காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 93

  • 12

“என்னடா சொல்றே, அந்த ஆளை காண்டக்ட் பண்ண முடியல என்றாயே.. இப்போ எப்படி கண்டுபிடிச்சே?”

என கேட்டாள் டிடானியா.

மரபணு மாற்றம் பற்றின பரிசோதனைல யாராரு எக்ஸ்பேர்ட் என்னு நெட்ல சும்மா பார்த்துட்டு இருந்தேன். இந்த ஆளோட ஆர்டிகல் ஒண்ணு கண்ணுல பட்டது. அப்படியே சும்மா கொஞ்சம் அதுக்குள்ளார தேடிப்பார்த்தேன் கிடைச்சிடுச்சு.

என்றான். ராபார்ட்,

“நீ கில்லாடி தான். அப்போ ஃபோன் போடு…”

என்றாள்.

“இவனு சரியான கஞ்சன் போல் தெரிகிறது. ஃபோன் நம்பர் எல்லாம் இல்ல. அவன் முன்னாடி இருந்த வீட்டு அட்ரஸ் மட்டும் கிடைச்சி இருக்கு.”

என ராபர்ட் சொல்ல,

“அது போதுமே இப்போவே கிளம்பி ஹாங்கொங் போயி அந்த ஆளை கண்டுபிடிச்சிடலாம்.”

என்றாள் மீரா,

“அந்த ஆளு கிட்ட மித்ரத்தோட ஆராய்ச்சியின் மோசமான விளைவுகளை எடுத்து சொன்னாலே போதும். அவர் கண்டிப்பாக நமக்கு உதவுவார்.”

என்றான் ஆர்தர், அப்போது கில்கமேஷ் ஜெனியை தாங்கிகொண்டு வெளியே வந்தான்.

“நாங்களும் உங்க கூட வருவோம்.”

என்றாள்.

“என்ன இந்த நிலையில் எப்படி அதெல்லாம் வேணாம் சும்மாவே உங்க ரெண்டுபேரையும் பொலிஸ் தேடுது இந்த ஊருக்குள்ள என்றா ஓகே.. இப்போ வேற நாட்டுக்கு இல்லியா போகணும்”

என்றாள் மீரா.

“எங்களை குற்றவாளிகளா ஒன்றும் பொலிஸ் தேடலியே…. காணாம போயி தானே தேடுது…”

என்றாள் ஜெனி,

“அதுவும் சரிதான் அப்போ உன்னோட திட்டம் என்ன?”

என்று டிடானியா கேட்டாள்.

“நாங்க முதலில் பொலிஸ் ஸ்டேஷன் போய் ஆகணும். அப்பறம் வந்து எல்லாம் சொல்லுறேன்.”

என்றாள்.

*************************

மயக்கத்தில் இருந்து எழுந்த என்கிடு, தான் கட்டப்பட்டு இருந்ததை பார்த்து ஆக்ரோஷமாக கத்தினான். மித்ரத் உள்ளே வந்தான்.

“என்ன இதெல்லாம் எதுக்காக என்னை கட்டிவெச்சிருக்கீங்க.”

என்று கத்தினான்.

“அவிழ்த்து விட்டால் கோபத்தில் அவனை கொல்ல போய்டுவியே.”

“ஆமா,.. என்னை அவிழ்த்து விடு… நான் அவங்க ரெண்டுபேரையும் என் கையால கொல்லனும்…”

என்றான்.

இல்ல என்கிடு. நீ எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிக்கிட்டு இருக்கே அவனை கொல்றதை விட இப்போ முக்கியமான விஷயம் என்னவென்றால் உன் உடம்பில் இருக்கிற விஷத்தை எடுக்கணும்.

என்றான் மித்ரத்.

“என்ன… என்ன ஒளர்ர… என் உடம்பில் என்ன விஷம்…?”

என்று திருப்பி கேட்டான்.

“அந்த கில்கமேஷ் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல அந்த ஜெனியை பயன்படுத்தி உன் சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்கான் அது இப்போ உன்னோட இதயத்தை ரொம்பவும் பாதிச்சி இருக்கு அதை ஆபரேஷன் பண்ணி சரிபண்ணனும். அதுக்கு நாம நாளைக்கே ஹாங்கொங் போறோம் .”

என்றான்.

“இதெல்லாம் எப்படி எப்போ நடந்தது?”

“அந்த பொண்ணு இங்க வந்தாளே அப்போ.”

என்றான்.

“முதலில் என் கட்டுக்களை அவிழ்த்து விட்டு அப்பறமா பேசு.”

என்றான். மித்ரத்தும் ஜாடைகாட்ட அவனுடைய ஆட்கள் அவற்றை அவிழ்த்து விட்டனர்.

“உன்னோட கோபம் எனக்கு புரியாது. தன்னால உன்னை கண்டிப்பாக ஜெயிக்க முடியாது என்னு தெரிஞ்ச கில்கமேஷ் இப்படி ஒரு குறுக்குவழிய பயன்படுத்தி இருக்கான். இந்த நிலையில் நிச்சயமாக உன்னால அவனோட சண்டை போட முடியாது. நீ அவனை கொல்லனும் என்றால் நான் சொல்றத செய்யணும்.”

என்றான்.

“நான் இப்போ என்ன பண்ணனும்?”

என்று கேட்டான் என்கிடு. மித்ரத் சிரித்து கொண்டே,

“தட்ஸ் மை பாய்!”

என்றான்.

*************************

பொலிஸ் ஸ்டேஷன் போய் விபரங்களை சொல்லி காணாமல் போனது தாங்கள் தான் என்றும் கடத்தல்காரர்களில் பிடியில் இருந்து தப்பித்து வந்தது போன்றும் ஸ்டேட்மெண்ட் கொடுத்து ஜெனியும் கில்கமேஷும் அவர்கள் தேடலில் இருந்து தப்பித்து கொண்டனர்.

“உங்க வீசா, டைம் முடிஞ்சி போச்சு. இனி சட்டப்படி நீங்க இந்த நாட்டுல தங்க முடியாது. எம்பசில சொல்லி உங்களை நாட்டுக்கு அனுப்புற வேலையை பார்க்க ஏற்பாடு பண்ணுறேம்.”

என்றார் பொலிஸ்காரர்.

“எம்பசில தங்குற அந்த நாலு நாளுக்குள்ள நாங்க எங்க நண்பர் வீட்டில தங்கி நாங்க போறதுக்கான ஏற்பாடுகளை பண்ணிக்கொள்ளுறோம் சேர்”

என்றாள் ஜெனி.

“சரி நாலு நாள்தான் உங்களுக்கு டைம், அதுக்கப்பறம். இங்க இருந்தா நாங்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.”

என்றார். அங்கிருந்து புறப்பட்டு விக்டர் வீட்டுக்கு வந்தனர்.

“ஜெனி, ஸ்டேஷன்ல எல்லாம் முடிஞ்சதா…?”

என கேட்டாள் மீரா.

“நீ சொன்ன மாதிரி மார்ட்டின் அங்கிள்ட்ட பேசி உங்க ரெண்டுபேருக்கும் ஹாங்காங் போக டிக்கட் புக் பண்ணிட்டேன்.”

என்றான் ஆர்தர்.

“பேர்பெக்ட், அந்த டாக்டர கண்டுபிடிச்சிட்டா போதும். அவரை வெச்சு மித்ரத்தை தோற்கடிச்சிடலாம்.”

என்றாள் ஜெனி.

“இந்த தடவை நாம ஜெயிக்க போறது உறுதி.”

என்ற கில்கமேஷ் அவன் கையை முன்னாடி நீட்ட எல்லாரும் அதன் மேல் கைகளை அடுக்கி கொண்டனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“என்னடா சொல்றே, அந்த ஆளை காண்டக்ட் பண்ண முடியல என்றாயே.. இப்போ எப்படி கண்டுபிடிச்சே?” என கேட்டாள் டிடானியா. மரபணு மாற்றம் பற்றின பரிசோதனைல யாராரு எக்ஸ்பேர்ட் என்னு நெட்ல சும்மா பார்த்துட்டு இருந்தேன்.…

“என்னடா சொல்றே, அந்த ஆளை காண்டக்ட் பண்ண முடியல என்றாயே.. இப்போ எப்படி கண்டுபிடிச்சே?” என கேட்டாள் டிடானியா. மரபணு மாற்றம் பற்றின பரிசோதனைல யாராரு எக்ஸ்பேர்ட் என்னு நெட்ல சும்மா பார்த்துட்டு இருந்தேன்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *