எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 18

  • 8

ருஷா, உம்மா என்று கட்டி விம்மி அழுது கொள்ள ரோசனும் அழ, சுபைதா தன் கண்ணீரை கானல் நீராய் மறைத்து இரு செல்ல குழந்தைகளுக்கும் ஆறுதலாய் மாறினார். தன் குடும்பம் விட்டு புது ஊர் வந்து இந்த சேரியில் தங்கி, தன் கணவனை இழந்து தன் செல்லங்களை சொல்லடங்கா கஷ்டம் பட்டு வளர்த்த அந்த பல யூகத்தை ஒரு நொடியில் தன் மனக்கண் முன் நிறுத்தினார். விடிந்ததும் தன் பெரிய பொறுப்பை நிறைவேற்ற எண்ணி ரோசனையும் ருஷாவையும் தழுவி விட்டு,

“ருஷா , ரோசன், இதல்லாம் கொண்டு வைங்க.”

“ம்ம் சரிம்மா”

என்று, ருஷா சாமான்களை ரூமுக்குள் கொண்டு போக , ரோசனும் அவனுடைய சாமான்களை அவனின் ரூமுக்குள் கொண்டு சென்றான். சுபைதா கேட்டை பூட்டி விட்டு வாசலில் எரிந்து கொண்டிடுந்த லைட்டையும் ஓப் பண்ணி விட்டு கதவையும் பூட்டி விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். நேரம் பத்து மணியை தாவிய படி இருந்தது. ருஷா தன் நட்புக்கள் போட்டு விட்டு சென்ற மோதிரத்தை பார்த்து ஏதோ நினைத்த படி அவளின் விழிகள் தூக்கத்தை எதிர் பார்த்து கொண்டு இருந்தது. அவள் மனதோ, எதிர் பார்ப்பின் விழித்தோன்றலாய் தான் தன் வாழ்வை நினைத்தது ஏங்கி கொண்டு இருந்தது. ஒரு சில நிமிடங்கள் தான் தேவதை, புது வாழ்வை ஏற்க தூக்கம் அவளை ஏந்திக் கொண்டது. நேரம் நள்ளிரவாகி விடியலை நோக்கி கொண்டு இருண்ட இரவாக இருந்தது. எப்படி விடிந்ததோ தெரிய வில்லை. திண்ணையில் வெளிச்சம் திடீர் என ம்ம்… தாய் சுபைதா,

“ருஷா.. ருஷா…. ரோசன்… ரோசன்… எழும்புங்க ரெண்டு பேரும்…”

வெளிச்சம் கண்டு கண் திறந்த ருஷா தாயின் குரல் கேட்டும் தூக்க கலக்கத்தில் கண் அயர,

“ருஷா இன்றைக்கு உனக்கு கல்யாணம் நியாபகம் இருக்கா?”

என்ற தாயின் விடியல் வாசகம் கேட்டு, தூக்கம் பறந்த வழி தெரியாது கட்டிலில் எழும்பி நேரத்தை பார்த்தால் நேரம் மூன்று மணியை வரவேற்றது. கட்டிலை விட்டு எழும்பியவள், திடீர் என வாஷ் ரூம் சென்று குளித்து விட்டு தஹஜத் தொழ சென்றாள். தொழுது விட்டு வந்த ருஷா, தம்பியின் அறை சென்று பார்க்க எந்த கவலை இன்றி ஆழ்ந்து தூங்கி கொண்டு இருந்தான்.

“டேய் ரோசன் எழும்புடா, டைம் இல்ல,”

என்று சத்தமாக எழுப்ப,

“என்ன ராத்தா தூங்க கூட விடமாட்டியா”

என்று சொல்லி கொண்டு பெட்சீட்டை இன்னும் இழுத்து தலையை மறைத்து தூங்கினான்.

“டேய் இன்று என்னனு மறந்துடியா இண்டைக்கு ராத்தாக்கு வெட்டிங் டா…”

என்ற சத்தம் கேட்க தூக்கம் பறந்து கண் விழித்தான். எழும்பிய ரோசன் நேராக வாஷ் ரூம் சென்று குளித்து விட்டு வரும் போது சுபஹ் அதான் சொல்ல, மச்சான் அனுப்பிய புது உடுப்பை அயன் பண்ணி அன்பாக ஏந்தி வந்த ருஷாவின் முகம் கண்டு கண் குளிர்ந்தான்.

“என்ன ராத்தா உங்க காவின் போல சுபஹ் தொழுதுட்டு,”

“ம்ம்.. இப்போ ஏன் என்ன கிட்ட ஸ்டார்ட் பண்ணுற…”

“ச்சே.. உங்க பேஸ் இன்று கடும் டிப்பரன்ட் சோவ்… அதான் கேட்டன்.”

“ரோசன் அதான் சொல்லிட்டு… உடுப்பு எல்லாம் போட்டுடியா? நேரம் இல்லலா?”

“ஆஹ் இன்னா ரெடி மா…”

“தா.. போ… அந்த பக்கம்…”

“ம்ஹூம்…”

என்று சொல்லி அவள் கையில் இருந்த அவனின் அயன் பண்ணிய உடுப்பை சுண்டி பறித்தான். அந்த சுண்டுதல் அவன் சகோதரி ருஷாவின் மேல் இருந்த அன்பின் செல்ல சுண்டுதலாய் இருந்தது. தம்பியின் செல்ல கோபம் கண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அந்த நகர்வு பிரியா விடையாய் அமைய போவதை உணர்ந்து.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

ருஷா, உம்மா என்று கட்டி விம்மி அழுது கொள்ள ரோசனும் அழ, சுபைதா தன் கண்ணீரை கானல் நீராய் மறைத்து இரு செல்ல குழந்தைகளுக்கும் ஆறுதலாய் மாறினார். தன் குடும்பம் விட்டு புது ஊர்…

ருஷா, உம்மா என்று கட்டி விம்மி அழுது கொள்ள ரோசனும் அழ, சுபைதா தன் கண்ணீரை கானல் நீராய் மறைத்து இரு செல்ல குழந்தைகளுக்கும் ஆறுதலாய் மாறினார். தன் குடும்பம் விட்டு புது ஊர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *