விடுதலை வேண்டும்

உன் விம்பங்கள் விழுந்து பார்வைகள் பறிபோகும் அந்த விழிகளுக்கு விடுதலை வேண்டும் பெண்ணே! மரணத்தை தூண்டும் உன் மௌனங்களுக்கும் விடுதலை வேண்டும் மௌனத்தை தாண்டிய என் மொழிகளுக்கும் விடுதலை வேண்டும் நான் எதிர் நோக்குகின்ற நிமிடங்கள் எல்லாம் நிலையற்றதுதான் உன் நினைவுகளால் அவை உறுதியற்று போகிறதே உன் நினைவுகளுக்கும் விடுதலை வேண்டும் தூக்கத்தை கலைக்கின்ற துன்பங்களோடு தூரளாய் வந்து நனைக்கின்ற அந்த இன்பங்களுக்கும் விடுதலை வேண்டும் உன் எதிரில் சிறைப்பட்டு சிதறுன்டு வாழும் என் காதலுக்கு விடுதலை […]

பொலிஸ் வேலை

கண்ணாடி முன் நின்று நேராக முகம் பார்த்து நீ பொலிஸ் என்று தானாக சிரிந்த அந்த நிமிடங்கள் காணமல் போய் விட்டது காத்திருப்புக்கள் நீடிக்கையிலே காத்திருப்பின் நீடிப்பால் எதிர் பார்ப்பில் ஏக்கங்கள் கூடுகின்றது என் தேசத்திற்காய் என் சுவாசம் தீரும் வரை நான் நேசம் கொண்ட வேலையை என் சுவாசம் போல் சுவாசிக்க காத்திருக்கிறேன் கடிதம் இன்னும் வந்து சேரவில்லை தபாற்காரன் வீடு வருவான் என்று தெருநாய் போல் வீதியோரத்தில் அமர்ந்து பாதையில் பார்வைகளை குவித்துக் கொண்டிருக்க […]

என் ரெயில் பயணம்

மெதுவாக ஒருநாள் நடைபோட்டு பேரூந்தை தவறவிட்டுத் தவிக்கையிலே தள்ளி நின்று தாலாட்டியது தண்டவாள மணியோசை விரைந்து வந்தும் நிரல் தாண்டி என் நிழல் கூட உள்வர முடியவில்லை பொறுமை காத்து பெறுமையாக பாதம் பதித்து ஜன்னலோரம் நானிருக்க நட்ட நடு நிசிக் காற்றும் காட்டு வழிப்பாதையும் கண்களை நடுங்க வைத்தது முதல் பயணமல்லவா முடிவில்லா நெடும் பாதையாய் தோன்றியது விரைவில் வீடு வந்து சேர்ந்திடாதா என்ற ஏக்கத்தால் தலையணை இல்லை என்ற போதும் தலைவாரி விட காற்று […]

காத்திருந்த காகிதம்

கவிதை எழுத காத்திருந்த காகிதங்கள் எல்லாம் கண்ணீர்த் துளிகளால் கரைந்து போன நாட்கள்தான் அதிகம் கன்னியவளுக்கோ கல் மனம் காதல் என்பதோ என் மதமானதால் கரைந்து போனது அவள் சம்மதம் காட்டுமரமென என் பேனா மையும் காய்ந்து போய் வீணாய்ப் போகுதே கட்டழகுக்காரி அவளோ கட்டுமரமாய் மாரி காதலில் தத்தளிக்கும் என்னை கல்யாணம் என்ற கரைகொண்டு சேர்த்து விடுவாளோ கல் மனதுக் காரியாச்சே கல்லரைக்கே அனுப்பி விடுவாளோ என்னை! கன்னம் சுருங்கி அவள் சிரிக்கவே கழுத்துவரை கவிதை […]

ஏமாற்றியது காதல்

ஏமாந்து போனது என் இதயம் ஏமாற்றத் தெரியாத காரணத்தால் எளிதாய் கிடைத்த பரிசு என்று எண்ணியேதான் எறிந்து விட்டதோ உன் இதயம் என் காதலை கோடைகாலம் ஆரம்பமாகிறது என் தலை கோதிய உன் விரல்கள் என்னை தள்ளிவிட்டுச் செல்கையிலே கருமேகங்கள் கண்களை வந்து சூழ்கின்றது வான்மழை தீர்ந்ததால் என் கண்ணீரினை வாடகைக்கு எடுத்துச் செல்லவே வாசணை திரவியமாய் உன் வார்த்தைகளை ஏற்றேன் வாசல் வரை வந்த உன் காதலோ வெறும் வார்த்தைகளில் மட்டும்தான் என்பதை உணராமல் ஏமாந்தது […]

விசமான வினாடிகள்

விண்மீன்கள் கூட தோற்று போகும் விழி மூடிய அவள் உறக்கத்தினை நெருக்கத்தில் ரசித்திட முயன்றால் விதி என்ற சிறைச்சாலை விட்டு என் துணை சென்ற பாதை வந்தேன் வியர்வை சிந்தி விரண்டோடி வந்தும் மறைந்தோடியவளை என் விழி தேடிய போது விசமாய்ப் போனது என் வினாடிகள்! துளி கூட நகராத என் நாட்காலியோ துணையாக எனை அழைக்க நாட்காட்டி பார்த்து ஆட்காட்டி விரலசைத்து எண்ணிய நாட்களில் என்னவள் முகம் காண ஏங்கிய தருணமோ விசமாய்ப் போனது! என் […]

என் தாகங்கள் தீரவில்லையே

தனிமையிலே என் இரவுகள் நகர்கின்ற போதும் உன் நினைவுகளை வாரிவாரி அளித்தும் அந்த இரவின் தாகங்கள் தீரவில்லையே எத்தனையோ தலைப்புகள் கொண்டு என் கவி வரிகள் தொடங்குகின்றது உன்னை என்னியே என் தாள்களும் கவித்துளிகளால் நனைகின்றது இருந்தும் அந்தத் தாள்களின் தாகங்கள் தீரவில்லையே என் விதியோடு சண்டையிட்டு உன் முகம் காண ஓடிவந்தும் என் விழிகளில் தாகங்கள் தீரவில்லையே உன் நினைவோடு வாழும் இந்த மனதிற்கு உனது பெயரை பருக்கிக் கொண்டிருக்கின்றேன் நிமிடக்கணக்கில் இருந்தும் என்னோடு உன் […]

போதையை ஒழிப்போம் புதுயுகம் படைப்போம்

காத்திருந்த காலமெல்லாம் வேர்த்திருந்த கால்கள் கூறும் நேத்திருந்து நேரமில்லை இடைவெளியின்றி துடித்திட இதயம் இளைப்பார இடமிருந்தும் களைப்பார காலமில்லை ஓடாத கால்களோ ஓட்டம் எடுத்தது தேடாத கண்களோ நோட்டம் கொடுத்தது கேட்காத செவிகளோ இன்று பல கேள்விக்கு பெயர் கொடுத்தது மண்மூடும் என மனமறிந்தும் கண்மூட துணிவிருந்தா கள்வன் போல் களவாடுகிறாய் உன் உயிரை நீயே புத்தகப் பைக்குள் பல பேர்களில் போதைப்பொருட்கள் பாதைகளை மறைக்கும் எத்தனையோ போத்தல்கள் பார்த்துத்தானே கால் வைக்கிறோம் வீரம் விளைந்த இம்மண்ணில் […]

பெண்மையை போற்றுவோம்

அன்பான வரிகளைக் கொண்டு மென்மையாக பெண்மையை போற்றுவோம் உதிரம் திறந்து பெற்றெடுத்த பிள்ளை உலகம் அறிந்ததில் தவறில்லை உண்மையில் உயிரினை இருமுறை துறப்பதே பெண்மை இதுதான் உலகம் மறைத்த உண்மை கண் திறந்து பார்ப்பதை விட உள்ளம் திறந்து பார் மனிதா பெண்மை என்ற ஒன்றை பெருமையாக வைக்காத உலகில் காமம் கொண்டே கண்பார்க்கின்றதே காரணம் என்ன கண்ணியம் என்ற கடமை தவறியதுதான் சிலர் செய்யும் சில்லரை வேலைகளுக்கு பல பெண்கள் பாலியல் பலாத்காரம் தேவை தீராத […]

Open chat
Need Help