எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 22

  • 21

நேரம் நகர வில்லை உருண்டு கொண்டு இருக்கின்றது என்று வீட்டின் பெரியார்களின் புராணம்.

“என்னடி புள்ள இவோலோவு கெதியா நேரம் போன”

என்று பற்களே இல்லாத பொக்கை வாயால் பாத்திமாவின் கணவரின் உம்மம்மா சொல்ல, வேலை செய்து கொண்டு இருந்த ருஷாவின் உம்மா, சாரா, சித்தி அண்டி, பாத்திமாவின் மாமி என்று பலர் களைப்பு மறந்து சிரித்து கொண்டு வேலையையும் செய்து கொண்டு இருக்க லுஹர் அதான் சொல்லியது. அதான் ஓசை கேட்டு ஆண்கள் வட்டாரம் தொழ செல்ல, பெண்கள் வட்டாரம் சமையல் வேலைகளை அவசரமாக முடிக்க நினைத்தனர். பெண்கள் அனைவரும் ஒருத்தர் ஒரு வேலை பார்க்க மற்றவர்கள் தொழ சென்று இவ்வாறு அனைவரும் வேலையையும் தொழுகையும் முடித்து. சாப்பாட்டையும் சபையில் வைத்து ருஷாவுக்கும் பாத்திமாவுக்கும், றுக்சிக்கும், ரூமுக்கு சாப்பாட்டை அனுப்பி விட்டு, ஆண்களின் வருகைக்கு காத்து கொண்டு இருக்க, அவர்களும் வர அனைவரும் சந்தோசத்தோடு சாப்பிட்டு முடித்து நேரம் நெருங்கியதால் அனைவரும் ரெடி ஆக சென்று விட்டார்கள்.

மாப்பிள்ளை தோழர்கள் மாப்பிள்ளையை ரெடி பண்ணி கொண்டு இருக்க, இங்கு ருஷாவையும் ரெடி பண்ணி கொண்டு இருந்தார்கள். அசர் அதான் சொல்ல ருஷா உழுவுடன் இருந்ததை சொல்லி அசர் தொழுது விட்டு வருவதாக மதினியிடம் முறையிட்டாள். இதை கேட்ட றுக்சியும் பாத்திமாவும் ருஷாவின் மார்க்கம் கண்டு திகைத்து நின்றனர்.

இன்றைய சமூகத்தில் காலையில் அலங்காரம் செய்து இரவு வரை தொழுகை மறந்து திரோனில் இருக்கும் பெண்களுக்கு ருஷா ஒரு மார்க்க முன்மாதிரி என்று றுக்சி சொல்ல இப்படி ஒரு மருமகள் வீட்டுக்கு வந்ததை நினைத்து பெருமைப்பட்டாள். ஒரு பெண் நான்கு விடையங்களுக்கு திருமணம் முடிக்க படுகின்றாள் அழகு, செல்வம், குடும்பம், மார்க்கம். அதுல மார்க்கத்தை முன்னுரிமை படுத்த சொல்லிருக்காங்ண்க நபியவங்க. ஆனா அந்த நாலும் சேர்ந்த பெண் தான் ருஷா என்று தன் தம்பியின் வாழ்வு சுவர்க்கம் நோக்கி செல்ல துஆ செய்து அறையை விட்டு கீழே அழைத்து வந்தார்கள்.

எல்லாரும் ரெடி ஆகி பொண்ணை மாடியில் இருந்து பாத்திமாவும் றுக்சியும் அழைத்து செல்ல சின்ன தோழி பெண்கள் முன்னாள் செல்ல வீடும் சன கும்பலாய் கொதித்தது. அந்நிய ஆண்கள் தன்னை இவ்வாறு அலங்காரத்தோடு பார்க்க கூடாது ,வீண் வேலைகள் தன் திருமணத்தில் இடம்பெற கூடாது என்று நினைத்த ருஷா மாடியில் இருந்து இறங்கும் போது திகைத்து நின்றாள். போட்டோக்களையும் வீடியோக்களையும் கண்டு என் எண்ணம் போல் ஆகிவிட்டதே என்று இறைவனை நினைத்து கண் கலங்கி மெது மெதுவாக மாடியை விட்டு இறங்கி வந்தாள்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

நேரம் நகர வில்லை உருண்டு கொண்டு இருக்கின்றது என்று வீட்டின் பெரியார்களின் புராணம். “என்னடி புள்ள இவோலோவு கெதியா நேரம் போன” என்று பற்களே இல்லாத பொக்கை வாயால் பாத்திமாவின் கணவரின் உம்மம்மா சொல்ல,…

நேரம் நகர வில்லை உருண்டு கொண்டு இருக்கின்றது என்று வீட்டின் பெரியார்களின் புராணம். “என்னடி புள்ள இவோலோவு கெதியா நேரம் போன” என்று பற்களே இல்லாத பொக்கை வாயால் பாத்திமாவின் கணவரின் உம்மம்மா சொல்ல,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *