விடவா போகிறார்கள். ருஷா வீட்டிடை விட்டு போகும் தருணம் எண்ணி முற்றத்தில் ஆழ்ந்து யோசித்து கொண்டு இருக்கின்றாள்.

ரிங் ரிங்….

“ருஷா கோள் வருது விளங்கலையா??”

“அப்டி என்ன யோசின…”

“ஆஹ் இன்னா பாக்குறன் மா..”

“ஹெலோ… என்னடி ருஷா எவ்வலோவோ வாடி கோள் பண்ணின உனக்கு காது விளங்க இல்லையா? என்ன மேடமுக்கு கல்யாண தின்கிங்கோ…”

“அடி சும்மா கிட்டாதிங்கடி”

“சும்மா தான் இருக்கன்.”

“என்ன எல்லார்ட சவுண்டும் கேட்குது, என்ன கிட்ட செட் பண்ணி எடுத்திக்கீங்களோ???”

என்று ருஷா சொல்ல மற்ற நண்பி போனை பறித்து,

“ஆஹ்ஹ் ஆஹா மேடம் கொஞ்சம் இருங்க. உலகத்துல மேடம் மட்டும் தான் வெட் பண்றது போல பேசுறீங்க..”

“அப்படி இல்லடி…”

என்று கதையை மறுத்து விட்டு,

“வீட்ட வார இல்லையா, என்கி போர் ஆஹ் இருக்குடி வாங்கடி எல்லாரும்…”

“இண்டைக்கு மட்டும் தானே பொறுத்துக்க. அப்ரோம் உனக்கு போரே அடிக்காதுடி”

என்று கிட்டி கொண்டு எல்லாரும் சிரிக்க, ருஷாவுக்கு இந்த கிண்டல் எல்லாம் பிடிக்காது. உடனே கோபப்பட்டு,

“நிப்பாட்டுங்கடி…”

“அடியே நிப்பாடுங்கடி பொண்ணு கோபப் படுறா…”

“ஆஹ் கிட்டின போதும் அஸருக்கு அப்போறோம் எல்லாரும் வாரம். அதை சொல்லத் தான் பொண்ணு மேடம் நாங்க எடுத்தம். அப்போ நாங்க வைக்கம் மேடம்.. உனக்கு வந்து இருக்குடி”

என்று படார் என்று போனை கட் பண்ணினார்கள். ருஷாவின் இணைபிரியா நட்புக்கள். என்ன தான் பண்ண போகிறார்கள் என்று பயத்திலும், நட்புக்களை பார்க்க போகும் சந்தோசத்தில் அத்தருணத்தை எதிர் பார்த்துக் கொண்டி இருந்தாள் ருஷா.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

நாட்களும் உருண்டோடின. விடிந்தால் கல்யாணம் என்ற வரம்பை தொட்டு கொண்டி இருந்தது இரு வீடும். ஒன்பது நாட்களும் எவ்வாறு கடந்தது என்று அறியாது திருமண வேலைகள் பக்க பலமாக நடந்து கொண்டும் மறுபுறம் ருஷாவின்…

நாட்களும் உருண்டோடின. விடிந்தால் கல்யாணம் என்ற வரம்பை தொட்டு கொண்டி இருந்தது இரு வீடும். ஒன்பது நாட்களும் எவ்வாறு கடந்தது என்று அறியாது திருமண வேலைகள் பக்க பலமாக நடந்து கொண்டும் மறுபுறம் ருஷாவின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *