847 சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான தீப்பிடிப்பு, வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட 8 பேர் கொண்ட விசேட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பலகேவினால் நேற்று (20.12.2021) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் அண்மைக் காலமாகப் பதிவாகிவரும் சமையல் எரிவாயு (LPG) (கேஸ்) சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல்கள், வெடிப்புகள் மற்றும் அதற்கான காரணிகளைக் […]

Read More

முருத்தெட்டுவே தேரரிடமிருந்து சான்றிதழைப் பெற மறுத்த பல்கலை பட்டதாரிகள்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சம்பிரதாய பட்டமளிப்பு விழாவின்போது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் என்பன தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழைப் பெற சிலர் மறுத்துள்ள  நிலையில், மாணவர்கள் சில் கைகயில் கறுப்புப் பட்டியை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளனா். முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளன. நேற்று (18.12.2021) இப்பட்டமளிப்பு […]

Read More

அளுத்கமயில் புகையிரதம் மோதி சிறுவன் உயிரிழப்பு

அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் சிறுவனொருவன் புகையிரதத்தில் மோதி இன்று (19.12.2021) உயிரிழந்துள்ளான். காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் குறித்த சிறுவன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்காநகரைச் சேர்ந்த 9 வயது சிறுவனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம புகையிரத நிலையத்திலிருந்து மேற்படி புகையிரதம் புறப்படத் தயாரான போது, கடவையில் மறுபுறத்தில் இருந்த பெற்றோர், தம்மிடம் வருமாறு சிறுவனை அழைத்துள்ளனர். இதனையடுத்து, குறித்த சிறுவன் பெற்றோரிடம் செல்ல முற்பட்டபோது, தண்டவாளத்தில் தவறி […]

Read More

பாழடைந்து காணப்படும் புரடொப் வைத்தியசாலை

ஆர். நவராஜா நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட புரடொப் வைத்தியசாலை மூடப்பட்டு பாழடைந்த நிலையில் பேய் பங்களாபோல காட்சியளிக்கின்றது. 7 தோட்டப் பிரிவுகளையும் சேர்ந்த 10 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் அன்றாடம் தமது மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த மிகப் பழமையான வைத்தியசாலை. இந்த வைத்தியசாலை கடந்த 13 வருடங்களுக்கு மேலாக இயங்காமல் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இவ்வைத்தியசாலை இரண்டு மாடிகளை கொண்டது. தனி கருங்கற்கலால் கட்டப்பட்ட இந்த வைத்தியசாலையில் வைத்தியர் விடுதிகள், […]

Read More

எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலய கௌரவிப்பு மற்றும் கண்காட்சி விழா

பஸ்யால மே.மா/மினு/எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சயில் வெற்றி பெற்ற மாணவர்களை, ஆசிரியரை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் சித்திரக் கண்காட்சி நிகழ்வு என இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக பாடசாலை வளாகத்திலும் பிரதான மண்டபத்திலும் முறையே 15/12/2021 ஆம் திகதி பாடசாலை அதிபர் ஜனாபா S. A. இஸ்மத் பாத்திமா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீரிகம கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் R.D. மெண்டிஸ் அவர்களும் கௌரவ […]

Read More

HND மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

உயர் தேசிய டிப்ளோமா மாணவர்களினால் நேற்றைய தினம் (17.12.2021) மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு இலங்கை உயர் தேசிய தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டமானது அம்பாறை ஹார்டி உயர் தொழில் நுட்ப கல்லூரியை ஒழிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், SLIATE பட்டப்படிப்பை விரைவுபடுத்தக் கோரியும் சர்வதேச உயர்தர டிப்ளோமா மாணவர் சம்மேளனத்தினால் (IFSF) இலங்கை உயர் தொழில்நுட்ப கற்கைகள் நிறுவகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

Read More

உயர்தர பரீட்சை நேர அட்டவணை வெளியீடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) க்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Read More

பல்கலைக்கழக தரப்படுத்தலில் முதலிடம் பேராதெனியா நான்காமிடம் தென்கிழக்கு

யு. ஐ. கிரீன்மெட்ரிக் தரவரிசையில், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நான்காவதும், உலகளாவிய ரீதியில் 318 வது நிலையையும் பெற்றுள்ளது. இலங்கையில் உள்ள ஏழு (07) பல்கலைக்கழகங்கள் இந்த தரப்படுத்தலில் பங்குபற்றியபோதும், தென்கிழக்கு பல்கலைக்கழகம் 6575 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது. எனினும் இலங்கையில் முதுமையான பல்கலைக்கழங்களான ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தலா ஐந்தாம், ஆறாம், ஏழாம் இடங்களினை பெற்றுள்ளன. தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கடமையேற்று குறுகிய […]

Read More

வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் சம்பள நிலுவைகளை வழங்க உத்தரவு

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பணியில் மீள இணைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கடந்த 2019, மே 24ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதிலிருந்து அவருக்கான சம்பளத்தை வழங்க நடவடிக்கைமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். மூனசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கட்டாய […]

Read More

விடுதலை செய்து கைது செய்யப்பட்ட அஹ்னாப்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் அஹ்னப் ஜஸீம் புத்தளம் மேல்நீதிமன்றத்தினால் நேற்று (15) பிணையில்விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். “நவரசம்” எனும் கவிதைப் புத்தகத்தில் உள்ள “உருவாக்கு” எனும் கவிதை மூலம் தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கவிஞர் அஹ்னப் ஜஸீம் கடந்த வருடம் மே மாதம் 16 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு, தடுத்து […]

Read More

அமைச்சரவை முடிவுகள் – 13.12.2021

01. டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான பல தரப்பு அணுகுமுறைகளை வலுப்படுத்தல் இலங்கையில் தற்போது டெங்கு நோய் பிரதான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உருவாகியுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரைக்கும் 25,910 நோயாளர்களும், 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறு, மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ள டெங்கு நோய்ப் பரவல், பருவப்பெயர்ச்சி மழைகாலத்தில் மேலும் அதிகரிக்கும் போக்குக் காணப்படுவதால், தொற்று நிலைமையைத் தடுப்பதற்கான குறித்த அனைத்துத் தரப்பினரின் பங்குபற்றலுடன் அமைச்சின் ஊடாக ஒன்றிணைந்த தேசிய […]

Read More

டொலர்களை தம் கையிருப்பில் வைத்திருப்பவர்களுக்கு மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த டொலர் அல்லது அந்நிய செலாவாணிகளை மத்திய வங்கி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகளின் ஊடாக அவற்றை இலங்கை ரூபாவுக்கு மாற்றுமாறு கோரப்பட்டுள்ளது. அல்லது ஏதேனும் வங்கியிலுள்ள இலங்கை ரூபா கணக்கில் வைப்பிலிடுமாறு அல்லது உங்களது தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் (PFCA) அல்லது சிறப்பு வைப்புக் கணக்கில் (SDA ) வைப்பிலிடுமாறு ; உங்களது வங்கியூடாக இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடு செய்யுமாறு […]

Read More

அஹ்னாபிற்கு பிணை வழங்க எதிர்ப்பில்லை

நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன்வைக்கப் போவதில்லையென உயர் நீதிமன்றத்துக்கு சட்ட மாஅதிபர் (08.12.2021) அறிவித்தார். அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்டவிரோதமானதெனக் கூறி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு (8) பரிசீலனைக்கு வந்தபோது, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே குறிப்பிட்டார். […]

Read More

நுண்கடன் திட்டங்களினால் இலங்கையில் 200 மேற்பட்ட பெண்கள் தற்கொலை

எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிராமப்புற பெண்களின் உயிரைப் பறிக்கும் நுண்கடன் திட்டம் ஏற்படுத்திய அழிவின் அளவு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வந்த ஐ.நாவின் விசேட தூதுவரால் வெளிப்படுத்தப்பட்டது. “கடனுக்கு அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுவதால் பல பெண்கள் கடனுக்கு இரையாகிறார்கள். இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் 200ற்கும் […]

Read More

லங்கா பிரிமியர் லீக் இன்று ஆரம்பம்

எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது இரண்டாவது தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (05.12.2021) ஆரம்பமாகின்றது. இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற பெரும் கேள்விகளுக்கு அப்பால் போட்டித் தொடர் நடைபெறுவது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. டிசம்பர் 5ம் திகதி தொடக்கம் டிசம்பர் 24ம் திகதிவரை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் முதலாம் கட்ட சுற்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாம் […]

Read More

ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயம்

ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை இன்று (05.12.2021) மேற்கொண்டுள்ளார். இவ் விஜயத்தின் போது இவ்வாறான முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும். நிகழ்வுகளையும் பற்றி தெரிந்து கொண்டதுடன். அவற்றை தேசிய மட்டத்திலான நிகழ்வுகளில் ஒன்றாக கூட்டிணைப்பு செய்ய தான் அரசாங்கத்திற்கு ஆலோசனை முன்மொழிவதாக கலபொடவத்த ஞானசார தேரர் தெரிவித்தார். கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா விற்கு விஜயம் செய்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியின் தலைவர் கலபொடவத்த ஞானசார தேரோ மற்றும் செயலணியினரை […]

Read More

மாபெரும் இரத்ததான நிகழ்வு – முதுந்துவ, இப்பாகமுவ

ஹொகரல்ல பொலிஸ் நிலையமும் இலக்கம் 526 மடிகே முதுன்துவ மக்கள் பாதுகாப்பு கமிட்டியும் இணைந்து முதன்முறையாக மாபெரும் இரத்ததான நிகழ்வை நேற்று 2ம் திகதி திங்கட்கிழமை வெகுசிறப்பாய் நாடாத்திமுடித்தது. இவ் இரத்ததான நிகழ்வுக்கு இன,மத,மொழி பேதமின்றி மூவின ஊர்மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அரசியல் வாதிகள் வருகையளித்து உறுதுணையாய் நின்றது மட்டுமன்றி அனுசரனை வழங்கியமை விஷேட அம்சமாகும். இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரனையை ஜவய மீடியா வழங்கியதுடன் இரத்தம் வழங்கிய நல்உள்ளங்களுக்கு சமூர்த்தியால் சான்றிதழ் வழங்கப்பட்டது மட்டுமன்றி ஏற்பாட்டுக்குழுவால் […]

Read More

அசாத் சாலி 8 மாதங்களுக்கு பின் நிரபராதி என விடுதலை

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று (02) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இத்தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இனங்கள் அல்லது மதங்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையிலும் இதுபோன்ற கருத்துகளை பிரதிவாதி கூறியதாக முறைப்பாட்டாளர்களால் […]

Read More

வெலிகமையில் சிறுமி உயிரிழப்பு – காரணம் என்ன?

வெலிகம, வெவேகெதரவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, அவ்வீட்டிலிருந்த 8 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று (30) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் அறையொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, அதன் கூரை எரிந்து வீழ்ந்துள்ளதோடு, இதன் காரணமாக குறித்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி தீயில் சிக்கி மரணமடைந்துள்ளார். குறித்த வேளையில் தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும், […]

Read More

தடைசெய்யப்பட்ட ஜம் இய்யதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியாவின் மனு விசாரணை செய்ய ஏற்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 11 முஸ்லிம் அமைப்புக்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதையடுத்து, அந்த அமைப்புக்களில் உள்ளடங்கும் ஜம் இய்யதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ்.எம்.) அமைப்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற, பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரேன் புள்ளேயின் வாதத்தை நிராகரித்து, மனுதாரருக்காக வாதங்களை முன்வைத்த […]

Read More