எனதூர் வந்து பாருங்கள்!

  • 9

பொத்துவில் பக்கம்
வந்து பாருங்கள்
பூத்து கிடக்கும்
வயலின் மணத்தினை
சுவாசித்துதான் பாருங்கள்
கொஞ்சம்!

எங்கள் ஊருக்குள்
நுழையும் முன்பு
உங்கள் மனதிலிருந்து
மறைந்து விடும்
துன்பம்!

பஸ் தரிப்பிடம்
கடக்கையிலே உங்கள்
இருப்பிடம்தான் ஞாபகம்
வருகுமையா!

மண் மலை
போகையில மனம்
எல்லாம் ஓடுமையா
நாம் நடை
பழகிய ஞாபகங்கள்
எல்லாம்!

கொத்து கொத்தாய்
போக கொட்டுக்கல்லும்
இருக்குதையா எங்களூரிலே!

அறுகம்பை பாலம்
போகையில புதினம்
பாக்க வைக்குமையா
அழகான கலப்பும்
கடலும்!

யப்பான்(செல்வன்) மீனும்
சீர கொச்சிக்காயும்
விளாங்காயும் போட்டு
கறீ ஆக்கையிலே
அடி நாக்கும்
ருசிக்குமையா இன்றுவர!

குடக்கள்ளி மலை
போகையிலே குளிர்
காயத் தோணுமையா
இயற்கையின் அழகு
பார்த்தபடி!

எங்கள் ஊர்
வந்து பாருமையா
வந்த இடமெல்லாம்
போன இடம்
எல்லாம் உங்களை
தேடி துடிக்குமையா!

காட்டு வழிப்
போக இரத்தல் குளம்
இருக்குதையா!

கருவாட்டு வாசமும்
கரவலை பாட்டும்
அரவணைக்கும் ஊரும்
இங்குதானையா!

எங்களுரை நான்
பாடி வேலையில்லை
நீங்க வந்து
பாருமையா கொஞ்சம்
கவி பாடுமையா!

பொத்துவில் அஜ்மல்கான்

பொத்துவில் பக்கம் வந்து பாருங்கள் பூத்து கிடக்கும் வயலின் மணத்தினை சுவாசித்துதான் பாருங்கள் கொஞ்சம்! எங்கள் ஊருக்குள் நுழையும் முன்பு உங்கள் மனதிலிருந்து மறைந்து விடும் துன்பம்! பஸ் தரிப்பிடம் கடக்கையிலே உங்கள் இருப்பிடம்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *