காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 98

  • 10

“அதென்ன ஃபோன் கால்…”

என ராபர்ட் கேட்க, டாக்டர் கில்கமேஷுக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்ததால்,

“யாராவது எடுத்து நான் பிஸியா இருக்கேன்னு சொல்லிடுங்க.”

என்றார். ஜெனியும் ஆன்ஸ்வர் பண்ணி சொல்வதற்கிடையில் மித்ரத்தின் சிரிப்பு சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த ஜெனி உடனே லவுட் ஸ்பிகரில் போட்டாள்.

“என்ன டாக்டர், என்ன பண்ணிட்டு இருக்கே செத்துப்போன கில்கமேஷுக்கு இறுதி சடங்கா பண்ணு பண்ணு.”

என்றான்.

“டேய் என்னோட மீராவை என்ன பண்ண? அவ எங்க இப்போ?”

என ஆர்தர் துடித்தான்.

“ஆஹ்… எல்லாரும் அங்கதான் இருக்கீங்களா? அப்போ வசதியா போச்சு… உங்க மீரா… இப்போ என்கிட்ட தான் ஈரா….”

என்றான்.

“டேய் மித்ரத்… நான் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்னோட நண்பனை இப்படி பண்ண உன்னை சாவடிக்காம விடவே மாட்டேன்.”

என கத்தினான் என்கிடு.

“ஆஹ்… இப்படி எல்லாம் டென்ஷன் ஆக கூடாது. உங்களுக்கு வேண்டியவங்க என்கிட்ட வசமா மாட்டி இருக்கும் போது எப்படி நீங்க குதிக்கலாம். உங்களுக்கு மீரா உயிரோட வேனும் என்னா அந்த டாக்டரையும் என்கிடுவையும் என்கிட்ட ஒப்படைச்சிடுங்க.”

என்றதும் ஜெனி அதிர்ச்சியில்

“வாட்!!! நோ சான்ஸ்!”

என்று கத்த

“என்னடி, வாத்து கோழி என்னு கத்திக்கிட்டு இருக்கே நான் பலவருசமா போட்டே பிளான் எல்லாத்தையும் சொதப்பி என்னோட ஆசையில் மண் அள்ளி போட்டது. நீயும் உன்னோட நண்பர்களும் தானே.”

என்றவன் மீராவின் கையை ஒரு கூரிய ஆயுதத்தால் தாக்க அவள் அலறும் சத்தம் எல்லோருக்கும் கேட்டது.

“மரியாதையா அவள விட்டுடு மித்ரத். நீ தப்பு மேல தப்பு பண்ணுறே உன்னை பொலிஸ் தேடிக்கிட்டு இருக்கு தெரியும் தானே”

என்றான் ஆர்தர். அவனால் மீராவை துன்புறுத்துவதை தாங்க முடியவில்லை.

“இப்போ என்ன பண்ணுவீங்க கில்கமேஷ் செத்துட்டான். எனக்கு இதயமாற்று சிகிச்சை முடிஞ்சா தான் உங்களுக்கு மீரா முடிவு உங்க கைல.”

என்றான். என்ன செய்வது என புரியாமல் எல்லோரும் தவிக்க என்கிடு,

“நீ எங்க இருக்கேன்னு சொல்லு நானே வரேன். டாக்டரோட.”

என்றதும். ஜெனி,

“என்ன… இல்ல… அப்படி பண்ணாதே என்கிடு… அவனுக்கு அதுதான் வேணும்…”

என்றாள்.

“மீராவை காப்பாற்ற வேற வழி இல்லை. இவ்வளவு நாளும் தப்பாவே முடிவெடுத்துட்டேன். இனி சரியான முடிவை எடுத்து என் நண்பன் இழப்புக்கு ஈடு கட்ட போறேன்.”

என்றவன் மறுபடி மித்ரத் கிட்ட,

“எங்க இருக்கேன்னு சொல்லு…”

என்றான்.

“அந்த லேபில் இருந்து அரை மைல் தூரத்தில் ஒரு குவாட்டஸ் இருக்கு. டாக்டரும் நீயும் அங்க வந்திடுங்க. போலீசுக்கு தகவல் கொடுத்தா நான் மீராவை கொன்னுடுவேன். ஜாக்கிரதை என் ஆளுங்க இங்கதான் இருக்காங்க.”

என்று விட்டு ஃபோனை கட் பண்ணினான். அப்போது டாக்டர் கில்கமேஷ் இதயத்தில் இருந்த குண்டை வெளியே எடுத்து விட்டார். ஆனால் அவன் கான்ஷியஸ் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதை இவர்களுக்கு சொன்னார்.

“புல்லட்டை எடுத்துட்டேன். இனி இவனை காப்பாத்துறது கடவுள் கைல.”

என்றார். இவர்கள் இருபுறமும் தவித்தனர். ஒரு பக்கம் கில்கமேஷ் உயிர், மறுபக்கம் மீரா

“கடவுள் தான் காப்பாற்றனும்”

என்று டாக்டர் சொன்னதை கேட்டு ஏதோ ஐடியா வந்தவனாய். அப்போது என்கிடு அவனுடைய மோதிரத்தை அழுத்த அதிலிருந்து மறுபடி ஒளிவெள்ளம் பாய்ந்து செல்ல என்கிடு மறுகையால் கில்கமெஷின் மார்பில் கைவைத்தான். அதிசயமாக கில்கமேஷின் காயங்கள் தடமே இல்லாது மறைந்தன.

“என்னாச்சு?”

“இனி இவனுக்கு எதுவும் ஆகாது. ஆனா?”

“என்ன ஆனா.. நாங்க ரெண்டுபேரும் சாகாவரத்தை இழந்து சாதாரண மணிசங்க ஆகிட்டோம்.”

என்றான் என்கிடு. கில்கமேஷ் இன்னும் விழிக்க வில்லை.

“இவர் ஏன் இன்னும் எழும்பல… அப்போ”

என டாக்டர் கேட்டார்.

“அவனுக்கு ஒன்னுமில்ல…. ஓய்வுதான் அவசியம்…”

என்றவன் கையில் இருந்த மோதிரத்தை கழற்றி கில்கமேஷுக்கு போட்டு விட்டு,

“நீங்க வரவேண்டிய அவசியம் இல்லை. டாக்டர்! மீராவை அழைச்சிட்டு வரவேண்டியது என்பொறுப்பு.”

என்றான். இவர்கள் எவ்வளவு தடுத்தும் அவன் கேட்காமல் சென்றான். ஜெனிக்கோ மற்றவர்களுக்கோ என்ன செய்வது என புரியவில்லை. மித்ரத்தின் இடத்தை அடைந்து அந்த கதவை திறந்தான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“அதென்ன ஃபோன் கால்…” என ராபர்ட் கேட்க, டாக்டர் கில்கமேஷுக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்ததால், “யாராவது எடுத்து நான் பிஸியா இருக்கேன்னு சொல்லிடுங்க.” என்றார். ஜெனியும் ஆன்ஸ்வர் பண்ணி சொல்வதற்கிடையில் மித்ரத்தின் சிரிப்பு சத்தம்…

“அதென்ன ஃபோன் கால்…” என ராபர்ட் கேட்க, டாக்டர் கில்கமேஷுக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்ததால், “யாராவது எடுத்து நான் பிஸியா இருக்கேன்னு சொல்லிடுங்க.” என்றார். ஜெனியும் ஆன்ஸ்வர் பண்ணி சொல்வதற்கிடையில் மித்ரத்தின் சிரிப்பு சத்தம்…