காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 96

  • 16

அது ஒரு பெரிய தனியாக அமைக்கப்பட்ட ஆய்வு கூடம். அங்கு என்கிடுவை காரில் இருத்தி விட்டு இருவரும் இறங்கி, கொஞ்சம் முன்னே நடந்தனர். இப்போது தான் மித்ரத் டாக்டர் கிட்ட உண்மையான டீலை பேச ஆரம்பித்தான்.

“இங்க பாருங்க டாக்டர்… உங்களுக்கு எவ்வளவு பணம் வேணுமானாலும் அதை என்னால தரமுடியும். இந்த ஆப்ரேஷன் மட்டும் செஞ்சிட்டா போதும். அவனுக்கு இதை பற்றி எதுவும் தெரியாது.”

என்றான்.

“இங்க பாருங்க மிஸ்டர் மித்ரத், பணத்துக்காக நான் எதையும் பண்ணுவேன்னு தெரிஞ்சி தான் நீங்க என்னை காண்டக்ட் பண்ணி இருக்கீங்க, இது ரொம்பவும் ரிஸ்க் ஆன ஆப்பரேஷன். பேஷண்ட் உயிரோட இருக்கும் போதே அவரோட இதயத்தை எடுக்க போறோம். ஆனால் எதற்காக மறுபடி உங்க இதயத்தை அவருக்கு வைக்க கூடாது என்று சொல்லுறீங்கன்னு புரியல”

என்றார்.

“உங்களுக்கு சொன்னா புரியாது டாக்டர். அவன் ரொம்ப ஆபத்தானவன். ஆ ஆனால் அவனுடைய இதயத்துக்கு மதிப்பு அதிகம். ஆப்ரேஷனுக்கு அப்பறம் அவன் உயிரோட இருந்தா நம்ம ரெண்டுபேரையும் கொன்னுடுவான்.”

என்றான் .

“வழக்கமா 45 நிமிஷ நேரத்தில் இதயமாற்று சிகிச்சை செஞ்சிடனும். கொஞ்சம் தாமதிச்சாலும் உங்க உயிருக்கும் சேர்த்து ஆபத்து, அதனால முதல் 15 நிமிஷத்தில் என்கிடு இதயத்தை வெளியே எடுத்து பத்திரப்படுத்தி அப்பறம் அடுத்த அரை மணி நேரத்தில் உங்களுக்கு அதை மாற்றிடனும். எப்படியும் அவன் சாவது உறுதி.”

என்றார் டாக்டர்.

“தாங்ஸ் டாக்டர்.”

“அப்போ என்கிடுவை உள்ளே கூட்டிட்டு வாங்க நான் போய் ஆப்ரேஷனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை பண்ணுறேன்.”

என்று விட்டு லேப்பிற்குள் நுழைந்தான். அதே நேரத்தில் விக்டர் புகாரை பரிசீலனை செய்த பொலிஸ் மித்ரத் ஹாங்காங்கில் இருப்பதை கண்டறிந்து இங்குள்ள போலீசுக்கு இன்போர்ம் பண்ண அவர்களும் மித்ரத்தை எயார்ப்போட்டில் இருந்து விசாரித்து அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தஇவர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.

“அட கடவுளே… இது மட்டும் நடக்கவே கூடாது.. எப்படி சரி. நாம என்கிடுவை காப்பாற்றி ஆகணும்.”

என்றாள் மீரா.

“இவன் இந்த அளவுக்கு கொடூரமான ஆளா இருக்கானே. இந்த டாக்டரும் நமக்கு உதவ மாட்டான்னு தோணுது.”

என்றான் ராபர்ட்

“இப்போ என்னபண்ணுறது?”

என்று கேட்டான் ஆர்தர்.

“நான் உள்ளே போய் அந்த டாக்டரை கொன்னுர்றேன்.”

என்று எழும்பினான் கில்கமேஷ்.

“அவசரப்படாதே! என்கிட்ட ஒரு பிளான் இருக்கு.”

என்றாள் ஜெனி.

“ஆர்தர் நீ மெயின் ஸ்விச்சை ஆஃப் பண்ணிட்டு வா… அவங்க என்ன ஏதுன்னு பாக்குறதுக்குள்ள நாம போய் உள்ளே இருக்குற எக்கியுப்மெண்ட் எல்லாத்தையும் நாசமாக்கிடுவோம்.”

என்றாள்.

“அங்க என்கிடுவும் மித்ரத்தும் இருக்கிறத மறந்துட்டியா?”

என மீரா கேட்டாள்.

“மீரா நீ மயக்க மருந்தை ரெடியா வெச்சிரு. நாம ரெண்டுபேரும் என்கிடுவை சமாளிப்போம். கில்கமேஷ் நீ மித்ரத்தை பார்த்துக்கே ராபர்ட் நீ டாக்டரை கவனி”

என்று எல்லோரும் அவள் திட்டப்படி திடீரென ஆய்வுகூடத்தை நோக்கி சென்றனர்.

என்கிடு படுக்க வைக்கப்பட்டான். ஆனால் திடீரென கரண்ட் போனதும் மூவரும் தடுமாறினர்.

“என்னது இது பவர் கட்… இப்படி ஆனதே இல்லியே… இருங்க நான் மெயின் ஸ்விச்சை பார்த்துட்டு வரேன்.”

என்று விட்டு அங்கே செல்ல ஆர்தரும் ராபர்டும் சேர்ந்து டாக்டரை சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். டாக்டருக்காக காத்து இருந்த மித்ரத் அவர் வர தாமதிக்க அவனே போய் பார்க்க திரும்பிய போது அங்கே கில்கமேஷும், ஜெனியும் மீராவும் நின்று கொண்டிருந்தனர். அவன் அதிர்ச்சியோடு இவர்களை பார்த்தான்.

“நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?”

“உன்னோட டாக்டர் இப்போ எங்க கிட்ட மித்ரத். இனி உன்னோட ஆட்டம் செல்லாது.”

என்றான் கில்கமேஷ். அவன் குரலை கேட்டு கோபத்தில் என்கிடு கில்கமேஷை தாக்க வர மீராவும் ஜெனியும் அவனை மறித்தனர். மித்ரத் பிஸ்டலை எடுத்து ஆங்காங்கு சுட அவனோடு கில்கமேஷ் சண்டையிட்டான்.

“பொண்ணுங்க என்னு பார்க்கிறேன். இல்லேன்னா உங்க ரெண்டு பேரையும் இங்கேயே கொன்னுடுவேன். மரியாதையா நகருங்க.”

என்றான். டாக்டரும் இல்ல. இனி தன்னோட திட்டம் எதுவும் நடைபெறாது என்று புரிந்து கொண்ட மித்ரத், கில்கமேஷை ஒருவாறாக தள்ளிவிட்டு,

“எனக்கு உபயோகம் இல்லாதவன் உங்களுக்கு உயிரோட கிடைக்க விடமாட்டேன்.”

என்று ஆக்ரோஷமாக கூற அது என்கிடுவுக்கும் கேட்டு அவன் அதிர்ச்சி அடைந்து முடிவதற்குள் மித்ரத் என்கிடுவுக்கு சுட கில்கமேஷ் சரியாக அவனுக்கு முன்னாடி வந்து விழுந்தான். துப்பாக்கி ரவை அவனை துளைத்து செல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். கில்கமேஷை என்கிடு தாங்கி பிடித்தான். ஜெனி அலறினாள். அவளும் ஓடிப்போய் அவனை பிடித்தாள். வெளியே பொலிஸ் ஜீப்பின் சைரன்ஸ் சத்தம் கேட்டது. மித்ரத் சுதாரித்து கொண்டான். துப்பாக்கி சத்தம், ஜெனியின் அலறல் சத்தம் கேட்டு ஆர்தரும் ராபர்டும் டாக்டரை விட்டு விட்டு உள்ளே ஓடி வந்தனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அது ஒரு பெரிய தனியாக அமைக்கப்பட்ட ஆய்வு கூடம். அங்கு என்கிடுவை காரில் இருத்தி விட்டு இருவரும் இறங்கி, கொஞ்சம் முன்னே நடந்தனர். இப்போது தான் மித்ரத் டாக்டர் கிட்ட உண்மையான டீலை பேச…

அது ஒரு பெரிய தனியாக அமைக்கப்பட்ட ஆய்வு கூடம். அங்கு என்கிடுவை காரில் இருத்தி விட்டு இருவரும் இறங்கி, கொஞ்சம் முன்னே நடந்தனர். இப்போது தான் மித்ரத் டாக்டர் கிட்ட உண்மையான டீலை பேச…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *