வலதுசாரிகளின் எழுச்சி

  • 7

இந்தியா மட்டுமின்றி வலதுசாரிகளின் எழுச்சி உலகளாவிய போக்காக மாறியுள்ளது. ஒரு மோசமான காலக்கட்டம்தான். பிரேசிலின் பொல்சனாரோ, அமெரிக்காவின் டிரம்ப், இலங்கையின் ராஜபக்‌ஷே, இந்த வரிசையில் பிரிட்டனின் போரிஸ் ஜான்சனும் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் வலதுசாரி கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

இந்த வலதுசாரி எழுச்சிக்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைத்தாலும் ஒரு சில காரணிகள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக இருக்கின்றன.

முதலாவதாக, நாட்டுப்பற்று அதிகரித்துள்ளது. பொருளாதார மந்தம், மற்றும் ஊழல் அரசியலால் நாட்டுப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற பிரச்சாரத்தின் பின்புலத்தில் தேசப் பற்று அதிகரித்துள்ளது.

இரண்டாவது அகதிகளின் குடியுரிமை பிரச்சினையால் உள்நாட்டு மக்கள் நலன் பாதிப்படைகிறது என்ற காரணியும் வலதுசாரி எழுச்சிக்கு துணைபோகியுள்ளது.

மூன்றாவதாக, பழைய விழுமியங்களை மீட்டெடுத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்ற போக்கு அதிகரித்து வருகிறது. அதாவது நகரமயமாதலால், கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. குடும்ப கலாசாரம் சீர் குலைந்துள்ளது. பழமை வாதங்களை மீட்டெடுத்து கலாசாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்ற பொதுபுத்தி சார்ந்த போக்கும் வலதுசாரி எழுச்சிக்கு உதவி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி கட்சிகளின் பொதுவான பண்புகள் தாராள பொருளாதாரம்/ வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்குவார்கள். பொருளாதாரத்திற்கும் வர்த்தகத்திற்கும் தேச எல்லை கோடுகள்/ வரையறைகள் இல்லை.

ஆனால், தாராள குடியுரிமை, பன்முக கலாசாரம், சமூக விழுமியங்களுக்கு வரையறைகள் உண்டு. இந்த வரையறைகள் வாயிலாக குறுகிய மனப்பான்மைகள் பொதுபுத்தியில் திணிக்கப்பட்டு ‘’பிரபஞ்ச பார்வை’’ புறக்கணிக்கப்படுகிறது. என் குடும்பம்/ என் நாடு/ என் இனம்/ என் மொழி போன்ற சுயநல கருத்தாக்கங்கள் அடிமனதில் வலுவாக ஊன்றியுள்ளது. ஒரு அவலமான காலக்கட்டத்தில் நுழைகிறோம்!

வாசுதேவன்

இந்தியா மட்டுமின்றி வலதுசாரிகளின் எழுச்சி உலகளாவிய போக்காக மாறியுள்ளது. ஒரு மோசமான காலக்கட்டம்தான். பிரேசிலின் பொல்சனாரோ, அமெரிக்காவின் டிரம்ப், இலங்கையின் ராஜபக்‌ஷே, இந்த வரிசையில் பிரிட்டனின் போரிஸ் ஜான்சனும் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ஐரோப்பாவின் பெரும்பாலான…

இந்தியா மட்டுமின்றி வலதுசாரிகளின் எழுச்சி உலகளாவிய போக்காக மாறியுள்ளது. ஒரு மோசமான காலக்கட்டம்தான். பிரேசிலின் பொல்சனாரோ, அமெரிக்காவின் டிரம்ப், இலங்கையின் ராஜபக்‌ஷே, இந்த வரிசையில் பிரிட்டனின் போரிஸ் ஜான்சனும் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ஐரோப்பாவின் பெரும்பாலான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *