எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 30

  • 64

“சரி ருஷா நீங்க மேலுக்கு போய் ரெஸ்ட் எடுங்க மா,”

என்று சாரா சொல்ல நிசாத் ருஷாவை ரூமுக்கு கூட்டிச் சென்றான்.

“ருஷா கொஞ்சம் தூங்குங்க”

“இல்ல எனக்கு தூக்கம் வரல”

“அப்போ சரிம்மா நான் தொழுதுடு வாரன்,

“சரி ஹபி நானும் தொழல, அப்போ நீங்க தொழுவிங்க,”

என்று சொல்லி விட்டு ருஷா உளூ செய்து வர இரண்டு பேரும் தொழுதனர். தொழுகை முடிந்து ருஷா கட்டிலில் அமர்ந்து,

“ஹபி”

“ம்ம்,,, சொல்லுங்க, பேபிமா,”

“எனக்கு ஒரு நிய்யத்.”

“ஆஹ் சொல்லு தங்கம் என்ன,”

“நம்மட பேபி கிடைக்க அவக ரெண்டு பேரையும் கூடிடு அண்டியும் நாமளும் ஹஜ் போகணும்.”

என்று,

“மாஷா அல்லாஹ்… ஆமீன்… ஆமீன்… இன்ஷா அல்லாஹ் கட்டாயம் தங்கம் உன் எண்ணம் எவ்வளவு பரக்கத் ஆன எண்ணம் ஹைர் ஆகும் டா இன்ஷா அல்லாஹ்.”

“ஆமீன்”

என்று சொல்லி கொண்டு இருந்தவாறு,

“ஹபி… ஹபி…”

என்று குமட்டல் சத்தம் கேட்க,

“டேய் ருஷா”

என்று அவளை பிடிக்க போனவன் ருஷா வாந்தி எடுக்க தன் இரு கைகளால் வாந்தியை ஏந்திக் கொண்டான். கையை கழுவி விட்டு ருஷாவையும் சரி செய்து விட்டு ருஷாவை தூங்க வைத்தான் நிசாத். ருஷா தூங்கிய பிறகு தன் ஆஃபீஸ் வேலை விசயமாக லெப்டோபில் இருந்தான்.

தீடீர் என நிசாத்துக்கு ஒரு மெயில் அந்த மெயில் ஓபன் செய்தவுடன் மிகுந்த சந்தோசத்துடன் அல்லாஹ்வை புகழ்ந்தான், தன் மனைவியிடம் சொல்ல எண்ணி அவள் அருகில் சென்றான் இல்லை ருஷா இப்போ தானே தூங்கின என்று மீண்டும் லெப்டோப் பக்கம் திரும்பினான், திரும்பிய போது ருஷாவின் கால்கள் வீங்கி இருப்பதை பார்த்தவன் மெயிலுக்கு றிப்ளை பண்ணி விட்டு தன் ஏஞ்சலின் கால்களை மெது மெதுவாக ஊண்டி விட்டான். நேரம் நகர்ந்தது.

“ருஷா ருஷா… எழும்புடா..”

என்று அவள் கையை பிடித்து இருப்பாடி கொண்டு வந்த சாப்பாட்டை ஊட்டி விட்டான், மூன்று வாய் சாப்பிட்டதும்,

“ஹபி போதும் இனி வானா.”

“இல்ல மா கொஞ்சம் டா…”

“இல்ல ஹபி திரும்பி வோமிட் வரும்.”

“ம்ம் சரி அப்போ வோடேர குடிங்க”

“ம்ம்”

என்று குடித்து விட்டு மெதுவாக கட்டிலில் சாய்ந்தாள். ருஷா சாப்பிட்ட மிச்ச சாப்பாட்டை நிசாத் சாப்பிட்டு கொண்டு,

“ருஷா…”

“சொல்லுங்க ஹபி…”

“ஒரு குட் நிவ்ஸ் டா”

“ஆஹ் என்ன அப்டி…”

“நமட பேபி டுவின்ஸ் என்று வந்த குட் நிவ்சோட எல்லாம் குட் நிவ்சாதான் இருக்கு.”

“அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்க…”

“மலேஷியால என்ட புரஜெக்ட எக்ஸெப்ட் பண்ணிகாங்கடா. இனி விசா அனுப்புற வேல இருக்கு பட் எப்போ எடுப்பான் என்று தெரியா…”

“மாஷா அல்லாஹ் எவ்வளவு பெரிய விசயம்.”

“ருஷா நீ என் லைப்ல வந்த அப்ரோம் அல்லாஹ் உன் மூலமா எனக்கு நிறைய பரக்கத் தாரான்.”

அழகிய புன்முறுவல் அவள் பூக்க,

“சரி தங்கம் இருங்க நான் கொஞ்சம் வெளில போய் வாரன்”

என்று வெளி இறங்கினான் நிசாத், கணவன் மனைவி அன்பு இன்னும் குழந்தை பாகியத்தோடு தொடர்ந்தது. இவ்வாறு காலம் கடந்தது ருஷாவின் பிரசவ நாள் எட்டி பார்த்துக் கொண்டு இருந்தது ஓரிரு நாளில் குழந்தை குதிகலம் என்று இருந்தது. ஆனால் இறைவன் இன்னும் ருஷாவின் ஈமானை சோதிக்க இருக்கிறான் என்பதை அறியாது அவள் குழந்தை கிடைக்க இருக்கும் சந்தோச கடலில் மூழ்கி இருந்தாள்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“சரி ருஷா நீங்க மேலுக்கு போய் ரெஸ்ட் எடுங்க மா,” என்று சாரா சொல்ல நிசாத் ருஷாவை ரூமுக்கு கூட்டிச் சென்றான். “ருஷா கொஞ்சம் தூங்குங்க” “இல்ல எனக்கு தூக்கம் வரல” “அப்போ சரிம்மா…

“சரி ருஷா நீங்க மேலுக்கு போய் ரெஸ்ட் எடுங்க மா,” என்று சாரா சொல்ல நிசாத் ருஷாவை ரூமுக்கு கூட்டிச் சென்றான். “ருஷா கொஞ்சம் தூங்குங்க” “இல்ல எனக்கு தூக்கம் வரல” “அப்போ சரிம்மா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *