மதங்களை தாண்டி மனதில் பதிந்தவன்

  • 8

நீ பிறந்த போது தெரியாதது
நீ வளர்ந்த போது அறியாதது
நீ சிரித்த போது புரியாதது
நீ விழுந்த போது தெரிந்தது.

80 மணித்தியாலதில் மறைந்திருக்கும்
மனோநிலை உனக்கும் இறைவனுக்கும்
இடையில் ஊசலாடி உயிர் பிரிந்திருக்கும்
அன்றே என்றால் இதை விட மனம் தவித்திருக்கும்

இன்று கொஞ்சம் உன் இழப்பு கனத்திறுக்கும்.
இறப்பின் விமர்சனம்
உன்னை உயிர்பெற போவதுமில்லை
பெற்றோருக்கு ஆறுதல் அளிப்பாதாகவும் இல்லை

உன் பிறப்பு சாதாரணமாய் இருந்தாலும்
உன் இறப்பு சாதனையாய் இருந்தாலும்
இன்னொரு சுஜித் இறக்காமலும்
விழுந்தாலும் உயிரோடு காப்பாற்றவும்
நீ ஒரு அனுபவப்பாடமாக
வாழ்ந்து கொண்டிருப்பாய்

ஒவ்வொரு விடியலும் உன்னை பற்றிய
செய்திகளில் ஆரம்பித்தது
நாளை உன் விடியல் இறைவனிடம்
இருந்து ஆரம்பிக்கும்

ஆனாலும் நீ அதிஷ்டசாலி தான்
இறைவனை நெருங்கிவிட்டாய்
இறை அருளும் பெற்றுவிட்டாய்
உன் பெயரும் உலகமே மொழியவிட்டாய்
இன மதம் தாண்டி ஆழ்மனதில் பதிந்துவிட்டாய்

Nifra Farooque

நீ பிறந்த போது தெரியாதது நீ வளர்ந்த போது அறியாதது நீ சிரித்த போது புரியாதது நீ விழுந்த போது தெரிந்தது. 80 மணித்தியாலதில் மறைந்திருக்கும் மனோநிலை உனக்கும் இறைவனுக்கும் இடையில் ஊசலாடி உயிர்…

நீ பிறந்த போது தெரியாதது நீ வளர்ந்த போது அறியாதது நீ சிரித்த போது புரியாதது நீ விழுந்த போது தெரிந்தது. 80 மணித்தியாலதில் மறைந்திருக்கும் மனோநிலை உனக்கும் இறைவனுக்கும் இடையில் ஊசலாடி உயிர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *