காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 99

  • 16

அங்கு மித்ரத்தின் ஆட்கள் இருவர் இருந்தனர். மீரா கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தாள்.

“வா, உனக்காக தான் வெயிட்டிங். எனக்கு தெரியும் நீ வருவேன்னு நீயும் உன்னோட நண்பனும் தான் தியாகி வம்சமாச்சே.”

“மித்ரத்”

“ஆமா என்ன தனியா வந்திருக்கே.. டாக்டர் எங்கே?”

என சந்தேகத்துடன் கேட்டான்.

“உனக்கு நான் தானே வேணும். இதோ வந்துட்டேன். அவளை விட்டுடு.”

என்றான் என்கிடு.

“நீங்க ரெண்டுபேரும் இங்கேயே சாக போறீங்க.”

என்றவன் அவனது ஆட்களை ஏவி விட்டான். என்கிடு பலமறிந்து அவனை தாக்க மின்சார ஆயுதங்களை தயாராக வைத்திருந்தனர் மித்ரத்தும் அவனுடைய ஆட்களும், சண்டை ஆரம்பித்தது. அவர்கள் மூவருடனும் என்கிடு சண்டையிட்டான். ஆனால் இம்முறை சாதாரண மனிதனாக பலமுறை அவர்களிடம் தாக்கப்பட்டான். மித்ரத்துக்கே இது குழப்பமாக இருந்தது.

“என்னாச்சு என்கிடு உனக்கு… இது நீ இல்லையே… நீ இப்படி அடிவாங்க மாட்டியே!..”

என்று சொல்லி கொண்டே அவர்கள் மூவரும் சேர்ந்து அவனுக்கு கரண்ட் ஷாக் கொடுத்தனர். அப்படியே சுருண்டு விழுந்தான் என்கிடு.

“அவளை விட்டுடு”

என்று ரத்தம் சொட்ட சொட்ட முடியாமல் எழுந்து நின்றான் என்கிடு.

“உன்னோட இந்த உடம்பில் இன்னமும் தெம்பு இருக்கா.. இங்க இருந்து யாரும் உயிரோடு போக முடியாது.”

என்று மித்ரத் சொல்ல அப்போது.

“இங்க இருந்து நீதாண்டா உயிரோட போகமாட்டே..”

என்று ஒரு குரல் கேட்டது. அதை சொன்னது என்கிடு இல்லை. அப்போ யாரு என்று குழம்பிய போது சரியாக என்கிடுவுக்கு பின்னாடி இருந்து கில்கமேஷ் வெளியானான்.

மித்ரத்துக்கும் அவனது ஆட்களுக்கும் அது பெரிய அதிர்ச்சி. என்கிடு சந்தோஷத்தில் ,

“கில்கமேஷ்”

என்று சொல்ல பின்னாடி ஜெனியும் நண்பர்களும் சிரித்து கொண்டே கைகளால் வெற்றி சைகை செய்தனர். இப்போது என்கிடுவுக்கு புது தெம்பு பிறந்தது. கில்கமேஷ் மறுபடியும் அந்த மோதிரத்தை என்கிடுவுக்கு போட்டுவிட காயங்கள் எல்லாம் மறைந்து போனது. இருவரும் கைகோர்த்து கொண்டனர்.

“நோ..”

என்று மித்ரத் கத்தி கொண்டே இருவரையும் தாக்க ஓடி வர இருவரும் சேர்ந்து அவர்களை பந்தாடினார்கள். ஜெனியும் நண்பர்களும் மீராவை விடுவித்து கொண்டனர். மித்ரத்தின் ஆட்களையும் சேர்ந்து அடித்தனர். ராபர்ட் அவர்களை கட்டி போட்டான். மித்ரத்தின் எலும்புகள் எல்லாம் நொறுங்கின முகம் வீங்கி எழும்பியது. கடைசியாக இருவரும் சேர்ந்து அவனை சுருண்டு எழுந்திருக்க முடியாதவாறு அடித்து போட்டதும் ஹம்பாபாவை வதம் செய்த காட்சி எல்லோருக்கும் வந்து போனது.

“அவனை கொல்ல வேண்டாம்.”

என்று ஜெனி இருவரையும் தடுத்தாள்,

“என்ன சொல்றே… இவனெல்லாம் இருக்க இருக்க மக்களுக்கு ஆபத்து தான். இங்கேயே இவனை கொன்னுடலாம்.”

என்று என்கிடு சொன்னான்.

“இல்ல வாழ்க்கையில் நாம எடுக்குற தப்பான முடிவுகள் தான் நம்மள தப்பான பாதைக்கு அழைச்சிட்டு போகுது. இவன் ஒரு செத்த பாம்பு. இவனை கொண்று நீங்க ஏன் குற்றவாளி ஆகணும். ஆர்தர் போலீசுக்கு இன்போர்ம் பண்ணிட்டான். இனி இவன் பண்ண எல்லா தப்புக்கும் சட்டத்திடம் இருந்து தப்பிக்க முடியாது.”

என்று ஜெனி சொல்ல இருவரும் அதை ஆமோதித்தனர். போலீசும் அங்கு வந்துவிட்டனர். அவர்கள் மித்ரத்தையும் அவனுடைய ஆட்களையும் ஜீப்பில் போட்டு கொண்டு புறப்பட்டனர். மீராவின் தாக்கப்பட்ட கையை வருடிக்கொண்டே ஆர்தர் அவளை கட்டி அணைத்து கொண்டான்.

“உன்னை வீட்டுக்கு வரவேற்கிறேன்! என்கிடு.”

என கில்கமேஷ் சிரித்து கொண்டே என்கிடுவிடம் சொல்ல,

“நான் மறுபடியும் வந்துட்டேன். நண்பா!”

என்று என்கிடு கில்கமேஷை கட்டி தழுவினான். அவர்கள் இருவரையும் பார்த்து ஜெனியும் நண்பர்களும் ஆனந்த கண்ணீர் விட்டனர். அப்போது விக்டர் கிட்ட இருந்து கால் வந்தது. சிரித்து கொண்டே ஜெனி எல்லோரிடமும் சொன்னாள்.

“விக்டர் ஃபோன் பண்ணுறான்..”

“பேசு… பேசு… நாம ஜெயிச்சிட்டோம் என்னு சொல்லு.”

என்றான் கில்கமேஷ்.

“ஹலோ!”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அங்கு மித்ரத்தின் ஆட்கள் இருவர் இருந்தனர். மீரா கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தாள். “வா, உனக்காக தான் வெயிட்டிங். எனக்கு தெரியும் நீ வருவேன்னு நீயும் உன்னோட நண்பனும் தான் தியாகி வம்சமாச்சே.” “மித்ரத்” “ஆமா…

அங்கு மித்ரத்தின் ஆட்கள் இருவர் இருந்தனர். மீரா கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தாள். “வா, உனக்காக தான் வெயிட்டிங். எனக்கு தெரியும் நீ வருவேன்னு நீயும் உன்னோட நண்பனும் தான் தியாகி வம்சமாச்சே.” “மித்ரத்” “ஆமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *