எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 27

  • 12

சோபாவில் அமர்ந்து கொண்டு நிசாத் ஏதோ லெப்டோப்பில் வேலை செய்து கொண்டு இருந்தான்.

“என்ன நிசாத் இவ்வளவு ஏர்லி ஆஹ் வந்துருக்கிங்க,”

“ஹா…. நான் இப்போ தான் வந்தன் , ஆஃபீஸ்ல மீட்டிங் கென்சல் அதான் ஹோம் வந்தன்.”

“நீங்க எப்போ வந்த மூணு பேரும் கடும் ரவுண்டிங்… வை வாட் ஹெப்பெண்ட்,”

“உங்கட வைப் மயங்கி உம்மா எனகி கோள் பண்ணி கொஸ்பிட்டல் போய் வாரம்,”

டைப் பண்ணிய நிசாத், ருஷா என்ன டா என்ன நடந்த, அழகிய புன் சிரிப்பு அவள் பூக்க,

“என்ன ருஷா நான் பதறி போய் கேட்கன் நீங்க சிரிக்கிங்க”

“ஆஹ் ஒன்னும் பதற தேவல பிரதர்,”

“என்ன ராத்தா மயங்கின என்கிங்க ஆனா என்ன பயபிட வேணா என்கிங்க,

மகன்…”

“என்ன மா, என்னனு பேசுங்க,”

“உங்கட ருஷாம்மா, இன்னொரு குட்டி ஏஞ்செல பெத்து தர போறா,”

அளவில்லா சந்தோசம் நிசாத்தை அரவணைக்க, ருஷா என்று தன் மனைவியை கட்டி தழுவி முத்தமிட்டு கொண்டான். சிவந்த கண் கண்ணீரால் போர்த்தியது,

“டேய் நிசாத் ஏன்டா அழுராய்,”

“இல்ல ராத்தா ஒன்னும் புரியல ரொம்ப சந்தோசமா இருக்கு,”

“சரி நிசாத் அல்ஹம்துலில்லாஹ்!”

“சரி ருஷா கொஞ்சம் ரெஸ்ட் எடுகடும் நீ ரூமுக்கு கூடிடு போ நிசாத்,”

“சரி ராத்தா…”

“ருஷா வாஷ் ஆகி வாங்க,”

என்று விட்டு ரூமில் தன் மனைவிக்காய் காத்திருந்தான். ருஷா வந்தவள்,

“ஹெலோ மை டியர் வாட் இஸ் திஸ்…”

“ஆஹ் பார்த்தா தெரியல”

“இல்லயே தெரியல…”

“என்ன மேடம் நக்கலா”

“ஆஹ் சரி சரி… நீங்க எப்போங்க டீ எல்லாம் போட நம்ப முடில”

“மை டியர் சிட் டவ்ன் பெஸ்ட்…”

என்று அவள் இரு கைகளையும் பிடித்தது இருப்பாட்டினான்.

“சொல்லுங்க சேர்,”

“இப்போ இந்த அன்பான டீய டயட் ஆஹ் இருக்குற நீங்க குடிங்க,”

டீயை குடித்து விட்டு, வாயை தன் கையால் துடைத்தது விட்டு

“இப்போ சொல்லுங்க”

“ருஷா உனக்கு இப்போ என்ன எதிர் பார்ப்பு மா இருக்கு…”

“எனக்கு என்ன எதிர் பார்ப்பு ஹபி நதிங் டியர்…”

“இப்போ என் தங்கம் என்க தங்கத்த சும்மக்கா அது அல்லாஹ்ட அருளால இந்த உலகத்துக்கும் மறுமைக்கும் நல்ல குழந்தையா பிறக்கணும், சோ இனி என் பேபி ருஷா ரொம்ப ரிலேக்ஸ் ஆஹ் இருக்கணும், சோவ்…”

“ம்ம் சோவ்… அப்ரோம் சொல்லுங்க,”

“நான் ஆபிஸ் லீவ் போட போறன்.”

“அல்லாஹ் என்ன இங்க அண்டி இருக்காங்க மதினி வருவாங்க நான் சேப் ஆஹ் இருப்பன் நீங்க வெர்க் பாருங்க ஹபி,”

“இல்லடா, என் ஏஞ்செல் எங்க ஏஞ்செல பெத்து எடுக்கும் வர என் ஏஞ்செல நான் சுமக்க போறன்

“என்னது ஹலோ இந்த பாக்கியம் ஜஸ்ட் லேடீஸ்க்கு மட்டும் தான் பா… ஹீ … ஹீ…”

என்று கிண்டல் செய்தாள்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

சோபாவில் அமர்ந்து கொண்டு நிசாத் ஏதோ லெப்டோப்பில் வேலை செய்து கொண்டு இருந்தான். “என்ன நிசாத் இவ்வளவு ஏர்லி ஆஹ் வந்துருக்கிங்க,” “ஹா…. நான் இப்போ தான் வந்தன் , ஆஃபீஸ்ல மீட்டிங் கென்சல்…

சோபாவில் அமர்ந்து கொண்டு நிசாத் ஏதோ லெப்டோப்பில் வேலை செய்து கொண்டு இருந்தான். “என்ன நிசாத் இவ்வளவு ஏர்லி ஆஹ் வந்துருக்கிங்க,” “ஹா…. நான் இப்போ தான் வந்தன் , ஆஃபீஸ்ல மீட்டிங் கென்சல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *