ஏன் இன்னும் தாமதம்!!!

  • 11

நிலவினை தொட்டுவிட
மேகங்கள் ஓடினாலும் அது தொட்டு விடுவதும் இல்லை!
அது தன் ஓட்டத்தை நிறுத்துவதும் இல்லை!
பார்க்கும் நம் கண்தான் ஏமாற்றம் அடைகின்றன.

கண்களில் மாயையை விரித்து விட்டு
பிறரை தப்பென கொள்வது – கோழை
தன்னை வீரன் என மார்தட்டிக் கொள்வதற்கு சமமாகும்!!!
இந் நோயுள்ளவனின் பார்வைக்கு அஞ்சாதே!
உனக்கு உன் இரட்சகன் போதுமானவன்.

சிட்டுக் குருவியும் சிறகடிக்கின்றன
வானம்பாடியும் ஒய்யாரமாக பறக்கின்றன
இங்கு பயணிக்க தடை அல்ல!
அவரவர் தேவைக்கும், விருப்புக்கும் ஏற்ப பயணித்துக் கொள்கின்றனர்

ஏன் இன்னும் தாமதம்!
அடைபட்ட நான்கு சுவரினுள் இருந்து வெளியே சிறகடி!!!
உனக்கான உயரத்தை தலைதூக்கி பார்
அடையவிருக்கும் வெற்றிகள் ஏராளம் என்பதை உணர்வாய்!!

ஓடும் நிமிஷங்கள் அத்தனையும்
அழகான வாழ்விற்காய் கூட்டிச் செல்வதாகும்.

ஒவ்வொரு நொடியையும் உனக்கே உரிமையானவர்களுடன்
கை கோர்த்து பயணி!!!
அது இன்னும் உனக்கு பலம் சேர்க்கும்.

மருதமுனை நிஜா
ஹுதாயிய்யா
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

நிலவினை தொட்டுவிட மேகங்கள் ஓடினாலும் அது தொட்டு விடுவதும் இல்லை! அது தன் ஓட்டத்தை நிறுத்துவதும் இல்லை! பார்க்கும் நம் கண்தான் ஏமாற்றம் அடைகின்றன. கண்களில் மாயையை விரித்து விட்டு பிறரை தப்பென கொள்வது…

நிலவினை தொட்டுவிட மேகங்கள் ஓடினாலும் அது தொட்டு விடுவதும் இல்லை! அது தன் ஓட்டத்தை நிறுத்துவதும் இல்லை! பார்க்கும் நம் கண்தான் ஏமாற்றம் அடைகின்றன. கண்களில் மாயையை விரித்து விட்டு பிறரை தப்பென கொள்வது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *