வேறெதுவும் தேவை இல்லை
எதிர்பார்ப்புக்களின் பட்டியல் நீள
ஆசைகளின் கனவுகள் தொடர
கற்பனையில் உடலிருக்க உயிர் தொலைக்க
ஏங்குகிறேன் நிஜத்தை அறிய!!!
அழுகையில் இரவு விடயலாய் மாற
காத்திருப்புகள் வரையறை இன்றி பயணிக்க
வாழ்விற்கான விடியலை தேடுகிறேன்!!!
முதற் படியே தள்ளிவிட
சொந்தங்களே முட்டுக்கட்டை போட
துரோகிகள் நண்பர்களாக வேஷம் போட
தோல்விக்கு நான் சொந்தக்காரன் என நடப்பவை சொல்ல
வெற்றியை தேடி அலைகிறேன்!!!
காலத்தின் ஓட்டத்தின்
தான் ஒரு பயணி
இறைவனின் படைப்பில்
நான் ஒரு அடியான்
படைத்தவனை நம்புகிறேன்!
பாவத்தை விலக்குகிறேன்!
காலத்தில் சங்கமிக்கிறேன்!
நடந்தவையும்
நடக்கின்றவையும்
நடக்கவிருப்பவையும்
என் இரட்சகன் எழுதிய
விதியே தவிர வேறு இல்லை
விதி விழாக்கோலமே ஆனாலும்
விதியின் வெளிச்சம்
விளக்குடைந்தே போனாலும்
என் இரட்சன் துணை இருக்க
வேறெதுவும் தேவை இல்லை!!!!