என் தளம்

  • 8

அமைதியின் ஆட்சியில்
உலாவிடும் உயிர்களும்
கீச்சலிடும் கிளிகளும்
மூச்சுவிடும் மரங்களும்
பாட்டிசைக்கும் குயில்களும்

தாவிடும் அணில்களும்
வண்ணமிடும் வண்ணத்திகளும்
எண்ணம் போல் வாழும்
அத்தனையும் கொண்டதுவே
என் தளம்

தலைநிமிர் வர்த்தகமாய்
உப்பளமும் மீன்பிடியும்
தென்னையும் நெற்பயிரும்
வரலாறும் விதந்துரைக்கும்
நீண்ட கல்வெட்டும் கொண்டதுதான்

அந்நியச் செலாவணியை
அதிகரிக்கும் அட்டைகளும்
சிப்பிகளும் இறால் வளர்ப்பும்
மரக்கறிக்கு மண்வளமும்
மரமுந்திரிச் செய்கையிலும்
செல்வாக்குப் பெற்றதுதான்

கவின் வனத்தைக்
கள்ளத் தனமாய்
கவர்ந்திட்டுக்
கழிவுகளை கொட்டிவிடக்
கணக்கிடும் கயவர்களே!

கடுஞ்சத்தமிடக்
கதிரையில்
யாருமில்லையென்றா
கொஞ்சும் அழகை
குழைத்திடப் பார்க்கிறீர்?

கறைபடிந்த நிலக்கரியால்
காற்றும் கற்பழிக்கப்பட்டது
தட்டிக் கேட்டாலும்
வாக்கினையளித்ததும் – உம்
போக்குகளும் மாறியது

அதிகார நகங்களால்
நகரத்தின் சுவர்களை
நரகமாக்குவது போதாதென
நாற்றங்களை நறுமணமாக்க
நாடகமா போடுகிறீர்?

உம் மனங்களும்
மரணித்துப் போனதால்
மணங்களை முகர்ந்திடாது
மூச்சயர்ந்து மன்றாடப்போகும்
மறுசந்ததிக்காய்ப் போராடும்
புத்தளத்தின் பெருஞ்செல்வங்களாய்
புறப்படுவோம் நாம்.

நிலாக்கவி நதீரா முபீன்,
புத்தளம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

அமைதியின் ஆட்சியில் உலாவிடும் உயிர்களும் கீச்சலிடும் கிளிகளும் மூச்சுவிடும் மரங்களும் பாட்டிசைக்கும் குயில்களும் தாவிடும் அணில்களும் வண்ணமிடும் வண்ணத்திகளும் எண்ணம் போல் வாழும் அத்தனையும் கொண்டதுவே என் தளம் தலைநிமிர் வர்த்தகமாய் உப்பளமும் மீன்பிடியும்…

அமைதியின் ஆட்சியில் உலாவிடும் உயிர்களும் கீச்சலிடும் கிளிகளும் மூச்சுவிடும் மரங்களும் பாட்டிசைக்கும் குயில்களும் தாவிடும் அணில்களும் வண்ணமிடும் வண்ணத்திகளும் எண்ணம் போல் வாழும் அத்தனையும் கொண்டதுவே என் தளம் தலைநிமிர் வர்த்தகமாய் உப்பளமும் மீன்பிடியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *