இரு காண்டங்கள்

ரெகிங் என்ற காண்டம் கடந்து
ஸோசியல் எனும் புதுவோர்
அத்தியாயத்தில் நாம் இன்று….

சீனியர்மார் என்றாலே ஒருவித
பயத்தோடு அடிபணிந்தோம் அன்று,
இன்றோ மிடுக்குடன் நிமிர்ந்த
நடையுடனே…

சீனியர்ஸ் சிலகாலமாய் ரெகிங் என்ற
பெயரில் புரிந்துணர்வுப் போராட்டம்
நடத்தினராம் அன்று…

இன்றோ ஸோசியல் நாமத்தை
உச்சரித்து உச்சிகுளிர வைத்ததை
சொல்ல வார்த்தையில்லை….

அதட்டல் பேச்சுக்களும், மிரட்டும்
பார்வையும் கொண்ட
வேற்றுலக வாசிகளாய் தெரிந்த சீனியஸ்

இன்று மயக்கும் புன்னகையுடனும்
மாறாத கனிவுடனுமாய் காண்கையிலேஉள
ம் மகிழ்ச்சியில் பிரவாகித்ததோ..

வெயில்மழை போல கோடைபனி போல
நமக்கு ரெகிங்ஸோசியல் நாமங்கள்….

சீவனுள்ள வரை
சீனியர்மாரை மறந்திடோம்…
ஸோசியல் நமது
வானில் இன்று விடிந்தது…

பல்கலையிலே பலதும் பட்டதில்
ரெகிங் என்றதும் ஒன்றெனவே
எடுத்து ஸோசியல் எனும் புதுவழியை
போற்றிடுவோம்…

வாழி….. சீனியஸ்…
வாழி ஸோசியல்…

Rifdha Rifhan
SEUSL

Leave a Reply

Your email address will not be published.