காத்திருக்கின்றேன்

  • 6

தவிக்கின்றேன் தட்டி
ஆறுதல் சொல்ல யாருமில்லை
துன்பங்கள் மட்டுமே
எனை புடை சூழ்ந்து கொண்டது
காத்திருக்கின்றேன்
அந்த விடியலிற்காய்

இம்மானுட வர்க்கமின்றிய
தனிக் காட்டினில்
நானும் தொலைந்திட
காத்திருக்கின்றேன்

என்றோ நான் இழந்தவைகள்
இன்று வரை எனை வதைக்கின்றது
நினைவுகளாக
ஆனாலும் காத்திருக்கின்றேன்
அந்த விடியலிற்காக

தினம் தினம் கண்ணீராலே
என் நாட்குறிப்புக்கள்
நனைகின்றன
நனைந்த சுவடுகள் மட்டும்
மீதமிருக்கிறது
ஆனாலும் காத்திருக்கின்றேன்
அந்த கண்ணீர் துடைக்கும்
கரத்திற்காக

வேட்கையுடன் போராடிய
காலம் போய்விட்டது
வேதனை மடடுமே என் வாழ்க்கை ஆனது
வாழ்கை எனை வாழ வைக்காவிடினும்
இப்பாரினிலே வாழப்ப பழக்கி விட்டது
ஆனாலும் காத்திருக்கின்றேன்
என் விடியலிற்காக

றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான்
(ஹுதாயிய்யா)
மருதமுனை

தவிக்கின்றேன் தட்டி ஆறுதல் சொல்ல யாருமில்லை துன்பங்கள் மட்டுமே எனை புடை சூழ்ந்து கொண்டது காத்திருக்கின்றேன் அந்த விடியலிற்காய் இம்மானுட வர்க்கமின்றிய தனிக் காட்டினில் நானும் தொலைந்திட காத்திருக்கின்றேன் என்றோ நான் இழந்தவைகள் இன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *