நமது சமூகம் கவனிக்கத் தவறிய திருமண வழிகாட்டல்கள்.

  • 234

அண்மையில் காதி நீதிமன்றத்தில் கவுன்சிலிங் செயற்பாடுகளுக்காக சென்றிருந்தேன். அங்கு சென்ற தினங்களில் அதிகமாகவே நமது சமூகம் கவனிக்கத் தவறிய சில முக்கியமான திருமணம் சார்ந்த வழிகாட்டல்களை அடையாளம் கண்டேன். இதன்போது நான் அனுமானித்த சில பிரதான திருமணம் சார்ந்த வழிகாட்டல் இடைவெளிகளை பகிர்ந்து கொள்ளவதே இப்பதிவின் நோக்கம்.

அல்குர்ஆனும் ஸுன்னாவும் திருமண வாழ்வு தொடர்பாக பேசியது போன்று வேறு எந்த மதங்களும் பேசியதாக நான் அறிந்ததில்லை. திருமணத் தகுதி நிலை, திருமணத் தடுப்பு நிலை, திருமண உடன்படிக்கை, திருமண வாழ்வியல், திருமண முறிவு நிலை, திருமண பந்தத்திற்கு பிற்பட்ட கால நிலை தொடக்கம் பிள்ளை வளர்ப்பு வரை அழகாக வழிகாட்டல்களை வழங்கியுள்ளது இந்த இரு மூலாதாரங்களும். ஆனால் துரதிஷ்டவசமாக இவ்வழகிய வழிகாட்டல்கள் நமது சமூகத்தில் முறையாக கடத்தப்படாத காரணத்தினால் திருமண உடன்படிக்கைகள் நோக்கமறியாத வெறும் சடங்காக மாறிவிட்டன. இதன் விளைவே இன்றைய காதி நீதிமன்றங்களில் ஒரு வருடம் கூட ஆகாத தம்பதியினர் தொடக்கம் மற்றுமோர் வருடம் கூட காணமுடியாத தம்பதியினர் வரையில் கண்கலங்கி நிற்கின்றனர்.

அவற்றில் பிறதான மூன்று சமூகத் தவறுகள் குடும்ப முறிவில் பங்கேற்கின்றனர.

  1. திருமணத்தின் உறவுநிலை தொடர்பான முன்மாதிரிகளை காட்டாமை. (Family Relationship)
  2. குடும்பத் திட்டமிடலை ஏற்படுத்தாமை.
  3. பாலியல் அறிவூட்டலின்மை.

மனித தேவைகளை நான்கு உடல் பாகங்களை அடிப்படையாக வைத்து கூறலாம்.

  • மூளைக்கான தேவை. (அறிவு , சிந்தனை)
  • இதயத்திற்கான தேவை. (அன்பு , ஆசைகள்)
  • வயிற்றுத் தேவை. (உணவு , வாழ்வாதாரம்)
  • வயிற்றுக்கு கீழ்ப்பட்ட தேவை. (பாலியல் தேவைகள்)

இவற்றில் மறுக்கமுடியாத ஒரு தேவைதான் உடலியல் தேவை. இதனை இஸ்லாம் ஏற்பதுடன் அதற்கான அழகிய வழிகாட்டல்களையும் திருமண பந்தத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளது.

உமது மர்ம உறுப்புக்களை உன் மனைவியிடமும், அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வீராக! என்ற நபிமொழியும் இதனை வலுப்படுத்துகின்றது. (ஃபஹ்ஸ் இப்னு ஹகீம் ரழியல்லாஹு அன்ஹு , அபூதாவூத்/ திர்மிதீ) இவற்றை தவிர்ந்த பாலியல் நடத்தையை இஸ்லாம் தடுத்துள்ளது.

மேலும் கணவன் மனைவிக்கு மத்தியிலான இந்த உறவு நிலைக்கு , திருமணத்திற்கு முன்னரான பருவத்திலிருந்தே தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. மேலும் இஸ்லாமிய வழிகாட்டல்கள் போதுமான அளவு பாலியல் கல்வியை வழங்கியுள்ளது என்பது அவதானிக்கத் தக்கதாகும். அன்றைய அரேபிய சூழலில் சில கிளையர் மத்தியில் இருந்த மரபான பெண் கத்னாவைக் கூட பாலியலுக்கு இடையூறு வராமல் மேற்கொள்ள வழி காட்டியதாக சில ஹதீஸ் ஆதாரங்களும் உண்டு.

உம்மு அதிய்யா அறிவிக்கும் ஹதீஸ்: மதீனாவில் கத்னா செய்யும் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு நபியவர்கள் “சிறியதொரு பகுதியை அகற்றுங்கள் , சதைத் துண்டை அடியோடு வெட்டி விடாதீர்கள். அதுவே பெண்ணுக்கு செழிப்பைக் கொடுக்கும். கணவனுக்கு விருப்பத்துக்குரியதாகவும் இருக்கும்” (அபூ தாவூத்) (இந்த ஹதீஸின் தரத்தில் கருத்து முரண்பாடுகள் உண்டு)

மேலும் கணவன் மனைவியை ஆடைக்கு ஒப்பாக்கி பாலியல் நெருக்க நிலையை கற்பிக்கிறது திருமறை. துணைவியை விளைநிலம் என்று உவமித்து பாலியலுக்கும் சந்ததி உருவாக்கத்திற்கும் இஸ்லாம் சுதந்திரம் வழங்குகின்றது. பாலியல் அசாதாரண நடத்தைகளை ஹராம் என்ற தடையினை ஷரீஆ ஏற்படுத்துகிறது.

பொதுவாக பாலியல் வழிமுறைகள் மற்றும் பாலியல் கோளாருகள் அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் ஷரீஆவின் வரையறைகள் மேலும் பாலியலை கையாளும் முறைகளை தம்பதியினர்களுக்கு திருமண பந்தத்தின் முன் அவசியம் தெளிவுபடுத்த வேண்டும்.அதுமாத்திரம் போதுமானதாகாது.

வெறும் திருமண வைபவத்தின் முதல் நாள் கூரும் அறிவுரையாக மாத்திரம் இருப்பது போதுமாகாது. அறிவூட்டல், சிகிச்சை பெறல் மேலும் அதற்கமைவான உணவு பண்பாட்டை பரீச்சியமாக்கல் போன்ற இதற்கேற்ற வாழ்வியல் நடத்தைகளை பரீட்சியமாக்க வழிகாட்ட வேண்டும்.

இவ்வளவான போதிய வழிகாட்டல் உடைய ஒரு சமூகம், பாலியல் அறிவை போதுமானதாக வழங்காமல் இருப்பதுதான் வியப்பானது. நம் சமூகத்தில் இவ்வறிவு மற்றும் வழிகாட்டல்கள் வழங்குவது நெறிமுறைப்படுத்தப்படாமையின் விளைவே பாலியலில் திருப்தியற்ற தம்பதியினர் மற்றும் அன்னிய பாலியல் உறவுகள் போன்றவற்றின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைகின்றன. இன்னும் எத்தனை காலம் இந்த வழிகாட்டல்கள் மறைக்கப்படுகிறதோ , அவ்வளவு காலமும் விவாகரத்து விகிதம் அதிகரிப்பதையும் தவிர்க்க முடியாது.

Fazlan A Cader

அண்மையில் காதி நீதிமன்றத்தில் கவுன்சிலிங் செயற்பாடுகளுக்காக சென்றிருந்தேன். அங்கு சென்ற தினங்களில் அதிகமாகவே நமது சமூகம் கவனிக்கத் தவறிய சில முக்கியமான திருமணம் சார்ந்த வழிகாட்டல்களை அடையாளம் கண்டேன். இதன்போது நான் அனுமானித்த சில…

அண்மையில் காதி நீதிமன்றத்தில் கவுன்சிலிங் செயற்பாடுகளுக்காக சென்றிருந்தேன். அங்கு சென்ற தினங்களில் அதிகமாகவே நமது சமூகம் கவனிக்கத் தவறிய சில முக்கியமான திருமணம் சார்ந்த வழிகாட்டல்களை அடையாளம் கண்டேன். இதன்போது நான் அனுமானித்த சில…

15 thoughts on “நமது சமூகம் கவனிக்கத் தவறிய திருமண வழிகாட்டல்கள்.

  1. Have you ever thought about creating an e-book or guest authoring on other sites? I have a blog centered on the same subjects you discuss and would really like to have you share some stories/information. I know my audience would value your work. If you are even remotely interested, feel free to send me an e-mail.

  2. I like the valuable information you supply for your articles. I will bookmark your weblog and test again here frequently. I am relatively certain I will be informed plenty of new stuff right here! Good luck for the following!

  3. I’ve read several good stuff here. Definitely value bookmarking for revisiting. I wonder how so much attempt you set to create this type of wonderful informative site.

  4. I love your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you? Plz reply as I’m looking to design my own blog and would like to know where u got this from. cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *