சூழல் அமைப்புக் கோட்பாடு

  • 447

குழந்தை விருத்திக் கோட்பாடுகளில் ஒன்றான சூழல் அமைப்புக் கோட்பாடு (Bronfenbrenner’s ecological system theory) பிள்ளை வளர்ச்சியில் அதிகம் தாக்கம் செலுத்தும் காரணியாக சூழலை இனம் காட்டுகிறது. பல்வேறு சூழலியல் அலகுகளின் தாக்கமே ஒரு ஆளுமை என வியாக்கியானம் செய்யும் இக்கோட்பாடு பெரிதும் அங்கீகாரம் பெற்ற கோட்பாடுகளில் ஒன்றாக இருப்பினும் இதுதொடர்பில் விமர்சனங்களும் இல்லாமலில்லை.

எடுத்துக்காட்டாக பூரணமாக இக் கோட்பாடானது சூழலியல் தாக்கம் ஒரு ஆளுமையில் செல்வாக்கு செலுத்துகிறது என்று வாதித்த போதிலும் உயிரியல் ரீதியான காரணிகளுக்கும் விருத்திக்கும் இடையிலான தொடர்பை Bronfenbrenner கோட்பாட்டில் எங்கும் உள்ளடக்கவில்லை.

இக்கோட்பாட்டின் பிரதான அம்சம் சூழல் அலகுகள் ஆகும். அதாவது விருத்தியில் தாக்கம் செலுத்தும் ஐந்து சூழல் அலகுகளை அடையாளம் காட்டி அவற்றின் மூலம் பிள்ளையின் விருத்தியில் செல்வாக்கு ஏற்படுவதாக அமையும் என்பதை பிணைப்பிடுகிறது. மேலும் குறித்த ஐந்து அலகுகளும் ஒன்றளவில் மற்ற அலகுகளுடன் பினைந்திருப்பதாகவும் இக்கோட்பாடு கூறுகிறது.

கோட்பாட்டின் பிரதான ஐந்து அலகுகளும் பின்வருமாறு.

முதலாவது அலகு : Micro system

இதில் பிள்ளையின் நேரடி தொடர்பில் உள்ள குழுமங்களையும் உறுப்புக்களையும் சுட்டிக்காட்டும். இவற்றுடனான ஆரோக்கியமான நிலைமை விருத்தியில் ஆரோக்கியமான தாக்கத்தையும், ஆரோக்கியமற்ற நிலைமை பாதத்தையும் ஏற்படுத்தும்.

உதாரணமாக – ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , சமவயது நண்பர்கள் , சமயக்கூட வழி நடத்துனர்கள்

இரண்டாவது அலகு : Meso system

இவ்வலகானது ஆரம்ப அலகின் உறுப்புக்களிடையான தொடர்பு நிலையின் தன்மை குழந்தையில் தாக்கம் செலுத்துவதாக எடுத்துரைக்கிறது. அவ்வுருப்புக்களின் பிணைப்பு நிலையினைப் பொருத்து விருத்தியில் சாதக மற்றும் பாதக விளைவுகள் ஏற்படுவதாக வியாக்கியானம் செய்யப்படுகிறது.

உதாரணமாக – ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கு இடையில் சிறந்த தொடர்பு காணப்படும் சமயத்தில் பிள்ளையின் கல்விசார் ஈடுபாடு அதிகரிப்பதை எடுத்துக்காட்டலாம்.

மூன்றாவது அலகு : Exo system

இது குழந்தையின் மறைமுகமான சூழலை எடுத்துக்காட்டும். இந்த சூழலுக்கும் குழந்தைக்கும் தொடர்புகள் நேரடியாகக் காணப்படாத போதிலும் குழந்தையின் விருத்தியில் அதன் தாக்கம் ஏற்படும்.

உதாரணமாக – பெற்றோரின் வியாபார சூழ்நிலைக்கும் பிள்ளைக்கும் எவ்விதமான நேரடி தொடர்பும் காணப்படாது. ஆனால் குறித்த வியாபார நிலையில் பாரிய விருத்திகள் காணப்படும் சமயத்தில் பிள்ளையின் வளர்ச்சியில் ஆடம்பர வாழ்க்கைத்தரம் காணப்பட சந்தர்ப்பங்கள் உண்டு. இது பிள்ளையின் ஆளுமை இயல்பில் தாக்கம் செலுத்தும் என்பதற்கான ஒரு உதாரணமாகும்.

நான்காவது அலகு : Macro system

இவ்வலகானது குழந்தையினை சூழவுள்ள கலாச்சாரங்களையும் விழுமியங்களையும் எடுத்துக்காட்டுகிறது. இதுவும் விருத்தியில் செல்வாக்கு செலுத்தவும் ஒரு காரணியாக அமைகிறது.

உதாரணமாக மதங்களை எடுத்துக்காட்டலாம். மதத்தின் நிலை ஆன்மீக மையமாக அமையும் போது குழந்தையின் விருத்தியில் ஆன்மீக செல்வாக்கு காணப்படும். குறித்த நபர் ஆன்மீக ஈடுபாடு உடையவராக இருக்கும் சந்தர்ப்பம் உள்ளது என்பது கலாச்சார சூழலுக்கான உதாரணமாகும்.

ஐந்தாவது அலகு : Chrono system

ப்ரோன்பென்ப்ரென்னர் இந்த அமைப்பை பின்னர் தனது கோட்பாட்டில் சேர்த்தார். இக்கட்டமானது மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கும் கட்டமாகும். அதாவது இக்கட்டத்தினூடாக மாற்றங்கள் மற்றும் அனுபவித்த நிகழ்வுகளின் தாக்கம் மனித விருத்தியில் ஆதிக்கம் செலுத்தும் என்கிறார் ப்ரோன்பென்ப்ரென்னர்.

1979 இல் வெளியிடப்பட்ட இக்கோட்பாடு, பல உளவியலாளர்களை நபரைப் பகுப்பாய்வு செய்யும் விதம் மற்றும் அவர் எதிர்கொள்ளும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் விளைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் அமைப்புக் கோட்பாடு ஒரு முக்கியமான கோட்பாடாக மாறியுள்ளது. இது மற்ற கோட்பாட்டாளர்களின் படைப்புகளின் அடித்தளமாக மாறியது.

ஒரு தனிமனிதனின்; சமூகத்தின் பிரச்சினைக்கு காரணம் சூழல் கட்டமைப்பே ஆகும் என்பதற்கு சிறந்த நிருவல் முறைமை இந்த கோட்பாடாகும்

Fazlan A Cader

குழந்தை விருத்திக் கோட்பாடுகளில் ஒன்றான சூழல் அமைப்புக் கோட்பாடு (Bronfenbrenner’s ecological system theory) பிள்ளை வளர்ச்சியில் அதிகம் தாக்கம் செலுத்தும் காரணியாக சூழலை இனம் காட்டுகிறது. பல்வேறு சூழலியல் அலகுகளின் தாக்கமே ஒரு…

குழந்தை விருத்திக் கோட்பாடுகளில் ஒன்றான சூழல் அமைப்புக் கோட்பாடு (Bronfenbrenner’s ecological system theory) பிள்ளை வளர்ச்சியில் அதிகம் தாக்கம் செலுத்தும் காரணியாக சூழலை இனம் காட்டுகிறது. பல்வேறு சூழலியல் அலகுகளின் தாக்கமே ஒரு…

51 thoughts on “சூழல் அமைப்புக் கோட்பாடு

  1. hi!,I love your writing so so much! proportion we keep in touch more approximately your post on AOL? I need an expert in this area to solve my problem. May be that is you! Looking forward to peer you.

  2. I’ve been exploring for a little for any high-quality articles or blog posts in this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this web site. Reading this info So i’m satisfied to exhibit that I have a very good uncanny feeling I found out exactly what I needed. I such a lot indisputably will make certain to don?t overlook this web site and give it a look on a continuing basis.

  3. You really make it seem so easy with your presentation however I in finding this topic to be really something which I think I might never understand. It sort of feels too complicated and very broad for me. I am taking a look forward for your next post, I will try to get the hold of it!

  4. I am extremely inspired together with your writing talents and alsowell as with the layout in your blog. Is this a paid subject matter or did you customize it yourself? Either way stay up the nice quality writing, it’s rare to peer a nice blog like this one these days..

  5. Nice blog here! Also your website so much up fast! What host are you the use of? Can I am getting your associate link on your host? I desire my site loaded up as fast as yours lol

  6. This is very interesting, You are an excessively professional blogger. I have joined your feed and look forward to in the hunt for more of your fantastic post. Also, I have shared your web site in my social networks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *