இஸ்லாம் தேசப்பற்றை போதிக்க மறக்கவில்லை!!

  • 12

பற்றற்ற வாழ்க்கை என்று சொல்லி தேசம் கடந்து எங்கேனும் மானிடர் சென்றுவிட முடியாது. காடாயினும், மண்ணாயினும் தேசத்தின் எல்லை உண்டு. எனவே மனிதன் மண்ணின் பிறக்கையிலே தேசப்பற்று குடிகொள்கிறது. தான் பிறந்த மண்ணை, தேசத்தை நேசிப்பது மனித இயல்பே! இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கானோர் அல்ல. தேசப்பற்றை இஸ்லாமிய மார்க்கம் அங்கிகரிக்கின்றது. அன்பு பரஸ்பரம் கருணை போன்றவற்றை போதிக்கும் இஸ்லாம் தேசப்பற்றையும் போதித்துள்ளது.

தேசப்பற்று என்பது நிலத்தோடு மாத்திரம் சுருங்கிக் கொண்டது அன்றி தன் தேச மக்களை இன மொழி பேதமின்றி நேசிப்பதன் மூலம் எவ்வித பேதமும் இன்றி நாட்டை பாதுகாப்பதிலும், அதனை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்வதிலிலும் அங்கத்தவராய் உண்மை நேசத்துடன் செயற்படுவதையும் குறித்து நிற்கிறது. அத்துடன் நாட்டின் கலை கலாச்சார, பொருளாதார, கல்வி, மற்றும் ஏனைய நாட்டின் நலன்சார் விடையங்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும், அழிவு மற்றும் நாசகார சக்திகளில் இருந்து நாட்டினை பாதுகாப்பதும் நாட்டுப்பற்றினை எடத்துயம்பும் செயற்பாடு எனக்குறிப்பிலாம். நாட்டுப் பற்றினை அழகிய முறையில் கையாள இஸ்லாமும் கற்றுத்தந்துள்ளன.

சகோதரத்துவத்தை பேணல்

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (49:13)

இவ்அல்குர்ஆன் வசனமானது சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதன் முலம் வர்க்க பேதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தாம் சார்ந்த தேச மக்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி அதன் மூலம் தேசப்பற்றிற்கு வித்திடுகிறது.

நாட்டு மக்களை நேசித்தல்.

“மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்” என்பதும் “மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்” என்பதும் நபிமொழிகளாகும்.
ஆகவே நாட்டுப்பிரஜை என்ற அடிப்படையில் ஏற்படும் அன்பு உணர்வானது தேசத்தின் அடிப்படையில் எம்மை ஒற்றுமைப் படுத்துகின்றன. ஒற்றுமையின் மூலம் நாட்டினை கட்டிக்காப்பாற்ற முடியும்.

மறுமை பற்றிய நம்பிக்கையை அதிகரித்து தாய் நாட்டிற்கு தன்னை அர்ப்பணம் செய்தல்.

அதாவது இறைவனின் கட்டளைகளை பூமியில் நடப்பாக்க செய்யப்படும் எந்த ஒரு செயலும் வீண்போவதில்லை. அவற்றிற்கு இறைவனிடம் மறுமையில் அதாவது சொர்க்க வாழ்வில் நற்கூலி உண்டு என்ற உறுதியான நம்பிக்கை இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு துணிச்சலையும் வீரத்தையும் தருகிறது. நாட்டு மக்களை அநியாயத்தில் இருந்தும் அக்கிரமங்களில் இருந்தும் அந்நியர்களின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்க சொந்த உயிரையும் உடமைகளையும் அர்பணிக்க மாபெரும் உந்துசக்தியாக இந்த நம்பிக்கை செயல்படுகிறது. நாட்டுப்பற்றினை வெளிப்படுத்தும் மிகப்பெரும் சக்தி இதுவே!

நாட்டை நேசிப்பதுடன், நாட்டை விட்டு பிரிந்து சென்றாலும் தாய்மண்ணை நேசித்தல்.

ஹிஜ்ரத்தின் போது நபி(ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேறிய சந்தர்ப்பத்தில் கூறிய வார்த்தையானது தேசப்பற்றினை பறைசாற்றுகின்றன. நபியவர்கள் மக்காவை நோக்கி “நீ எவ்வளவு வளமான தேசமாக இருக்கின்றாய். நீதான் எனக்கு மிக விருப்பமான பூமியாக இருக்கிறாய். நிச்சயமாக எனது சமூகத்தார் என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நீ அல்லாத ஒரு பூமியில் நான் வசித்திருக்க மாட்டேன் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

எனவே எம் நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினமாக வாழ்ந்தாலும் கூட தேசம்சார்ந்து தேசப்பற்று மிக்கவராய் நாடடின் தேசிய பங்களிப்புக்கு தன்னலம் பாராது உழைக்க வேண்டும். இதுவே இஸ்லாம் எமக்கு காட்டித்தந்த வழிமுறையாகும்.

மருதமுனை நிஜா
( ஹுதாயிய்யா )
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

பற்றற்ற வாழ்க்கை என்று சொல்லி தேசம் கடந்து எங்கேனும் மானிடர் சென்றுவிட முடியாது. காடாயினும், மண்ணாயினும் தேசத்தின் எல்லை உண்டு. எனவே மனிதன் மண்ணின் பிறக்கையிலே தேசப்பற்று குடிகொள்கிறது. தான் பிறந்த மண்ணை, தேசத்தை…

பற்றற்ற வாழ்க்கை என்று சொல்லி தேசம் கடந்து எங்கேனும் மானிடர் சென்றுவிட முடியாது. காடாயினும், மண்ணாயினும் தேசத்தின் எல்லை உண்டு. எனவே மனிதன் மண்ணின் பிறக்கையிலே தேசப்பற்று குடிகொள்கிறது. தான் பிறந்த மண்ணை, தேசத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *