சரியான வெற்றி

  • 13

வழமை போல் இம் முறையும் ரகு வெற்றிக் களிப்பில் வெற்றிக் கேடயத்தை சுமந்தது போன்ற உணர்வில் நெஞ்சை நிமிர்த்தி வீறு நடை போட்டு தன் வகுப்பறைக்குள் நுழைந்தான்.

நண்பர்கள் யாவரும் அவனை கரகோக்ஷமிட்டு குதுகலமாக வரவேற்றனர். கணித பாடம் முடிவடைய இடைவேளை. அவன் காலை உணவாய்க் கொண்டு வந்திருந்த ரொட்டித் துண்டுகளை நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டான். பின்னர் எல்லோருடனும் ஓடிப்பிடித்து விளையாடினான். அவன் சற்று களைப்புறவே கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டான்.

ஒரு நாளும் இல்லாதவாறு அவனது சிந்தையைக் கவர்ந்தது அந்த விடயம். அவன் மனம் லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை சிந்திக்கத் துண்டியது.

ஒரே அளவிலான இரண்டு எறும்புகள் ஒரு உணவு குண்டுக்கு சண்டை போடுவதை அவதானித்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக இழுத்து வெற்றி பெற போராடிக் கொண்டிருந்தது. இறுதியில் ஒன்று அசதி அடைய மற்றயது உணவு உருண்டையை சொந்தம் கொண்டாடியது. அது வெற்றிக் களிப்பில் பேருவகை அடைந்தது.

இது ரகுவை சிந்தனையில் ஆழ்த்தி விட்டது. ஏனெனில் இதுகால வரை அவன் போட்டி போட்டு வெற்றி பெற்றதெல்லாம் சின்னஞ் சிறிய பையன்களளுடன். அவனுக்கு இப்போது அவன் செய்தது எல்லாம் பிழையாகத் தோன்றியது. அவனுக்கு உண்மை வெற்றியாக எதுவுமே தோன்றவில்லை. ஏனெனில் இது கால வரை அவன் அவனைக் காட்டிலும் சிறியவர்களுடனேயே போட்டி போட்டதாலாகும்.

ரகு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவனாய் மனதில் ஒரு உறுதியான முடிவாய் திடசங்கற்பம் பூண்டான். அதாவது இனிமேல் போட்டி என்று வந்தால் அது தனக்கு சரி சமமானவர்களுடன் தான் என்றும் நேருக்கு நேர் இருந்து தான் போட்டியில் ஜெயிப்பது என்றும் பிறரை ஏமாற்றி தான் வெற்றி பெறுவது மனதுக்கு எந்த மகிழ்ச்சியையும் தருவதில்லை என்பதனையும் உணர்ந்து கொண்டான்.

அவன் திருப்தியாய் வாழ்க்கையை வெற்றிகொள்ள மன உறுதி பூண்டான். அவனது மன மாற்றத்தை ஏற்படுத்திய இறைவனுக்கு தனது நன்றியினைத் தெறிவித்தவனாய் புதிய நல்ல ரகுவாய் வாழமுற்பட்டான்.

நீதி : போட்டி என்று வந்தால் நேருக்கு நேர் சரி சமமானவர்களுடனேயே போட்டி போட வேண்டும்.

“தேசிய கலை இலக்கிய விழா 2018-2019” வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசர அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கியப் போட்டியில் 18 வயதுக்கு மேல் பிரிவில் சிறுவர் கதைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாம் இடம் பெற்ற சிறுவர் கதை.

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS – 2
பஸ்யால

 

வழமை போல் இம் முறையும் ரகு வெற்றிக் களிப்பில் வெற்றிக் கேடயத்தை சுமந்தது போன்ற உணர்வில் நெஞ்சை நிமிர்த்தி வீறு நடை போட்டு தன் வகுப்பறைக்குள் நுழைந்தான். நண்பர்கள் யாவரும் அவனை கரகோக்ஷமிட்டு குதுகலமாக…

வழமை போல் இம் முறையும் ரகு வெற்றிக் களிப்பில் வெற்றிக் கேடயத்தை சுமந்தது போன்ற உணர்வில் நெஞ்சை நிமிர்த்தி வீறு நடை போட்டு தன் வகுப்பறைக்குள் நுழைந்தான். நண்பர்கள் யாவரும் அவனை கரகோக்ஷமிட்டு குதுகலமாக…

One thought on “சரியான வெற்றி

  1. Helpful information. Lucky me I discovered your website unintentionally, and I’m surprised why this accident did not happened in advance! I bookmarked it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *