எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 16

  • 7

“உம்மா பாருங்க மா.. என்ன எல்லாம் செய்துட்டு போராளுக…”

“ம்ம்… ஹைர் மா.. நீ கொடுத்து வெச்சவள் நல்ல நட்பு கிடைச்சிருக்கு…”

“ம்ம் சரி ருஷா டைம் ஆகிடு போய் மஹ்ரிப் தொழுட்டு குர்ஆன் ஓது இஷா அதான் சொல்ல அதையும் தொழுதுட்டு சாப்பிட வா…. சுபஹுக்கு காவின் அப்போ நேரதோட எழும்பனும் வேல இருக்கு… கொண்டு போற உடுப்பு எல்லாம் வெச்ச தானே…”

“ஓஹ் மா எல்லாம் வெச்சிடன். உம்மா மாமி லேட் ஆஹ் வார என்று சொன்னாங்க மா… நான் பிரண்ட்ஸ் வந்த ஹேப்பில மறந்துட்டேன்..”

“ஆஹ் சரி ருஷா”

என்று சொல்லி விட்டு சுபைதா தொழ சென்றார். ருஷாவும் தொழ சென்றாள். மஹ்ரிப் தொழுது விட்டு இஷா அதான் சொல்ல அதையும் தொழுது விட்டு தம்பி ரோசனின் வருகைக்கு சுபைதாவும் ருஷாவும் காத்துக் கொண்டு இருந்தார்கள். அதே நேரத்தில் ரோசனும் வந்தான்.

“வா ரோசன் உனக்காக தான் வெயிட்டிங் டா…”

“என்ன சிஸ்ஸு நாளைக்கு எங்களை விட்டு போக போற சோவ்.. லாஸ்ட் மொமெண்ட் அப்டியா???”

“டேய் என்ன நீ பேசுற ஆஹ்.. அப்டி எல்லாம் இல்ல. என்ன கஷ்ட படுத்தாதே…”

“ஓஹ் சிஸ்ஸு நான் சும்மா தாமஸ் பண்ணினன்.. அதான் மச்சான் எங்களையும் உன்னோடயோ இருக்க சொல்லியாச்சே இன்னம் என்ன…”

“சரி வா வா சாப்டுவோம்.”

என்று கை இரண்டையும் இழுத்து சென்றான் ரோசன்.

“உம்மா பசிக்குது வாங்க நீங்களும்”

என்று அழைக்க சுபைதாவும் வந்தார். உம்மா, மகன், மகள் மூவரும் சந்தோசம் பாதி சோகம் பாதியாய் சாப்பிட,

“உம்மா நான் வார வழில மச்சான கண்டன் வீட்ட கூடிடு போனாரு. அங்க கடும் வேலை நடக்குதுமா. கார் எல்லாம் டெகெரெட் பண்ணி வச்சிருக்காங்க. மச்சான்ட கார் தானே மா அது…”

“ஓஹ் மகன் நீயும் நல்லா படி நல்ல வேல எடு அப்பான் நீயும் இப்புடி கார் எடுக்கலாம்.”

என்று எல்லா தாயும் சொல்லும் அதே ஊக்கப்படுத்தல்.

“ம்ம்… கட்டாயம்மா…”

“அப்பா ராத்தாட வீடு அப்படி இருக்குமா சொல்ல வார்த்த இல்ல மா”

என்று ராத்தாவை கிட்டி கொண்டு இருந்தான்.

“நமக்கு தெரியாதேடா நாம போக கூட இல்லையே…”

“ம்ம்… ஆஹ் மாமி சொன்னாங்க… ஒன்பது மணி போல வீட்ட வார என்று சொன்னாங்க மா..”

“ஓஹ் மகன் ராத்தாவும் சொன்னா, சரி சரி கெதியா சாப்பிட்டு எடுங்க…”

சற்று நேரத்தின் பின் மூவரும் சாப்பிட்டு விட்டு கிச்சனை விட்டு வெளியே வர, ர்ர்ர்ர்….. என்று பிரேக் சத்தம். ரோசன் ஓடி போய் பார்க்க,

“உம்மா மாமி வாராக…”

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“உம்மா பாருங்க மா.. என்ன எல்லாம் செய்துட்டு போராளுக…” “ம்ம்… ஹைர் மா.. நீ கொடுத்து வெச்சவள் நல்ல நட்பு கிடைச்சிருக்கு…” “ம்ம் சரி ருஷா டைம் ஆகிடு போய் மஹ்ரிப் தொழுட்டு குர்ஆன்…

“உம்மா பாருங்க மா.. என்ன எல்லாம் செய்துட்டு போராளுக…” “ம்ம்… ஹைர் மா.. நீ கொடுத்து வெச்சவள் நல்ல நட்பு கிடைச்சிருக்கு…” “ம்ம் சரி ருஷா டைம் ஆகிடு போய் மஹ்ரிப் தொழுட்டு குர்ஆன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *