ஆருயிர் தங்கை

  • 11

இரத்தம் சூழ்ந்த கருவறையில்
என் பின்னே தங்கி
தங்கையாய் தரணியில்
வரம் பெற்று வந்த தேவதை

புலர்ந்திடும் விடியல்களில்
மலர்ந்த முகத்தோடு
வாழ்வின் வண்ணம் கூட்டும்
என் வீட்டின் பொக்கிஷம்

சிறுவயது முதலே – என்
பெருமைகளைப் பேசி
பொறுமை காக்கும்
என்னருமைச் சொந்தம்
தோழியாகப் பழகி
கேலிகள் பல செய்து
இன்பத்தில் திளைத்து
துன்பத்தில் துவண்டாலும்
நான் தேடும் பந்தம்

கனிவோடு இணைந்த
பணிவும் – மனத்
துணிவோடு இணைந்த
குணமுமே இவளின்
அன்பான ஆயுதங்கள்

உறவுகளின் திசைப்பரம்பலில்
போலியாகிப்போன நேசங்களிலும்
கூலியாகிப் போன பாசங்களிலும்
வேசம் போடத் தெரிந்திடாத
வெள்ளந்தியான உறவிது

காலத்தின் கோலங்கள்
காயங்களைத் தந்தாலும்
கணப்பொழுதிலே
கவலை மறக்கச் செய்யும்
கள்ளங்கபடமில்லா உறவிது

என் கண்ணிறைந்த கனவுகளும்
கைகூடி வருவதற்காய்
கண்ணீருடன் கையேந்தி
கடவுளிடம் பிரார்த்திக்கும்
கடன்பட்ட உறவிது

நெஞ்சுக்குள் விதையாய்
விளைந்து நிற்கும்
விலையில்லா என் உறவே
எண்ணத்தில் உனக்காக
செய்வதற்கு ஏராளம் கடமைகள்
உள்ளத்தில் கணக்கின்றன

உன் மனம் புரிந்தவனை
உனக்காக வரன் பார்த்து
அவன் கரம் பற்றிக் கொடுக்க
நானும் தவமிருப்பேன்

உரித்தானவனிடம்
உன்னை ஒப்படைத்த
பேருவப்பில் உன்
உச்சி முகர்ந்து வழியனுப்ப

என் விழியோரம் வழிந்திடும்
விழிநீரை விரைவாய்
என்னுள் புதைத்திடுவேன்
என்னாயுள் வரை உன்னைக் காத்திடுவேன்.

நிலாக்கவி நதீரா முபீன்,
புளிச்சாக்குளம்

இரத்தம் சூழ்ந்த கருவறையில் என் பின்னே தங்கி தங்கையாய் தரணியில் வரம் பெற்று வந்த தேவதை புலர்ந்திடும் விடியல்களில் மலர்ந்த முகத்தோடு வாழ்வின் வண்ணம் கூட்டும் என் வீட்டின் பொக்கிஷம் சிறுவயது முதலே –…

இரத்தம் சூழ்ந்த கருவறையில் என் பின்னே தங்கி தங்கையாய் தரணியில் வரம் பெற்று வந்த தேவதை புலர்ந்திடும் விடியல்களில் மலர்ந்த முகத்தோடு வாழ்வின் வண்ணம் கூட்டும் என் வீட்டின் பொக்கிஷம் சிறுவயது முதலே –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *