உன் வதனம் காண

கொத்தித்தின்னும் பறவைகளின் கூச்சல்கள் விண்ணைப்பிளக்க மயிர்த்துளையாய் முத்துக்கள் சிந்தின மடைதிறக்கும் கதவுகள் தானாய் இழுத்து மூடிக்கொண்டது ஏனோ புரியாத அலாதியாக அருந்திய மதுவின மயக்கத்தில் தலைகீழாய்க்கவிழ்ந்து ரீங்காரிக்கும் பொன்வண்டாய் வதனம் உன் வழிதிரும்பலில் உணர்கிறேன் ஆன்மாவை கையில் வைத்த நீ எனக்காக இருக்கும் நிலையில் பூவுகைத்தாண்டி சஞ்சரிக்கிறேன். அத்தியந்தமாய் எமக்குள்ள பந்தம் அறுபடாமல் பிணைந்திருக்க என்றும் ஏக்கம் நிறைந்த கண்களுடன் உன் பொருத்தம் எனும் மணியொலிக்க மாசுமறுவற்று தன்னிலை மறந்து உன்னை காணும் பொன்னாளுக்காக விழுத்தமாய் வழுத்திடும் […]

Read More

கிராமத்துக்காதல்

செம்மை அதரமதில் செம்மணம் கமழுதடி! செந்நீரால் சமஞ்சவளே செந்தழலாய் ஒன் வதனமடி! செக்கச் செவந்த பாதமதை செந்தேனமுதில் தொட்டமிழ்த்தி செம்மீன் ஒன்ன செதுக்கி வைப்பேன் செம்மேனி முழுதும் செம்மணி வைத்தே! சேற்றை எடுத்து சேர்த்து வச்சி சேயிழை ஒன்ன செவ்வை செய்வேன் செங்கதிர் வந்து பார்க்கும் முன்னே செம்பஞ்சு கொண்டு ஒன்ன மறச்சி வைப்பேன்! சென்மம் தீர சேவை செஞ்சி சேலை உடுக்க ஒனக்கு சோலை செய்வேன்.. சாயம் பூசிய சந்தனச் சேக்கை சிற்பம் நீ உறங்க […]

Read More

படகொன்று கவிழ்ந்ததே

படகொன்று கவிழ்ந்ததே பரிதாபம் நிறைந்ததே அழகான உயிர்கள் சேர்ந்து அல்லாஹ் அழைப்புக்குள் நுழைந்ததே தண்ணீரும் தவித்ததே கண்ணீரும் கொதித்ததே விடிகாலைப் பொழுதும் அன்று இடியாக இடித்ததே செவியுற்றோர் இதயமெல்லாம் இரும்பாகக் கனத்ததே பிஞ்சுயிர்கள் கண்மறைந்தே நெஞ்சமெல்லாம் துயர் நிறைந்ததே தன்உறவு தொலைத்த சொந்தங்கள் சோகத்தில் நிலைத்ததே உலகத்தின் நிலையாமை காட்சிகளாய் நிலைத்ததே தாயன்பின் அடையாளம் மரணத்திலும் வழுத்ததே இதயத்தின் திசுக்களெல்லாம் ஓயாமல் வலித்ததே விழியிரண்டில் கண்ணீரும் கடலெனவே வழிந்ததே இறைவிதியை ஏற்பதற்கு பலம் கேட்டு மனம் பிரார்த்தனை […]

Read More

கண்ணீரில் கரைந்த கனவுகள்

பாடசாலை சீருடையில் சென்ற நட்சத்திரங்கள் கபன் உடையுடன் திரும்புகையில் பெற்ற இதயங்கள் குமுறுகின்றன தாம் ஈன்ற நல் உள்ளங்களை காணுகையில் உலகம் மறந்து – உறக்கம் கொள்கிறது அப் பச்சிளம் சிட்டுக்கள் பச்சிளங்களின் மிச்சங்கள் பதற வைக்கிறது பெற்றெடுத்த மனங்களை ஆயிரம் கனவுகளுடன் பறந்த சிட்டுக்கள் – பாதி வழியில் பரிதவிக்க வைத்தது – பெற்ற மனம் பாரபட்சமின்றி துடிதுடிக்கிறது விருட்சங்கள் – விதைகளை நட்டு விட்டு துயில் கொள்ள நினைக்கையில் நாளைய தலைமுறையின் தலையெழுத்து இங்கு […]

Read More

கடந்திடும் காயங்கள்

எவரோ ஒருவர் கூறும் யதார்த்தமான வார்த்தைகளுக்கே கண்கலங்கும் நான் எனக்கானவர் மத்தியில் உண்மையில் ஒரு குழந்தை தான் அடுத்தவர் முன் அழகாய் சிறு புன்னகை பூத்து புதிராய் நான் நின்றாலும் என்னைப் புரிந்தவர் முன்னிலும் நான் ஒரு புதிர் தான் ஆழமான வார்த்தைகளில் கூட கண்கலங்காது காரியத்தை முடிக்கும் எனக்கு இன்று நானா இது? என ஏங்க வைத்ததும் நான் செய்த தவறுகள் தான் தவறுகள் ஒன்றும் புதிதில்லை என் வாழ்வில் – எனினும் அந்தந்த நொடி […]

Read More

அன்பு

கதிரவன் தன் இறக்கையை காலையில் விறிக்கையில் காலைக்கடனை நான் கடந்திருக்கவேண்டும் சூரியன் உச்சம் கொடுக்கையில் சுற்றுச்சூழலை முழுதாய் சுத்தம் செய்து சிறப்பாய் உணவுண்ண மேசைக்கு சென்றிருக்க வேண்டும் துளித்துளி மழையை துச்சமாய் நினைக்காமல் தூதுவன் அனுப்பும் காதலாய் துள்ளிக்குதித்துக் கொண்டாடி தெம்பாய் இருக்கவேண்டும் அந்திவானின் அற்புதம் கண்டு ஆயிரம் கவிதை வடிக்கவேண்டும் இவ்வுலகை நிலைபெறச்செய்யும் ஈரமான அன்பை உலகெங்கும் பரப்பவேண்டும் Binth Ameen

Read More

பற்கள் சொற்கள்

பால் வயதிலே பற்கள் முளைக்க பள்ளி சென்று பல்லாயிரம் சொற்களை பக்குவமாய் உச்சரித்து பாட்டுப் பாடி மகிழ பாஷைகள் பரிமாற பாவையாய் அழகு பொழிய பாற் பற்களுக்கு பலம் தேவை! காலை மாலை தினம் உணவுண்ட பின் நிதம் பல் துலக்கி சுத்தி செய்து பல்லீறுகள் நீக்கி போக்கி சிரித்து சிந்தித்து வாழ்ந்தால் முற்றம் எங்கும் மணக்கும் வீடே மல்லிகைப் பந்தல்! அன்றேல் மனது கனக்கும் வீடே துயரின் விம்பம்! பல்லுப் போனால் சொல்லும் போகும்! கண்ணும் […]

Read More

முன்னேறு

சுற்றி உள்ள இருட்டு சூழ்ந்து விட்ட கருமை மறைக்க வரும் மேகங்கள் நெருங்கி வரும் கார்முகில்கள் அத்தனையும் கடந்து விட்டால் பிராகாசிப்பது நீ மட்டுமல்ல! உன்னை சுற்றி உள்ளதும் உனக்காய் சுற்றி வருவதுமாகும் தடைகளை தாண்டி விட்டால் தடம் பதிப்பது நீ மட்டுமல்ல! உச்சம் அடைய உயிர் கொடுத்தவரும், பிராகாசிக்க பிரார்த்தனை செய்தோருமாகும். தகர்த்தெறிந்து முன்னேறு உனக்காய் அல்லாமல் ஊக்குவித்தவருக்காய்! SHIMA HAREES UNIVERSITY OF PERADHENIYA

Read More

மனநலமே பெருவரம்

உலகமனநல தினம் ஒக்டோபர் 10 தனித்து விளையாடும் பிள்ளையிடம் கொஞ்சநேரம் கொஞ்சல் பேச்சு இயந்திரமாய் உலா வரும் அம்மாவுக்கோர் அன்பு முத்தம் அந்திச்சூரியனாய் வீடேறும் அப்பாவிடம் ஒரு புன்னகை சில்லறைகளை கைகளுக்குள் சிறைவைக்கும் பாட்டியிம் கொஞ்சம் அன்பு வார்த்தைகள் இனிப்புக்ளை இனிதுவக்கும் தாத்தாவுடன் சிறு நடை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஆர்வமாய் நலம் விசாரிப்பு தெருவோரக் குளிரில் சுருண்டு படுத்திருக்கும் முதியவருக் கொரு போர்வை யாசித்து திரியும் ஏழை கையில் ஓர் உணவுப் பொட்டலம் இதழ்பிரியா அவசரத்தில் ஒரு […]

Read More

வாழ்த்து மழை பொழிகிறேன்!

கல்விக் கூடத்தில் மாணவர் கல்விக் கல்லூரியில் பயிலுனர் காலங்கள் பல காத்திருந்து கல்லானாலும் கணவன் என கண்ணென எம்.ஏ. முஹம்மது றிப்தியை கணவனெனப் பெற்றேன் நானும்! கடவுள் அமைத்துத் தந்தவர் காதலெனும் அன்பு பொழிந்தவர் கணவனென அன்பு கொண்டவர் கல்விக் கடமையில் கைகோர்த்து கண்ணியம் தான் காத்து கடமைகள் பல நிறைவேற்றி காதல் விளக்கேற்றியவர்! உயிருக்குள் உயிரானவர்! உறவுக்குள் உறவானவர்! உண்மையின் ஒளியானவர்! ஆங்கில அறிவை அள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஆசிரியராக நற்பண்புகளை போதிக்கும் போதகராக ஆசிரியர்களுக்கு […]

Read More

வாழ்வோமா நாம்?

கோரம் இந்தக் கொரோனா அகோரம் அதன் விளைவுகள்! கொத்துக் கொத்தாக கொன்று உயிர் பறித்து ஏப்பமிடும் பொல்லாத கொடுங் கோலன்! உயிரைக் குடிக்கும் பேய் உறவைப் பறிக்கும் எமன் உணர்வுகளைச் சிதைக்கும் வடு உள்ளத்தைத் தாக்கும் ஆயுதம்! உலகை உலுக்கும் உலை! கண்களைக் குருடாக்கி காதுகளையும் செவிடாக்கி கால்களையும் கட்டிப்போட்டு கைகளையும் முடமாக்கி கைவரிசையை காட்டுகிறதே! தடிமன் இருமலெனத் தொடங்கி தலைவலி காய்ச்சலென விரிந்து உடல் வலியென வளர்ந்து தருகிறதே தாங்கொனா வேதனை ஏனெதற்கு இந்த சோதனை! […]

Read More

ஊரடங்கு

ஊரடங்கை மீறி ஊரிலிருந்து நீங்கி ஊதியம் தேடி ஊர்ந்து வந்தபின் ஊரடங்கு என்று ஊனின்றி வாழென ஊடகத்தில் கருத்தை ஊரறிய கூற முடியுமா? ஊமைபோல் நிற்கனுமா? ஊர்பலாய் தெரியாத போல ஊனின்றி தவித்தாலும் ஊரடங்கை மீறி ஊதாரியாக குடிக்க ஊர்குடி மக்கள் ஊர் மேய்தபின்னும் ஊழ்விதிக்கு தீர்வு ஊரடங்கு என்று ஊனின்றி உறக்கமின்றி ஊட்டில் இருக்க முடியுமா? ஊதியமின்றி ஏழைகள் ஊரறிய கூறனும் ஊனின்றி உயிர்காக்க ஊட்டில் இருக்காமல் ஊர்மக்கள் அனைவரும் ஊன் தேடி ஊழியம் செய்ய […]

Read More

மலர்க்கூட்டத்திற்குள் மங்கை

மஞ்சள் மலர்க் கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் மங்கையே உன்னருகிலிருக்கும் கூடையை மலர்களால் நிரப்ப வந்தாயோ? இல்லை உன்னுள் குடிகொண்டிருக்கும் அத்தனை சோகங்களையும் மறப்பதற்கென இங்கு மலர்க்கூட்டங்களோடு இன்பங்கான வந்தாயோ? இவை அத்தனையும் அன்றி நீ ஓர் மலர்களின் நேசக்காரியான மங்கை என தெரிவிக்க வந்தாயோ? Z. Shifra izzath Commerce Ak/as – siraj maha vidyalaya Akkaraipattu

Read More

சிறந்த பொறுமை

என் பொறுமைக்கு ஏளனப்புன்னகை செய்து என் கண்ணீரை சுவீகரித்துக் கொண்ட உறவுகளே! வாழ்க்கைப் படுவது என்பது சிறிய விடயம் அல்ல! திருமணம் என்பது மேடையில் ஏறி அலங்காரமிட்டு! ஆபரணங்கள் அணிந்து! புத்தாடை உடுத்தி! தலைகுணிந்த படியும், புன்னகையுடனும் அமர்ந்து! கணவன் வந்த பின்னே தலை குணிந்து தலைநிமிர்ந்து கொள்வது மட்டுமல்ல! அந்த மேடையை விட்டு கீழே இறங்கி வாழ்க்கையில் இறுதி வரை சோதனைகளுடனும், வேதனைகளுடனும், நம்மை முடி கொண்டு சொந்தமிட்ட உறவை!! உயிர் போகும் கட்டம் வந்தாலும் […]

Read More

முயற்சி செய்

முடியும் என்று முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. முயலாமல் இருந்து இயலவில்லை என்றால் ஏது பயன் மனிதா நாளைய விடியலுக்கு நீ முயற்சி முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஒருநாள் முயலாமை வெல்லாதே இதை மறந்து விடாதே மனிதா! நீ முயற்சியுடன் எட்டி வைக்கும் ஒவ்வொரு எட்டும் – உன் எதிர்காலத்தினை ஒளியேற்றும் ஒளி விளக்கே! தொட்ட காரியத்தை இடையில் விட்டு விடாது முயற்சித்தால் நாளைய விடியலும் பொன்மயமாகுமே! முடியவில்லை என முடங்கிக் கிடக்காமல் முழு […]

Read More

சரித்திர நாயகன் – பாக்கிர் மாக்கார்

10/09/1997 மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஏ பாக்கிர் மாக்கார் அவர்களின் 24வது வருட நினைவுதினக் கவிதை. மண்மீது பிறக்கும் மனிதரெல்லாம் மனதோடு நிலைத்து இருப்பதில்லை. கண்ணோடு கடமை பேணி நின்றோர் மண்ணோடு மறைந்து போவதில்லை. சமுதாயப் புரட்சியொன்றின் சரித்திர நாயகன் அவர். அமுதான திட்டங்களின் ஆளுமை வித்தகர் அவர். மும்மொழிப் பாண்டித்தியம் அவர் சிறப்பு எம் மொழி மக்களுக்கும் அவர் மனதில் இருப்பு. ஆசிரியப் பணியினிலே சில காலம் வாழ்வு சட்டக்கல்லூரி நோக்கி முன்னோக்கி நகர்வு. சட்டம் கற்றார் […]

Read More

அதிசயங்கள் அற்புமானவை

வாழ்வில் எத்தனையோ எதிர்ப்பாராத இழப்புகள் ரத்தம் சிந்தாத காயங்கள் தலை குனித்த அவமானங்கள் நிஜமான ஏமாற்றங்கள் நினையாத துரோகங்கள் தவிடு பொடியாகிப் போன எதிர்ப்பார்ப்புகள் கலங்க வைத்த மாற்றங்கள் கதற வைத்த உண்மைகள் உதறித் தள்ளிய பொய்கள் சின்னாபின்னமான கனவுகள். இப்படி எத்தனையோ வலிகள் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும் வெளியில் சொல்ல முடியாமல் கரைந்து போன கண்ணீர் துளிகளின் மௌனமான வலிகள் அந்த வலிகளுக்குள் ஒரு வெறுமை இருக்கும் அந்த வெறுமைக்குள் இனம்புரியாத […]

Read More

ஒரு மருத்துவரின் வாக்குமூலம்

ஒவ்வொரு நொடியும் மரணம் எனை அழைத்துக் கொண்டிருக்கின்றது. நானோ! உங்கள் வீடுகளில் இருந்து மரணத்தை துரத்திடப் போராடிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் உல்லாசமாய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் நானோ! உணவருந்திடவோ இயற்கைக் கடன்களை நிறைவேற்றிடவோ நேரமின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் பிறந்த தினங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள். நானோ தினம் தினம் இறப்புக்களின் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றேன். உங்கள் அலட்சியமும் உங்கள் அசமந்தத்தனமும் மருத்துவத்தை தோல்வியுறச் செய்து கொண்டிருக்கின்றன. நீங்கள் புரிந்து கொள்ளாதவரை உங்கள் தவறுகளுக்காகவும் தண்டணை அனுபவிப்பது நாங்கள் […]

Read More

கொரோனா

கொரோனா நீ எம்மைத் தாக்க வந்த எமனா?? ஹிட்லரின் தங்கச்சி மவனா??? உன்னை முட்டியில் அடக்கி ஆற்றில் போட்டாங்க… உன் நல்ல நேரம், நீரில் மிதந்து தப்பி வந்தாய்! பாணியில் பிரட்டி உன்னை நக்கிடப் பார்த்தாங்க… உன் நல்ல காலம், நாக்கின் ஓரத்தில் புகுந்து ஓட்டைப் பல்லினூடு காற்றில் பறந்தாய்! எரித்தாலும் எரியாத எரிமலையே! புதைத்தாலும் நிலத்தடி நீரில் கலந்துவிடும் ‘கல்கிரி’யே (කල් කිරි) ! உன் பெயரால் ஏற்பட்ட கடன் கோடி அதனால் மக்கள் போகிறார்கள் […]

Read More

ஊடக அமைச்சர் மாற்றத்துடன் முஸ்லிம் சேவையும் நிறுத்தமா?

சுமார் 70 வருடங்கள் பழமை வாய்ந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) தமிழ் தேசிய சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன இன்று (16) திங்கட்கிழமை மு.ப 11.30 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக SLBC தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி அமைச்சின் அனுசரனையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ‘விசன் எப்.எம்’ எனும் கல்விச் சேவையொன்று இன்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையின்  102.1 அலைவரிசையும், பிறை எப்.எம் இயங்கிய 102.3 […]

Read More