நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்

  • 15

ஒரு ஏழை விவசாயி தன் கர்ப்பமான மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான், வாகன வசதி இல்லாத காலம் அது! கடும் வெயிலில் இருவரும் நடை பயணமாக சென்றனர், அப்போது அவன் மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது,

ஆளில்லா இந்த நடைபாதையில் என் கணவர் தண்ணீருக்காக எங்கு செல்வார்!” என ஒன்றும் சொல்லாமல் மௌனமாக வருகிறாள். தன் மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்பதை உணர்ந்த கணவன் தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் விற்பதை கண்டு தன் மனைவியின் கையை பிடித்துக்கொண்டு வேகமாக அவரிடம் செல்கிறான், அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது அவனிடம் ஒரு இளநீர் வாங்க மட்டுமே காசு இருக்கிறது என்று!”

சரி ஒரு இளநீர் கொடுங்கள் என்று வாங்கியவன் தன் மனைவிக்கு கொடுத்து “நீ குடிமா” என்கிறான். “எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள்!” என்றாள் அவள்… இறுதியில் தன் மனைவியை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தாள்.

இளநீரை வாங்கியவள் “என் கணவர் எனக்காக காடு மலை எல்லாம் வேலை செய்கிறவர் அவர் குடிக்கட்டுமே என… குடிப்பது போல் நடிக்கிறாள், இளநீர் கணவன் கைக்கு வந்தது. அவனும் மனைவியை போல… “என் மனைவி என் கருவை சுமக்கிறாள்! எனக்காகவே வாழ்கிறாள்! இன்னும் கொஞ்சம் அவள் குடித்தாள் என்ன?” என்று இவனும் குடிப்பது போல் நடிக்கிறான்.

வெகுநேரமாக இருவரும் ஒருவர் கைக்கு ஒருவர் இளநீரை மாற்றி மாற்றி குடிப்பது போல் நடிப்பதை கண்ட அந்த முதியவர். வேறொரு இளநீரை வெட்டி “நீ என் பொண்ணு போல இருக்கிறாய்! இந்த இளநீரை நீ குடிமா!” என்கிறார், கணவனின் அனுமதியோடு இளநீரை வாங்கியவள் அப்போதுதான் கணவனும் குடிப்பதை கண்டு… “நீங்கள் இப்போதுதான் இளநீர் குடிக்கிறீர்களா”? என்று கேட்க, “உனக்கு இல்லாமல் நான் மட்டும் எப்படி…!” என்றான்.

“இப்போது அன்பு என்ற ஒன்றும் விட்டுக்கொடுக்கும் குணமும் இருந்ததால் ஒரு இளநீர் வாங்க இருந்த காசுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது”

காதலின் சிறந்த காதலே ஒரு கணவனும் மனைவியும் காதலிப்பதுதான். அப்படி ஒரு காதலை தேடுங்கள், அவை கிடைத்ததும், அற்ப சிற்றின்பத்திற்காக பேரின்பத்தை இழந்துவிடாதீர்கள்.

NAFEES NALEER
2019:12:27
இரவு :02:45 Am

ஒரு ஏழை விவசாயி தன் கர்ப்பமான மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான், வாகன வசதி இல்லாத காலம் அது! கடும் வெயிலில் இருவரும் நடை பயணமாக சென்றனர், அப்போது…

ஒரு ஏழை விவசாயி தன் கர்ப்பமான மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான், வாகன வசதி இல்லாத காலம் அது! கடும் வெயிலில் இருவரும் நடை பயணமாக சென்றனர், அப்போது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *