எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 26

  • 8

நிசாத் குளித்து வர, ரெஸ்ஸை கொடுத்து விட்டு சாப்பாட்டையும் கொண்டு வந்து வைக்க நிசாத் அவசரமாக ரெடி ஆகுவதை பார்த்து தன் கணவனுக்கு சாப்பாட்டை அன்போடு ஊட்டி விட்டு கொண்டு இருந்தாள் ருஷா.

“ருஷா போதும் டைம் இல்ல லேட் ஆகிட்டுடா…”

“சரி இந்த ஒரு வாய் சாப்பிடுங்க…”

“ம்ம் சரி…”

“இன்னாங்க தண்ணி குடிங்க…”

“ஆஹ் ருஷா அந்த பய்ல், எண்ட் அந்த பென்ரைவ் எடுதாங்க…”

“ஆஹ் இன்னாங்க…”

“சரிடா ஓவர் லேட் ஆகிடு போய் வாரன்”

என்று ஸலாத்துடன் தன் இரக்க முத்தம் தன் குழந்தை மனைவி நெற்றியில் பதித்து ருஷாவின் வழி அனுப்பலுடன் விடை பெற்றான். நிசாத்தை அனுப்பி விட்டு தன்னுடைய பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறாள் ருஷா.

“ருஷா….”

“ம்ம்ம்… சொல்லுங்க அண்டி, நான் வெளில..”

“சாப்பிட வாமா.”

“பசிக்க இல்ல அண்டி கொஞ்சம் லேட் ஆஹ் சாப்பிடுறன்,”

“டைம் இப்போ ஒன்பது மணி ஆகுது. இதை விட என்ன லேட் ருஷா..”

“இன்னா சாப்பாடும் வெச்சிடன், வாங்க கெதியா,”

“ம்ம் சரி”

என்று வந்து அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் தன் மாமியாருடன். இடையில் போதும் என்று எழும்பியவள் கை கழுவி விட்டு வரும் போது வாந்தி எடுக்க, சாரா கையை கழுவி விட்டு ருஷாவை பிடிக்க தலை சுற்றுது அண்டி என்று தோளில் சாய்ந்தாள். சுடு தண்ணி கொஞ்சம் கொண்டு வாரன் ருஷா. கொஞ்சம் இதில தூங்குமா,

ம்ம்..”

அமைதியாய் ருஷா சொல்ல, சற்று நேரத்தில் சுடு தண்ணி கொண்டு கொடுத்தார் சாரா.

“ருஷா இதை குடிச்சுட்டு முகம் எல்லாம் கழுவிட்டு வாங்க டொக்டர்கிட போய் வருவம்.”

“இல்ல அண்டி சாப்பாடு ஒற்று போக இல்ல அதான் நான் கொஞ்சம் தூங்கினா சரி அண்டி.”

“இல்ல மகள் நான் பாத்திமாக்கு கோள் பண்றன். முதல் வாங்க”

என்று வாஷ் ரூம் கூடிச் சென்றார் சாரா, ருஷா வாஷ் பண்ணி ரெடி ஆகி வருவதுக்குள் பாத்திமாவும் வர பாத்திமா வந்த ஓட்டோவிலயே மூன்று பேரும் டொக்டரிடம் சென்றனர். ருஷா செக் பண்ண உள்ளுக்குள் போக அவளுடன் பாத்திமாவும் போனாள், நடந்தவை ருஷா சொல்ல செக் பண்ணி விட்டு, டொக்டேர் பாத்திமாவை பார்த்து,

“யாரு இவங்க உங்களுக்கு…”

“இவங்க எங்கட தம்பிட வைப்…”

“ஆஹ் ,,மாஷா அல்லாஹ்… கொங்கராஜுலேசன் ருஷா…நீங்க பிரக்னண்ட் ஆஹ் இருக்கீங்க மா.. மெடிஸின் , கிளினிக் எல்லாம் போட்டு தாரன் கொஞ்சம் கவனமா ஹேண்டில் பண்ணிகோங்க ருஷா…”

அளவில்லாத சந்தோசத்தில் ருஷாவும் பத்திமாவும் வெளியேறினர்.

“ருஷா என்ன மா டொக்டர் என்ன சொன்ன.”

“உம்மா நமம்டா வீட்ட இன்னொரு குட்டி ருஷா பொறக்க போறாமா”

என்று பாத்திமா சொல்ல,

“என்னது அல்ஹம்துலில்லாஹ் ருஷா. சந்தோசமா இருக்குமா”

என்று சொல்லி ருஷாவை அனைத்து முத்தமிட்டார் சாரா. மூன்று பேரும் வீட்டுக்கு செல்ல தன் கணவனிடம் சொல்ல வேண்டும் அவர் தன் அருகில் இப்போது இருக்க வேண்டும் என்று ருஷாவின் மனது அடித்துக் கொண்டது.

“என்ன மா யோசினைல வார…”

“இல்ல அண்டி ஹபி கிட்ட பேசணும் போல இருக்கு.”

“அவர் வரட்டும் ருஷா வீட்ட, பிறகு சொல்லலாம்.”

என்று பாத்திமா ஒரு திட்டத்தோடு சொல்ல, அதை அறியாது ருஷா மௌனம் காத்தாள். வீட்டுக்கு வந்து சேர மூன்று பேரும் ஆச்சசரியபட்டனர்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

நிசாத் குளித்து வர, ரெஸ்ஸை கொடுத்து விட்டு சாப்பாட்டையும் கொண்டு வந்து வைக்க நிசாத் அவசரமாக ரெடி ஆகுவதை பார்த்து தன் கணவனுக்கு சாப்பாட்டை அன்போடு ஊட்டி விட்டு கொண்டு இருந்தாள் ருஷா. “ருஷா…

நிசாத் குளித்து வர, ரெஸ்ஸை கொடுத்து விட்டு சாப்பாட்டையும் கொண்டு வந்து வைக்க நிசாத் அவசரமாக ரெடி ஆகுவதை பார்த்து தன் கணவனுக்கு சாப்பாட்டை அன்போடு ஊட்டி விட்டு கொண்டு இருந்தாள் ருஷா. “ருஷா…