கல்வி

கல்வி எனும் கடலை
கடக்கும் கப்பல் நாம்
கல்வி எனும் வானில்
பறக்கும் பட்சிகள் நாம்

கல்வி எனும் தண்டவாளப் பயணத்தில்
உலா வரும் ரயில் நாம்
கல்வி எனும் மழையிலே
நனைந்திடும் சிற்றிலை நாம்

கல்வி எனும் ஒளிவெள்ளத்தில்
நீந்திடும் மீன்கள் நாம்
கல்வி எனும் புற்றினை
அரிக்கும் எறும்புகள் நாம்

கல்வி எனும் ஆழியில்
சுழன்றோடும் ஓடம் நாம்
கல்வி எனும் பாரினிலே
இருக்கும் சிற்றூர் நாம்

கல்வி எனும் கலங்கரை
விளக்கத்தின் சிற்றொளி நாம்
கல்வி எனும் வேழத்தின்
தும்பிக்கை நாம்

கல்வி எனும் ஹிருதயத்தின்
நாளங்கள் நாம்
கல்வி எனும் வெள்ளைத்
தாளின் மீது படியும் கரும்புள்ளி நாம்

கல்வி எனும் சூரியனின்
ஒளிக்கற்றை நாம்
கல்வி எனும் பாதாளத்தில்
வீழும் சிறுகற்கள் நாம்

கல்வி எனும் விருட்சத்தின்
கனிகள் நாம்
கல்வி எனும் முத்தின்
ஒளி நாம்

Rifdha Rifhan
SEUSL

Leave a Reply

Your email address will not be published.