அரசிடம் உள்ள பணமும் இல்லாத பணமும்

இப்னு அஸாத் மொட்டுவை நேராக்க கிராமத்துடன் உரையாடலுக்கு 7,124 கோடி, ஆனால் ஆசிரியர் சம்பளம் கொடுக்க பணம் இல்லை. எண்ணெய் கடனை தீர்க்க பணம் இல்லை. ஆனால் கடன்பெறுவதற்கு கம்மன்விலவுக்கு 3552 கோடி கமிஷன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திடம் உள்ள பணம் தொடர்பிலும் இல்லாத பணம் தொடர்பிலும் பல ஆவணங்களுடன் விளக்கமொன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். கிராமத்துடனான உரையாடல் கிராமத்திற்கு பணம் விநியோகிக்க அரசு தயாராக உள்ளது. அது ஒரு தேர்தல் அருகே வரும் என்பதற்கான […]

Read More

புலிகளின் மீள் எழுச்சியை புலம்பெயர் தமிழ் சமூகங்கள் விரும்புகின்றன – பேராசிரியர் குணரத்ன

இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு ((NIA) கடந்த செவ்வாய்க்கிழமை முன்னாள் செயலிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த புலனாய்வாளரை சென்னையில் கைது செய்தது. இந்தப் பின்னணியில், சண்டே அப்சர்வர் பேராசிரியரிடம் ரோஹன் குணரத்ன அவர்களை பேட்டி கண்டது. பயங்கரவாதக் குழு 2009 ல் இலங்கையில் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும், சர்வதேச முன்னணியில் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக அவர் நம்புகிறார். Q: சென்னையில் இந்த வாரம் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார். அவர் புலிகளின் […]

Read More

போட்டியோடு போட்டியிட நீங்கள் தயாரா?

BINTH AMEEN BA ( SEUSL) SLTS கோவிட் காலமதில் பாடசாலைகள் மூடப்பட்டு எல்லோரும் வீடுகளிலேயே அடைபட்டுள்ளதால் போட்டிகள் முடிவிலியாக வந்தவண்ணமே இருக்கின்றன.போட்டிகள் உண்மையில் நல்லவிடயமாய், திறமைகளுக்கு களமாய் இருந்தாலும் இன்றைய போட்டிகள் வெறும் பெயருக்காக நடாத்தப்படுபவையாக இருக்கின்றது என்பதே கவலைக்கிடமான செய்தியாகும். தற்கால போட்டிகள் திறமைகளை வெளிக்கொண்டுவர வழியமைக்கின்றதா என்றால் உண்மையில் கேள்விக்குறிதான். ஏனெனில் அவை திறமையை திரைநீக்கம் செய்ததோ, இல்லையோ லைக்களுக்கும் (like ,subscribe) சப்ஸ்கிரைப்களுக்குமே முன்னுரிமையளிக்கின்றன. இது உண்மையில் அவசரமாய் சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய […]

Read More

தேச நலனுக்கு பங்களிப்புச் செய்த நளீம் ஹாஜியார்

இலங்கை மண் ஈன்­றெ­டுத்த தேச நல­னுக்­காக செயற்­பட்ட உன்­னத ஆளு­மை­களில் ஒரு­வ­ராக நளீம் ஹாஜியார் திகழ்­கிறார். 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி பேரு­வளை சீனன்­கோட்­டையைச் சேர்ந்த முஹம்­மது இஸ்­மாயில், ஷரீபா உம்மா தம்­ப­தி­க்கு வாரி­சாக நளீம் ஹாஜியார் பிறந்தார். மிகுந்த வறு­மைப்­பட்ட குடும்பப் பின்­ன­ணியில் பிறந்து வளர்ந்த அவரால் ஐந்தாம் வகுப்பு வரை மட்­டுமே பாட­சாலைக் கல்­வியைத் தொடர முடி­யு­மாக இருந்­தது. இளம் வய­தி­லேயே சுய­மாக தொழில் செய்து உழைக்க வேண்­டிய நிர்ப்­பந்த […]

Read More

உயிரை பணயம் வைத்து போதைப்பொருள் வியாபாரியை பிடிக்க போராடிய பொலிஸ் அதிகாரி

ஒரு சில ஊழல் மோசடிகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வது தமது உயிரையும் பணயம் வைத்தாகும். அவ்வாறான துணிச்சலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய செய்திகள் வரலாற்றிலும் காணப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்னர் சீசீடிவியில் பதிவான அவ்வாறான துணிச்சல் மிக்க பொலிஸ் ஹீரோ ஒருவரின் செயலை முழு நாடுமே பார்த்தது. கடந்த 20ம் திகதி காலை 9.00 மணியளவில் நுகோகொடை பொலிஸ் பிரிவின் மோசடி ஒழிப்பு பிரிவினது அதிகாரிகள் […]

Read More

இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்துக்காக அயராது உழைத்த ஒராபி பாஷா

மார்லின் மரிக்கார் அஹ்மட் ஒராபி பாஷாவின் 110 வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 21ஆம் திகதி) ஆகும். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு பங்களித்தவர்களில் அஹ்மட் ஒராபி பாஷாவும் குறிப்பிடத்தக்கவராவார். எகிப்து நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1880 களில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். அதன் விளைவாக அவரும் அவருடன் இணைந்திருந்தவர்களும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு இலங்கைக்கு வந்து சேர்ந்த ஒராபி பாஷா இந்நாட்டு முஸ்லிம்களின் நவீன கல்வி மறுமலர்ச்சிக்கு உழைத்துக் […]

Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளான தாய்மார் குழந்தைக்கு பாலூட்டுவது எவ்வாறு?

‘கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பாலூட்டும் தாய்மார் முகக்கவசம் அணிந்தபடி குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டலாம்’ என்று விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் விஜி திருக்குமார் தெரிவிக்கின்றார். அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான தாய்மார் ஏற்கனவே அறிவுறுத்தியபடி வீட்டினுள் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என்றும் அவர் கூறுகின்றார். ‘இக்காலத்தில் குழந்தைகளுக்கான பால்மாவைப் பெற்றுக் கொள்வது சிரமமாக இருந்தால் எமது நாட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பசும்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது நன்று. எனினும், ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக […]

Read More

இறக்குமதி பதிலீட்டுக் கொள்கை எமது நாட்டுக்கு சாத்தியப்படுமா?

கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் கோவிட் 19 கொள்ளை நோய் மிக மோசமான காலகட்டத்தை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. உலகில் நோய்த்தொற்று ஆரம்பகாலகட்டத்தில் நோயைக்கட்டுப்படுத்துவதில் இலங்கை எய்திய சாதனைகள் பலமட்டங்களிலும் பாராட்டுக்கு உரித்தானது. ஆனால் நாட்டில் முழு முடக்க நிலை நீக்கப்பட்டு நாடு திறந்து விடப்பட்டதன் பின்னர் நோய்த்தொற்று இரண்டாம் அலை முன்றாம் அலைஎனத் தொடங்கி தற்போது கட்டுக்கடங்காத வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்வந்த உத்தியோக […]

Read More

மயக்கம் தரும் அவசரகாலச் சட்டம்

எம்.எஸ்.எம். ஐயூப் அத்தியாவசிப் பொருட்களின் சீரான விநியோகத்தை நோக்கமாகக் கூறி, ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி, அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிறப்பித்தார். ஆனால், அதன் முக்கியத்துவத்தையோ பாரதூரத் தன்மையையோ, தமிழ்ப் பத்திரிகைகள் தவிர்ந்த இந்நாட்டின் ஏனைய ஊடகங்கள் காணவில்லைப் போலும்! சில தமிழ்ப் பத்திரிகைகள், அச்செய்தியை முன்பக்கத் தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தன. ஆனால், சிங்களம், ஆங்கிலம் மொழி பத்திரிகைகள், முன்பக்கச் செய்தியாகப் பிரசுரித்தாலும், பிரதான செய்தியாகப் பிரசுரிக்கவில்லை. வழமையாக இலங்கையில், பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்த […]

Read More

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய வங்கியின் உத்தரவாத தொகை அதிகரிப்பு

நா.தனுஜா கையடக்கத்தொலைபேசிகள், தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் சாதனங்கள், உடைகள், வீட்டுப்பாவனைப்பொருட்கள், பழவகைகள், ரயர் உள்ளிட்ட 11 வகையான (அதற்குள் மேலும் பல பொருட்கள் உள்ளடங்குகின்றன) அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்யும்போது இறக்குமதியாளர்கள் அவற்றுக்கான முழுத்தொகையையும் பணமாக வைப்புச்செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியில் புதன்கிழமை நடைபெற்ற நாணயச்சபையின் கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகளின் நாணயக்கடிதங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதியின்போது […]

Read More

முஸ்லிம் விவாக சட்ட சீர் திருத்தத்தின் முக்காடு – காதீ நீதிமன்றம்

Mass L. Usuf LL. B (Hons.) U.K., ACIS (U.K.) Attorney at Law (Ex-Advisor to the former Private Department of the President of U.A.E.) பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் முஸ்லிம் விவாக சட்ட  சீர்திருத்தங்களை விரும்புகிறார்களா? தெளிவான பதில் என்னவென்றால், முஸ்லிம் சமூகம் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்கவலைப்படவில்லை. “பெரும்பாலும் நாம் கேள்விப்படாத மனிதர்களால் நாங்கள் ஆளப்படுகிறோம், நம் மனம் வடிவமைக்கப்பட்டுள்ளது, எங்கள் ரசனைகள் உருவாகின்றன, எங்கள் யோசனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.” […]

Read More

அவசரகால நிலைமை பிரகடனத்தின் இலக்கு பொருளாதாரமா, வாழ்வாதாரமா?

லக்ஸ்மன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில் பிரகடனப்படுத்து வதற்கானதாகவே அவசரகால நிலைமைப்பிரகடனத்தைக் கொள்ளலாம். ஆனால், நமது நாட்டில் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவதற்காக இது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை , கடந்த சில மாதங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  சீனி, பால்மா, அரிசி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே […]

Read More

காதி நீதிமன்ற ஒழிப்பும் முஸ்லிம் சட்டத்திற்கு எதிராக முதல் துப்பாக்கி நீட்டும் முஸ்லிம்களும்

பேருவளை ஹில்மி முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருந்த, சில திருத்தப்பட வேண்டிய குறைபாடுகளை சந்தர்பமாக பயன்படுத்தி, முஸ்லிம் பெண்களுக்கு அநியாயம் நடப்பதாக, ஆடு நனையுது என சில ஓநாய்கள் ஒப்பாரி வைத்ததை நாம் கண்டோம். தேர்தல் காலங்களில் இந்த இனவாத சக்திகளுக்கு சாதகமாக, முஸ்லிம் சமூகத்தின் பாசறைக்குள் வாழும், சில பெயர் தாங்கி முஸ்லிம்களும், இனவாத மீடியாக்களில் தோன்றி, இனவாதிகளுக்கான பங்களிப்பைச் செய்ததையும் அக்காலங்களில் அவதானிக்க முடிந்தது . இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டம் […]

Read More

நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை அவசரகால விதிகளின் கீழ்தான் வழங்க வேண்டுமா?

கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களில் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு நெருக்கடியான ஒரு சூழலில் மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறியுள்ளதாக தலைப்புச் செய்திகள் வெளிவந்தன. இலங்கை அரசாங்கம் இலங்கையில் உணவுப்பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை என உடனடியாக மறுத்தது. இவ்வாறு சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளிவரக்காரணமாக அமைந்தது இலங்கை உணவுப்பொருள் விநியோகம் தொடர்பாக அவசரகால விதிகளின் கீழ் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்களாகும். அவசரகால விதிமுறைகள், சமாளிக்க முடியாத […]

Read More

16 வருடம் சிறையில் கழித்து கொரோனாவுக்கு பலியான பொட்ட நவ்பர்

எம்.எஸ்.முஸப்பிர் பாதாள உலகம் எந்தளவுக்கு பலமானது எனச் சொன்னாலும் அவர்களில் அனேகமானவர்களின் ஆயுட்காலம் அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்கான பலனை அனுபவித்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியோ அல்லது எதிர் தரப்பினராலோ இளம் வயதிலேயே முடிவடைந்து விடுகின்றது. என்றாலும் ஓரிருவர் சில காலம் உயிர் வாழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருப்பது அவர்கள் இந்நாட்டிலிருந்து தப்பிச் சென்று அல்லது சிறையில் அடைக்கப்பட்டவர்களாக இருப்பதனாலாகும். அவ்வாறு கடந்த 16 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் சில காலம் உயிர் வாழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்த […]

Read More

மலையக தமிழ் இலக்கிய விடிவெள்ளி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்

மலையகத் தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் புகழ் நாமம் சூடப் பெற்ற உத்தமப் புலவரே அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் ஆவார். மலையகத்தின் தெல்தோட்டை நகரில் உள்ள போப்பிடிய எனும் சிற்றூரே புலவர் பிறந்த இடமாகும். புலவர் தம் பிறப்பால் ‘புலவர்மலை’ எனும் சிறப்பு நாமம் பெற்று இன்று ‘புல்லுமலை’ என திரிபு கொண்டு அழைக்கப்படுகிறது அச்சிற்றூர். தமிழ் மீதான தணியாத ஆர்வமும், இஸ்லாமிய சமய ஞானமும் ஒருங்கே பெற்று அதனூடே ஒரு தனியான இலக்கிய மரபினைத் […]

Read More

ஷியா, சுன்னி மோதல்கள் எதுவரை எதிரொலிக்கும்? காபூல் தாக்குதல் கற்பிக்கும் பாடங்கள்!

சுஐப் எம். காசிம் மேலைத்தேயம் விரும்பும் முஸ்லிம் நாடுகளில் அமைதி ஏற்படுமா? என்று சந்தேகம் எழுமளவுக்கு ஷியா, சுன்னி மோதல்கள் கூர்மையடைந்து வருகின்றன. மட்டுமல்ல, விரும்பாத நாடுகளிலும் நெருக்கடிகள் நின்றபாடில்லை. முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள இந்தக் கவலை முழு உலகையும் வியாபிக்கும் நிலையில்தான், இதன் விஸ்வரூபம் தலைவிரித்தாடுகிறது. சுமார், ஐம்பது இஸ்லாமிய நாடுகளுள்ள இந்த உலகில் முஸ்லிம்களின் சனத்தொகை இரண்டாமிடத்திலுமுள்ளது. இதற்குள்தான், இத்தனை பிளவுகளால் முஸ்லிம் உலகு திண்டாடுகிறது. இந்தத் திண்டாட்டம் சில ஏகாதிபத்தியவாதிகளுக்கு கொண்டாட்டமாகவுள்ளதையும் நாம் […]

Read More

கொவிட்-19க்குப் பரிகாரமாகாத அமைச்சரவை மாற்றங்கள்

எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த 16 ஆம் திகதி அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தார். அந்த நிலையில், அமைச்சரவையில் மேலும் ஒரு மாற்றம் இடம்பெற இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார். “நாடு முன்னேற வேண்டுமானால், வருடாந்தம் இவ்வாறான மாற்றங்கள் இடம்பெற வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார். அது எவ்வாறு என்று, அவர் விளக்கவில்லை. திங்கட்கிழமை (16) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துக்கான காரணத்தை,  ஜனாதிபதியையும் சிலவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் தவிர, எவரும் […]

Read More

கொரோனா முஸ்லிம்களால் பரப்பப்படுகிறதா?

பேருவளை ஹில்மி இன்று அதிகமான மீடியாக்களை பொருத்தவரையில் கொரோனாவை பரப்புவதில் முஸ்லிம்கள் முன்னணியில் நிற்கின்றனர் என்றும், அதற்குச் சான்றாக மரணிக்கும் மொத்த மரண விகிதத்தில், முஸ்லிம்கள் அதிகரித்திருப்பதையும் முன்வைக்கின்றனர். இவ்வாறான முஸ்லிம் சமூகத்தின் மீது விரல் நீட்டும் ஒரு குற்றச்சாட்டு, இன்று பக்கச்சார்பான சில மீடியாக்களால் பரப்பப்பட்ட போதிலும், இது சம்பந்தமாக முஸ்லிம் சமூகத்தில் இருந்து இதற்கான சரியான பதில் இவர்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கின்றது. அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது கொரோனா சிகிச்சைக்கு பொறுப்பான வைத்தியர் […]

Read More

கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிறார்கள்!

வீ.ஆர் வயலட் னஉதித குணவர்தன பிள்ளைகள் நாட்டின் எதிர்காலம் ஆவர். எதிர்காலத்துக்குச் செய்யும் சிறந்த முதலீடு சிறார்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதும் அவர்களின் மனநிலையை உயர்ந்த தரத்தில் பேணுவதுமாகும். அதனை யாரேனும் செய்யத் தவறினால் அது நாட்டை இருளில் தள்ளுவதற்கு ஒப்பானதாகும். அதனால் சிறுவர் நலனைப் பேண என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தற்போது கடந்த ஒன்றரை வருட காலமாக எமது பிள்ளைகள் சரியான முறையில் கல்வியைப் பெறவில்லை. அவர்கள் […]

Read More