எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 24

  • 20

ம்ம் அந்த குரலில் ஒரு இழப்பின் ஓலம்… அது ரோசன்,

“ராத்தா.. ராத்தா..”

“ஏன் ரோசன் பதட்டமா பேசுற வீட்ட போய் ஒரு கிழம தானே…”

“ராத்தா…”

என்று ஓ என அலறிய ரோசன். சுபைதாவுக்கு வருத்தமோ என்று ருஷா நினைத்து,

“என்ன ரோசன் சொல்லு உம்மாக்கு என்ன பிரசேர் கூட்டிட்டா?”

“இல்ல ராத்தா.. உம்மா.. உம்மா… மௌத்தாகிட்டாங்க…”

கேட்டது தான் தாமதம் “உம்மா” என்று கத்திக் கொண்டு கீழே விழுந்தாள்.

“ருஷா”

என்று சாரா ஓடி வர, சாராவின் கையில் விழுந்தாள். சோபாவில் ருஷாவை சாய்த்து விட்டு தண்ணீர் தெளித்து ருஷாவை எழுப்ப விம்மி அழுதாள்.

“என்ன ருஷா என்ன மா சொல்லு…”

“அண்டி உம்மா மௌத்தாகிடாங்களாம்.”

ருஷா சொன்னதை கேட்ட சாரா,

“இன்னாலில்லாஹ்”

என்று சொல்லி ருஷாவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு,

“ருஷா எழும்புங்க நாங்க ஆட்டாவுல போவம். நேரமில்ல, நிசாத்துக்கு கோள் பண்ணுவம் அவரு வரட்டும்”

என்று நிசாத்துக்கு கோள் பண்ணி நடந்தவற்றை கூறி விட்டு ருஷாவும் சாராவும் ஓட்டோவில் சேரி வீட்டுக்கு சென்றனர். ஆடோவில் செல்லும் போதே பாத்திமாவுக்கு சாரா விசயத்தை சொன்னார். வீடு நிறைய மக்கள் திரள். ஓட்டோவை விட்டு இறங்கிய ருஷா தன் தாயின் ஜனாஸா அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். கத்தி ஒப்பாரி வைப்பது மார்க்கத்துக்கு உகந்தது இல்லை என்றதை உணர்ந்த ருஷா தன் தம்பின் தலைக்கோரி தன் தாயை நினைத்து உள்ளதால் உருகிய கண்ணீரோ அவள் கண்ணில் கங்கையாய் ஓடியது. நேரம் சென்றது. குளிப்பாட்ட சொல்லி சத்தம் கேட்டதும் தன் தாயை அவளே குளிப்பாட்டி கபன் இட்டாள்.

ஜனாஸாவை தூக்க இடம் கொடுக்க எழும்பிய ருஷா மயக்கம் போட்டு கீழே விழ ருஷா என்று ஜனாஸாவை தூக்கிய நிசாத் கத்த அவளை மற்றவர்கள் தாங்கி பிடிக்க ஜனாஸா வீட்டை விட்டு கப்ரு வாழ்க்கைக்காக எடுத்து செல்ல பட்டது. மயங்கிய ருஷாவை எழுப்பி அவளுக்கு தண்ணீர் புகட்டி அவளை கட்டிலில் தூங்க வைத்தார் சாரா. ஜனாஸா வீட்டை விட்டு சென்றதும் ஆட்களும் வீட்டை விட்டு செல்ல வீடு சாராவோடும் ருஷாவோடும் பாத்திமாவோடும் இன்னும் ஒரு சிலருடனும் வீடு நிசப்தம் பூண்டது.

அடக்கம் செய்து விட்டு நிசாத் ரோசன் இன்னும் சிலர் வர சோடா பகிர பட்டது. அதன் பிறகு ஆண்கள் செல்ல, ருஷாவின் குடும்பத்திடத்தோடு தனிமை கொண்டது சேரி வீடு.

இவ்வாறு சோக கடலில் இரண்டு மாதங்கள் கடந்தது, சேரியை விட்டு தங்கள் வீட்டுக்கு வந்து மூன்று நாள் இருக்கும் தன் தாயின் இறப்பை கொஞ்சம் மறந்தாலும் அந்த எண்ணம் அவளை விட்டு செல்ல வில்லை. தன்னுடைய மனைவியின் மனதை ஆறுதல் படுத்த ஒரு சுற்றுலாவை ஏற்பாடு செய்தான் நிசாத். இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு கட்டிலில் அழுகை உடன் ருஷா,

“ருஷா… ருஷா”

“ஆஹ் வாங்க”

என்று கண்ணை துடைத்து விட்டு எழும்பி அமர்ந்தாள். தன் மனைவியை உணர்ந்தவன் அவன்.

“என்ன ருஷா அழுதியா ஆஹ்”

மௌனம் காத்தாள். பின் மெதுவாக தலை ஆட்டினாள்,

“ஏன் மா அழுதிங்க, எல்லாம் அல்லாஹ்ட நாட்டம் யாரும் இங்கயே வாழ வரல மறுமைக்கு உழைக்க வந்திருக்கம்.”

இந்த பேச்சு ஆறுதலாய் இருக்க தன் கணவனின் மடியில் தன் தலை பதித்தாள், சொல்ல வந்த ரிப் விசயத்தை அவ்வாறே தேவை இல்லை என்று தன் மனைவியை தூங்க வைக்க அவளும் தன் கவலை மறந்து தன் நிசாத் மடியில் துயில் கொண்டாள். தூங்கிய மனைவியை சரியாக கட்டிலில் தூங்க வைத்து விட்டு தானும் காலையில் ஆபிஸ் போக வேண்டும் என்று அவனும் தூங்கி விட்டான்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

ம்ம் அந்த குரலில் ஒரு இழப்பின் ஓலம்… அது ரோசன், “ராத்தா.. ராத்தா..” “ஏன் ரோசன் பதட்டமா பேசுற வீட்ட போய் ஒரு கிழம தானே…” “ராத்தா…” என்று ஓ என அலறிய ரோசன்.…

ம்ம் அந்த குரலில் ஒரு இழப்பின் ஓலம்… அது ரோசன், “ராத்தா.. ராத்தா..” “ஏன் ரோசன் பதட்டமா பேசுற வீட்ட போய் ஒரு கிழம தானே…” “ராத்தா…” என்று ஓ என அலறிய ரோசன்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *