பாசமான தம்பி சுஜித் இற்கு அண்ணாவின் கண்ணீர் மடல் இது!

  • 8

தம்பி சுஜித்
நீ சூதானமாய்
இருந்து இருக்கலாம்
இந்த சுயநல
உலகில்!

பல்லாயிர மானிடர்களின்
பலதரப்பட்ட பிராத்தனைகளும்
வீணாய்ப் போனதே
இன்று!

நீ சென்று
வா சுஜித்
நாளை நாங்களும்
வரக் கூடும்!

ஆழ் கிணற்றினால்
அநாதையாக்கிப் போனாய்
எங்களை இன்று!

உன் மேல்
பரிதபங்கள் கொண்டவர்களுக்கு
புரியாமல் போய்
விட்டது நீ
ஓர் சரித்திரம்
என்பது!

தம்பி சுஜித்
உன் பிரிவில்
தானடா தெரிகின்றது
என்னருகில் நீ
இல்லாமலும் நான்
கொண்ட பாசத்தின்
வலிகள்!

அநாதையாக்கிப் போனாய்
பெற்றோரை இன்று!
அநியாயம் செய்து
விட்டன் இறைவன்!

எங்கள் புலம்பல்
அவனிடத்தில் கேட்கவில்லை
என்றாலும் பரவாயில்லை
தாய்மையின் கதறல்
கேட்கவில்லையா இறைவா
உன்னிடத்தில்?

என்ன பேசுவது,
என்ன எழுதுவதும்
எனத் தெரியவில்லை
ஆர்யூர் தம்பி
சுஜித் இன்
பிரிவால்!

பொத்துவில் அஜ்மல்கான்

தம்பி சுஜித் நீ சூதானமாய் இருந்து இருக்கலாம் இந்த சுயநல உலகில்! பல்லாயிர மானிடர்களின் பலதரப்பட்ட பிராத்தனைகளும் வீணாய்ப் போனதே இன்று! நீ சென்று வா சுஜித் நாளை நாங்களும் வரக் கூடும்! ஆழ்…

தம்பி சுஜித் நீ சூதானமாய் இருந்து இருக்கலாம் இந்த சுயநல உலகில்! பல்லாயிர மானிடர்களின் பலதரப்பட்ட பிராத்தனைகளும் வீணாய்ப் போனதே இன்று! நீ சென்று வா சுஜித் நாளை நாங்களும் வரக் கூடும்! ஆழ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *